'திதுலன கல்முனை' அபிவிருத்தி வேலைத்திட்டம் 2014ம் ஆண்டு முதல் 'திதுலன திகாமடுல்ல' என விஸ்தரிக்கப்படும்

ஹரீஸ் எம்.பி


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம் .ஹரீஸினால் கல்முனைத் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற 'திதுலன கல்முனை' ஒளிரும் கல்முனை அபிவிருத்தி வேலைத் திட்டம் 2014ம் ஆண்டு முதல் 'திதுலன திகாமடுல்ல' ஒளிரும் திகாமடுல்ல என விஸ்தரிக்கப்படவுள்ளது.
இவ்வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலும், ஒளிரும் திகாமடுல்ல பெயர் நாமத்தை உத்தியோகபூர்வமாக திரை நீக்கம் செய்யும் நிகழ்வும் ஒலுவில் கிறீன்விலா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில்,



 
2012ம் ஆண்டு முதல் என்னால் முடிந்தளவு பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருக்pன்றேன். கடந்த வருடம் திதுலன கல்முனை எனும் திட்டத்தின் கீழ் கல்முனைத் தொகுதியில் விளையாட்டு மைதானம் புனரமைப்பு, குப்பைகள், கழிவுப் பொருட்கள் மீழ் சுழற்சி தொழிற்சாலை அமைத்தல். சேதனப்பசளை உற்பத்தி, பாதை அமைப்பு, பள்ளிவாசல் நிர்மாண வேலைகள், வைத்தியசாலை அபிவிருத்தி, வீச் பாக், பாடசாலை அபிவிருத்தி என குறிப்பிதக்க பல அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகின்றேன்.
நான் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கல்முனைத் தொகுதிக்கு அப்பால் எனது அபிவிருத்தி வேலைத்திடங்களை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. அந்த வகையில் பொருளாதார அபிவிருததி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் பிரதியமைச்சர் எம்.எல்ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரின் உதவிகளைப் பெற்று அம்பாறை மாவட்ட பிரதேசங்களில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் எச்எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்;, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உதவித்தவிசாளர்கள் பிரதேச ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்