Posts

மாவடிப் பள்ளி கிராமத்தில் அச்சுறுத்தும் காட்டு யானைகள்

Image
காரை தீவுக்கும் சாம்மாந்துறைக்கும்  இடைப்பட்ட மாவடிப் பள்ளி கிராம மக்கள் காட்டு யானைகளின் தொல்லைக்கு முகம் கொடுத்துள்ளனர் . கடந்த சில நாட்களாக 03 யானைகள் தினமும் அச்சுறுத்தலைக்  கொடுத்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமன்றி பிரதான வீதியில் பயணிக்கும் பயணிகளையும் இரவு வேளையில்  அச்சுறுத்துகின்றது. இதனை  அரச அதிகாரிகளும்  அரசியல் வாதிகளும் கவனத்தில் எடுத்ததாக தெரியவில்லை . தேர்தல் காலத்தில் பல வாக்குருத்க்ஹிகளை வழங்கும் அரசியல் வாதிகள் இந்த விடயத்தில் மௌனிகளாக இருப்பது கவலை அளிக்கின்றது .  

தமிழ் முஸ்லிம் நல்லுறவுக்கு பாலமாகத் திகழ்ந்தவர் மர்ஹும் எச்.எல்.ஜமால்தீன் SSP

Image
2009.04.05 ஆம் திகதி அகால மரணமடைந்த மர்ஹும் எச்.எல். ஜமால்தீன் SSP அவர்களின் எழாவது ஆண்டு (2016.04.05) நிறைவையொட்டி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. - மருதமுனை பி.எம்.எம்.ஏ. காதர் -  கிழக்கு மாகாண கல்முனை நகர மருதமுனை மண்ணின் வரலாற்றில் என்றும் போற்றப்படுபவர் டாக்டர் எச்.எல்.ஜமால்தீன் எஸ்.எஸ்.பி 2009.04.05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலைக் கருக்கலில் மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு அருகில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு அகால மரணமடைந்தார். மக்கள் சேவையையும், சமயத் தொண்டையும் தனது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் எச்.எல்.ஜமால்தீன். அன்பு, பண்பு, பாசம் இவைகளினூடே புன்சிரிப்பு, மென்மையான வார்த்தை இவை அனைத்தும் மக்களைக் கவர்ந்தவை, சிறந்த ஆளுமைப் பண்பைக் கொண்ட ஒரு தலைவனாக தென்கிழக்கு மக்கள் இவரை வரவேற்றனர்;;. மருதமுனையைச் சேர்ந்த ஹாமீதுலெவ்வை – சீனத்தும்மா தம்பதிகளின் புதல்வாரன எச்.எல். ஜமால்தீன் தனது ஆரம்பக்கல்வியை (1-5) மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்திலும் பின்னர் 06-09ம் வகுப்புவரை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் கற்றார். க.பொ.த. சாத

உயர் தரம் கற்க தகமை பெற்ற மாணவர்களின் வலய மட்ட தரப் படுத்தலில் கல்முனை கல்வி வலயம் தேசியரீதியில் 17வது இடம் ! கிழக்கில் 03வது இடம் !!

Image
கடந்த ஆண்டு (2015) க.பொ .த  சா/த  பரீட்சையில்  உயர்தரம் கற்க தகமை பெற்ற மாணவர்களின் வலய மட்ட தரப் படுத்தலில்   தேசிய மட்டத்தில் கல்முனை கல்வி வலயம் 17வது இடத்திலும் கிழக்கு மாகாணத்தில் 3வது  நிலையிலும் உள்ளது  என கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார் . கடந்த 2014 ஆம் ஆண்டு 18வது நிலையில் இருந்த கல்முனை கல்வி வலயம் 17வது  நிலையை அடைவதற்கு  பங்களிப்பு செய்த கல்முனை வலயத்தில் உள்ள   பிரதிக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் , உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் ,ஆசிரிய ஆலோசகர்கள் உட்பட அதிபர்கள் ஆசிரியர்களுக்கு  வலயக் கல்விப் பணிப்பாளர் அப்துல் ஜலீல் நன்றியை  தெரிவித்தார் . குறிப்பாக  கிழக்கு மாகாணத்தில் 3வது நிலையை அடைவதற்கு காரணகர்த்தாவாகவும்,வழிகாட்டியாகவும் செயற்ப்பட்ட கிழக்குமாகாண  கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம் பாராட்டப் படவேண்டிய ஒருவர் என  வலயக் கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார் . 

கல்முனை உவெஸ்லி சாதனையாளர்களின் விருந்தும் அவர்களுக்கு வழங்கப் பட்ட பரிசும்

Image
கல்முனை வெஸ்லி கல்லூரியில் சாதாரண தரப் பரீட்சையில் திறமை காட்டி பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் சமீபத்தில் பாடசாலையில் மதிய விருந்துபசாரம் ஒன்றை வழங்கினார்கள் . அதிபர் வீ.பிரபாகரன், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் ,பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர். சாதனை மாணவர்களுக்கு  பரிசுகளும் வழங்கி வைக்கப் பட்டன