இலங்கையிலுள்ள 31 இலட்சம் நாய்களில் 60 வீதமானவை கட்டாக்காலிகள்


இலங்கையிலுள்ள 31 இலட்சம் நாய்களுள் 60 வீதமானவை கட்டாக்காலி நாய்களென தகவல் வெளியாகியுள்ளதாக கால்நடை வைத்தியப் பணிப்பாளர் டொக்டர் எம். ஹரிச்சத்திர தெரிவித்தார்.
இலங்கையில் 31 இலட்சம் நாய்கள் இருந்த போதும் 12 இலட்சம் நாய்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்படுகிறது. 19 இலட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை.
நாய்களுக்கான தடுப்பூசிக்கு 100 ரூபா நிதியை அரசு செலவிடுகிறது. கட்டாக்காலி நாய்களின் தடுப்பூசிக்கு 30,000 ரூபா வரை செலவாகிறது.
நாய் கடித்து மூன்று மணித்தியாலங்களுள் இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும். நாட்டில் இருக்கும் எட்டுப் பேருள் ஒருவருக்கு ஒரு நாய் என்ற வீதத்தில் நாய்கள் உள்ளன. ஆனாலும் வருடத்துக்கு ஒரு முறையேனும் தடுப்பூசி பெற்றுக் கொடுக்க பலர் ஆர்வம் செலுத்துவதில்லை.
விசர் நாய்கடி ஒரு ஆட்கொல்லி நோயாகும். வருடாந்தம் எட்டுப் பேர் இந்த நோயினால் மரணிக்கின்றனர். மூச்சு விட கஷ்டம், கண்சிவப்பாகுதல், சளி வருதல் போன்றவை இந்நோயின் அறிகுறிகள் என்றும் அவர் தெரிவித்தார்

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது