Posts

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் பழைய மாணவர் சங்க புதிய நிருவாக தெரிவு

Image
கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் பழைய மாணவர் சங்க வருடாந்தப் பொதுக் கூட்டமும் புதிய நிருவாக தெரிவும்  கல்லூரி அதிபர் வீ.பிரபாகரன் தலைமையில் இன்று 20.03.2016 ஞாயிற்றுக் கிழமை நல்லதம்பி மண்டபத்தில் இடம் பெற்றது. நிருவாகத்தெரிவில்  புதிய  நிருவாகிகளாக  தலைவர் - வீ.பிரபாகரன்  (அதிபர் ) செயலாளர் - என்.ரமேஸ்  (கல்முனை வடக்கு வைத்தியசாலை வைத்தியர்)  பொருளாளர் - ரீ.சர்வானந்தன் ( கல்முனை மாநகரசபை பொறியியலார்)  உபதலைவர் -கே.ஜெகதீஸ்வரி (கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் ) உபசெயலாளர் - ஏ.எம்.றியாஸ் (கல்முனை மாநகர சபை உறுப்பினர்) நிருவாக சபை உறுப்பினர்கள்  எஸ்.நாகேந்திரன் யு.எல்.ஏ.நஸார்  கே.சுந்தர லிங்கம்  எஸ்.உதயகுமார்  எஸ்.மகாலெட்சுமி  எம்.நிலக்சினி 

முஸ்லிம் காங்கிரஸின் மாநாட்டை கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி பகிஷ்கரித்தார்

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது தேசிய மாநாடு நேற்று  சனிக்கிழமை காலை அம்பாறை மாவட்டத்திலுள்ள பாலமுனை பொது மைதானத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன், அமைச்சர்களான சரத் பொன்சேகா, தயா கமகே, மனோ கணேசன் உட்பட அரசியல் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் பலரும் அதிதிகளாக கலந்து கொண்ட இம்மாநாட்டில், அக்கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி பங்குபற்றாமல் பகிஷ்கரிப்பு செய்திருந்தார். ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில்  கட்சியுடன் முரண்பட்டுள்ள அனைவரும் இதற்கு வெளியே உள்ள குள்ளநரி குறுநில மன்னர்களின் அரசியலுக்கு சோரம் போகாமல், இங்கு வந்து நாடகமாடுவதற்கு மேடையில் அமராமல் கட்சியைப் பாதுகாப்பதற்கு முன் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு, நேற்று பாலமுனையில் நடைபெற்ற மு.காவின் 19வது தேசிய நாட்டில் சிறப்;புரையாற்றிய நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த நாட்டிற்குப் பின்னர் கட்சி...

முஸ்லிம் மீடியா போரத்தின் 19ஆவது வருடாந்த மாநாடு

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 19ஆவது வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜுன் 21ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.20 மணிக்கு தேசிய நூதனசாலையின் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது. மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் அப்துல் ஹமீட் அப்துல் பதாஹ் கே. அல் முல்லாஹ் கலந்துகொள்ளவுள்ளார். இதன்போது தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் பீடாதிபதி வி.டி.தமிழ்மாறன் சிறப்புரையாற்றவுள்ளார்.ஒரு அமர்வாக இடம்பெறும் இந்த நிகழ்வின் இறுதியில் அடுத்த வருடத்திற்கான புதிய நிர்வாகிகள் தெரிவுசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

கல்முனையில் இடம் பெற்ற கிறிஸ்தவ மக்களின் குருத்தோலை திரு விழா

Image
குருத்து ஞாயிறு  ( Palm Sunday ) அல்லது  குருத்தோலைத் திருவிழா  என்பது  இயேசு கிறித்து   எருசலேம் நகருக்குள்   வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த  நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கிறித்தவர்கள் ஆண்டுதோறும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இந்த திருவிழா இன்று கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்திலும் இடம் பெற்றது . அருட் தந்தை லியோ அன்டனி தலைமையில் இடம் பெற்ற இவ்விழாவில் கிறிஸ்தவ மக்கள் பலர் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடு பட்டனர். 

நற்பிட்டிமுனை ஹிஜா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா விழாவும் சாதனையாளர் கௌரவிப்பும்

Image
ஹிஜா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் சாதனையாளர் கௌரவிப்பு  வைபவமும் நேற்று நற்பிட்டிமுனை அல் - அக்ஸா  மகாவித்தியாலய ஆராதனை மண்டபத்தில் நடை பெற்றது. கல்லூரின் பணிப்பாளர் டபிள்யு.ஐயூப்கான்  தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  நற்பிட்டிமுனை அல் -கரீம்  நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவரும், கைத்தொழில் வாணிகத்துறை அமைச்சரின் இணைப்பு உத்தியோகத்தரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி இளைஞர் அமைப்பாளருமான சாமஸ்ரீ சத்தியஜோதி    கரீம் முகம்மது  ஹலீம்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைத்தார் . ஆசிரியர்களான வை.ஏ.கே.தாசீம்,ஐ.எம்.சூபி உட்பட பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர் . பிரதம அதிதியாக கலந்து கொண்ட  ஹலீம் அங்கு உரையாற்றும் போது.நற்பிட்டிமுனை கிராமத்தின் கல்வி வளர்ச்சி பின்னோக்கி செல்கின்றது இதற்கு பல காரணங்கள்  கூறப் படுகிறது. எது எவ்வாறு இருந்த போதிலும் நற்பிட்டிமுனை கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் சகல மட்டத்தில் உள்ளவர்களும் அக்கறை காட்டி...

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம்

Image
கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் 2016.03.20 அன்று காலை 9 மணிக்கு உவெஸ்லி உயர்தரப் பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நீண்ட காலத்திற்குப் பின்பு நடைபெறவுள்ள இக் கூட்டத்தில் புதிய நிர்வாகத் தெரிவும் நடைபெறவுள்ளமையால் அனைத்துப் பழைய மாணவர்களையும் பங்கு பற்றுமாறு பாடசாலை அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜப்பான் நாட்டு பெண்ணுக்கு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் கௌரவிப்பு

Image
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக விசேட தேவை கல்விப் பிரிவில் தொண்டராக பணியாற்றிய  ஜப்பான் நாட்டை சேர்ந்த சவொரி  இஸானோ  இன்று தனது பணிகளை நிறைவு செய்து நாடு திரும்பினார் . ஜெய்க்கா  திட்டத்தில் தொண்டராக பணி  புரிந்த இவருக்கு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் இன்று பிரியாவிடை வைபவம் இடம் பெற்றது. கல்முனை வலயக் கல்வி அலுவலக நலன் புரிச்சங்கத்தின் தலைவர் யு.எம்.இஸ்ஹாக் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ,பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான  ஏ.எல்.எம்.முக்தார் ,வீ.மயில்வாகனம்,பீ.எம்.வை.அரபாத்  உட்பட உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் ,கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் , நிருவாக உத்தியோகத்தர் ஜி.பரம்சோதி உட்பட கல்முனை வலயக் கல்வி அலுவலக  கணக்காளர் ரிஸ்வி யஹ்சர் .அம்பாறை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் ஆகியோரும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் கலந்து கொண்ட  அதிபர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ,அதிகாரிகளால் ...