உயர் தரம் கற்க தகமை பெற்ற மாணவர்களின் வலய மட்ட தரப் படுத்தலில் கல்முனை கல்வி வலயம் தேசியரீதியில் 17வது இடம் ! கிழக்கில் 03வது இடம் !!
கடந்த ஆண்டு (2015) க.பொ .த சா/த பரீட்சையில் உயர்தரம் கற்க தகமை பெற்ற மாணவர்களின் வலய மட்ட தரப் படுத்தலில் தேசிய மட்டத்தில் கல்முனை கல்வி வலயம் 17வது இடத்திலும் கிழக்கு மாகாணத்தில் 3வது நிலையிலும் உள்ளது என கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார் .
கடந்த 2014 ஆம் ஆண்டு 18வது நிலையில் இருந்த கல்முனை கல்வி வலயம் 17வது நிலையை அடைவதற்கு பங்களிப்பு செய்த கல்முனை வலயத்தில் உள்ள பிரதிக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் , உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் ,ஆசிரிய ஆலோசகர்கள் உட்பட அதிபர்கள் ஆசிரியர்களுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அப்துல் ஜலீல் நன்றியை தெரிவித்தார் .
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் 3வது நிலையை அடைவதற்கு காரணகர்த்தாவாகவும்,வழிகாட்டியாகவும் செயற்ப்பட்ட கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம் பாராட்டப் படவேண்டிய ஒருவர் என வலயக் கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார் .
Comments
Post a Comment