நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில் முதல் தடவையாக கல்விப் பொது தராதர பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு சமீபத்தில் நடை பெற்றது. கல்லூரி அதிபர் வை.எல்.பஷீர் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலையக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கலந்து கொண்டார். கெளரவ அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் சீ .எம்.முபீத் ,கைத்தொழில் வணிக அமைச்சரின் இணைப்பாளரும் அல் -கரீம் பவுண்டேசன் தலைவருமான சீ .எம்.ஹலீம் ,பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான எஸ்.எம்.எம்.எஸ்.உமர்மௌலானா ,ஏ.எல்.எம்.முக்தார் ,எஸ்.எல்.ஏ.ரஹீம், கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.எம்.சக்காப் ஆகியோரும் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலய அதிபர் எம்.எல்.ஏ.கையூம்,பிரதி அதிபர் வீ.எம்.ஸம்ஸம் , உதவி அதிபர்களாக மௌலவி ஏ.சாலிதீன்,திருமதி ஏ.முனாசீர் ,கல்முனை அல் -ஹாமியா அரபுக் கல்லூரி அதிபரும் நற்பிட்டிமுனை உலமா சபை தலைவருமான மௌலவி யு.எல்.ஏ.கபூர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் மற்றும் ஊர் பிரமுகர்கள் பலர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து மாணவர்க...