ஜப்பான் நாட்டு பெண்ணுக்கு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் கௌரவிப்பு
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக விசேட தேவை கல்விப் பிரிவில் தொண்டராக பணியாற்றிய ஜப்பான் நாட்டை சேர்ந்த சவொரி இஸானோ இன்று தனது பணிகளை நிறைவு செய்து நாடு திரும்பினார் .
ஜெய்க்கா திட்டத்தில் தொண்டராக பணி புரிந்த இவருக்கு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் இன்று பிரியாவிடை வைபவம் இடம் பெற்றது.
கல்முனை வலயக் கல்வி அலுவலக நலன் புரிச்சங்கத்தின் தலைவர் யு.எம்.இஸ்ஹாக் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ,பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான ஏ.எல்.எம்.முக்தார் ,வீ.மயில்வாகனம்,பீ.எம்.வை.அரபாத் உட்பட உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் ,கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் , நிருவாக உத்தியோகத்தர் ஜி.பரம்சோதி உட்பட கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் ரிஸ்வி யஹ்சர் .அம்பாறை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் ஆகியோரும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments
Post a Comment