காத்தான்குடி கடற்கரை பிரதேசத்தில் கரையொதுங்கியுள்ள பாரிய மூங்கில் படகு
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரை பிரதேசத்தில் இன்று (31) வெள்ளிக்கிழமை காலை சுமார் 30 அடிக்கு மேல் நீளமான பாரிய மூங்கில் படகொன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இம்மூங்கில் படகை கரையில் எடுப்பதற்கான நடவடிக்கையில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட், சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை மற்றும் மீனவர்கள் போன்றோர் ஈடுபட்டுள்ளனர். குறித்த பாரிய மூங்கில் படகு விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கரையொதுங்கிய இப்படகில் மனிதர்கள் எவரும் இருக்கவில்லை எனவும் இப்படகு கடற்றொழில் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம் இப்படகு கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு பாரப்படுத்தப்பட்டு பின்னர் காத்தான்குடி நகர சபை அதனை எங்களுக்கு கையளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்....