சாரணியம் தலைமைத்துவப் பண்புகளை மட்டுமல்ல நல்ல ஒழுக்க பண்புகளையும் கற்றுத் தருகின்றது.
பல பாடசாலைகளில் இன்று மாணவர்களிடையே ஒழுக்கக் கட்டுப்பாடு அருகி வருவதை அவதானிக்க முடிகின்றது. மாணவர்கள் பாடசாலைகளில் புறக்கிருத்திய செயற்பாடுகளில் பங்கு பெற ஆர்வம் செலுத்துவதில்லை. ஆசிரியர்களும் பெற்றார்களும் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமாகும் என சிரேஸ்ட விரிவுரையாளரரும் கல்முனை மாவட்ட கௌரவ மாவட்ட ஆணையாளருமான எம்.ஐ.எம்.முஸ்தபா தெரிவித்தார்.
கல்முனை வை.எம்.சீ.ஏ சாரணர்களின் ஒரு நாள் பாசறை நிகழ்வு அண்மையில் நடைபெற்றது . கல்முனை வை.எம்.சீ.ஏ செயலாளர் ஏ.பி.பத்லோமியஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு முஸ்தபா அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
எதிர் காலத்தில் நற்பிரஜைகளை உடல்ரூபவ்உளரூபவ்சமூக அபிவிருத்தி கொண்டவர்களாக உருவாக்குவது அனைவரது கடமையாகும். சாரணியம் தலைமைத்துவப் பண்புகளை மட்டுமல்ல நல்ல ஒழுக்க பண்புகளையும் கற்றுத் தருகின்றது. இன மத மொழிகளுக்கப்பால் பணியாற்றும் இவ்வமைப்பில் இணைந்து கொள்வதன் மூலம் சிறந்த பயன்களை பெற முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
Comments
Post a Comment