கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைத் தீர்மானங்கள்
கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டம் சென்ற 22.04.2013 ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அவர்களின் தலமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிழக்கு மாகாண அமைச்சரவையின் பேச்சாளரும் , வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம் . எஸ் . உதுமாலெப்பை அவர்கள் பத்திரிகையாளர் மகாநாட்டில் வெளியிட்டார் . அத்தீர்மானங்கள் பின்வருமாறு . 01. அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் தொடர்ச்சியாக நிலவிவரும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புதல் . அக்கரைப்பற்று வலயத்திற்குட்பட்ட பொத்துவில் பிரதேச கல்விக் காரியாலய பாடசாலைகளில் 97 ஆசிரிய வெற்றிடங்களும் ;, அட்டாளைச்சேனை பிரதேச கல்விக் காரியாலய பாடசாலைகளில் 31 ஆசிரிய வெற்றிடங்களும...