Posts

உதவாக்கரைகளென சமூகத்தால் ஒதுக்கப்படும் மாற்றுத்திறனாளிகளை சமூக அந்தஸ்த்துடன் வாழ ஹியூமன் லின்க் வழிகாட்டுகின்றது.

Image
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சார். (பி.எம்.எம்.ஏ.காதர்) சமூகத்தால் ஒதுக்கப்பட்டு உதவாக்கரைகளென நாமம் சூட்டப்பட்டு வாழந்துவருகின்ற மாற்றுத்திறனாளிகளை சமூக அந்தஸ்த்துடன் சமமாக வாழக்கூடிய நிலைக்கு அவர்களது திறன்களை விருத்தி செய்து தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கு வழிகாட்டி வருகின்ற ஹியூமன் லின்ங் நிறுவனத்தின் சேவைகள் அளவீடு செய்ய முடியாத பணியாகும் என கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சார் தெரிவித்தார். மருதமுனை ஹியூமன் லின்க் விஷேட தேவையுடையோருக்கான வளப்படுதல் நிலையத்தின் 10 வருட நிறைவு  நினைவுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் ஹியூமன் லின்க் பணிப்பாளர் ஏ.எல்.கமறுத்தீன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்; இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:-உலக சனத்தொகையில்15வீதத்திலும் இலங்கையில் 10 வீதத்திலும் கிழக்கு  மாகாணத்தில் 10 வீதத்திலும் விஷேட தேவையுடையவர்கள் வாழ்ந்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவ்வாறனவர்களை வளப்படு

கீதா குமாரசிங்க எம்.பி. பதவியை இழந்தார்; பியசேன கமகேவிற்கு வாய்ப்பு

Image
இரட்டை பிரஜாவுரிமை காரணமாக காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை செல்லுபடியற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   இன்று (03) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான விஜித மலல்கொட மற்றும் நீதிபதி பிரீத்திப பத்மன் சுரேசன ஆகியோரின் தலைமையின் கீழ் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் முடிவை அடுத்து நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.    அவரால், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என, கடந்த முறை இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின்போது சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.   ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற கீதா குமாரசிங்க சுவிட்சர்லாந்தின் குடியுரிமையைக் கொண்டுள்ளதால், இலங்கையின் அரசியலமைப்பின் 19 ஆவது சீர்திருத்தத்திற்கு அமைய, இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள ஒருவரால், பாராளுமன்ற உறுப்புரிமை பெற முடியாது எனத் தெரிவித்து, அவரது பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்ய வேண்டும் என, காலி மாவட்டத்தைச் சேர்ந்த ஐவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையிலேயே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.   இதேவேள

அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.எஸ். அபுல் கலீஸ் சீனா பயணமானார்

Image
PMMA.Cader அம்பாறை மாவட்ட   விவசாயத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரான மருதமுனையைச் சேர்ந்த எம் . எஸ் . அபுல் கலீஸ் வியாழக்கிழமை (27.04.2017) சீனா பயணமானார் . விவசாய தொழினுட்பங்கள் தொடர்பாக சீனாவில் நடைபெறவுள்ள இரண்டு மாத கால வதிவிட பயிற்சிநெறி ஒன்றில் பங்குபற்றுவதற்காக   எம் . எஸ் . அபுல் கலீஸ் சீனா சென்றுள்ளார். மருதமுனையின் முதல் விவசாய விஞ்ஞான இளமாணிப் (BSc) பட்டதாரியாக உள்ள இவர் , இலங்கை விவசாய சேவைகள் (SLAgS) மற்றும் இலங்கை விஞ்ஞான சேவைகள் (SLScS) போன்ற பரீட்சைகளில் தோற்றி சித்தி பெற்றுள்ளதோடு , கடந்த 2013 ஆம் ஆண்டில் தனது முதுமாணி (MSc)   கற்கை நெறியினை அபிவிருத்தியும் விரிவாக்கலும் எனும் துறையில் நிறைவுசெய்தவராவார் . அத்தோடு , 1996 ஆம் ஆண்டில் இந்தோனேசிய நாட்டுக்கும் 2003 ஆம் ஆண்டில் சீன நாட்டுக்கும் 2008 ஆம் ஆண்டில் மலேசிய நாட்டுக்கும் , இறுதியாக கடந்த 2014 ஆம் ஆண்டில்   கொரிய நாட்டுக்கும் இது போன்ற பயிற்சி நெறிகளுக்காக இவர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது .

நிந்தவூர் கல்விச்சாதனையாளர்களுக்கு மண்ணுக்கு மரியாதை கெளரவம்

Image
நிந்தவூரில் சாதாரண பரீட்சையில்  சாதனை படைத்த 31 மாணவர்கள்  சாதனை விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட்னர் .கடந்த வெள்ளிக்கிழமை நிந்தவூர் அல் -மஸ்கர்  பெண்கள் உயர்தர பாடசாலையில்  இவ்வைபவம் இடம் பெற்றது. நிந்தவூர் கோட்டக் கல்விப்  பணிப்பாளர் திருமதி பீ.ஜிஹானா அலிப் தலைமையில் இடம் பெற்ற  நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப்  பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் பிரதம அதிதியாகவும் , கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கெளரவ அதிதியாகவும் , ஓய்வு பெற்ற முன்னாள் நிந்தவூர் கோட்டக்  கல்விப்  பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம் விசேட அதிதியாகவும் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஹீம் உட்பட உதவிக்கல்விப்  பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ,அதிபர்கள் பெற்றோர்கள் ,நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர் . இவ்வைபவத்தில்  கடந்த வருடம் நிந்தவூர் கோட்டத்தில்  சாதாரண பரீட்சையில்  திறமை காட்டி சாதனை படைத்த மாணவர்கள் 31 மாணவ மாணவிகள் பாராட்டி கெளரவிக்கப் பட்டனர் .

சுமந்திரன், நிசாம் காரியப்பர் உள்ளிட்ட 25 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமனம்

Image
சிரேஷ்ட சட்டத்தரணிகள் 25 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.   இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 33(2)(உ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்துக்கமைய சட்டத்தரணி தொழில்வாண்மையில் சிறப்பு பெற்றவர்கள் மற்றும் தொழில்வாண்மை செயற்பாடுகளில் நேர்மையாகவும், உன்னதமானவர்களுமான சட்டத்தரணிகள் ஜனாதிபதியால் இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.   அதற்கமைய  1. எம். ஏ. சுமந்திரன்   2. எம். நிசாம் காரியப்பர்   3. ஏ. எல். எம். ஹிதாயாத்துல்லா   4. விவேகாநந்தன் புவிதரன்   5. தயா பெல்பொல   6. ஆரிய பீ. ரெக்கவ   7. அனுர பண்டார மெத்தேகொட   8. நிஸ்ஸங்க நாணயக்கார   9. டபிள்யு. கே. அனுஜ கௌசிக்க பிரேமரத்ன   10. சமந்த ரத்வத்தே   11. விஜேரத்ன தர்மசேன   12. உபாலி சேனாரத்ன   13. பத்ம பண்டார   14. எஸ்.கே. மார்க் பீரிஸ்   15. கருணாரத்ன ஹேரத்   16. மஹேந்ர சுவந்தரத்ன   17. ஏ.பீ.சீ.எம். ஜயசேகர   18. மொஹான் வீரக்கோன்   19. பீ.ஆர்.எஸ்.பீ. சமரநாயக்க   20.

கிழக்கு மாகாண சபை வளாகம் வேலையற்ற பட்டதாரிகளால் முற்றுகை இடப்பட்டுள்ளது

Image
பிந்திய செய்தி  தங்களது பட்டங்களுக்கு ஏற்ற தொழில்வாய்ப்பை வழங்குமாறு கோரி, கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள், கிழக்கு மாகாண சபை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (25) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, கிழக்கு மாகாண சபையின் மூன்று நுழைவாயில்களையம் மூடியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன்போது, கிழக்கு மாகாணசபையில் மாதாந்த அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக, நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடையுத்தரவை, திருகோணமலை தலைமையக பதில் பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல, பௌத்த துறவி ஒருவரிடம் வழங்கியபோது, அவர் அதனை கிழித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோரில் ஒரு சிலரை அழைத்த கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பட்டதாரிகள் வேலையற்றவர்களாக காணப்படுவதாக, மத்திய அரசாங்கத்திடம் எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். அதற்கான முடிவுகள் வரும்வரை எம்மால் எதனையும் செய்ய முடியாது என முதலமைச்சர் சுட்டிக்காட்டியதை அடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிரு

எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்க எந்த முடிவும் கிடையாது

Image
திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையாக வழங்க அரசாங்கம் எத்தகைய முடிவும் எடுக்கவில்லை எனவும் அது தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்படவில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.சுதந்திரக் கட்சி மத்திய குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,இது தொடர்பான சுதந்திரக் கட்சி கொள்கையில் எந்த மாற்றமும் கிடையாது என ஜனாதிபதி இங்கு அறிவித்ததாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். சுதந்திரக் கட்சி மத்திய குழுக் கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இங்கு பெற்றோலிய தொழிற் சங்கங்களின் போராட்டம் குறித்து ஆராயப்பட்டது.இதன் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, நடக்காத ஒன்றைப்பற்றி கற்பனையாக சிந்தித்து தொழிற்சங்கங்கள் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்திருந்தாலும் சுதந்திரக் கட்சியின் கொள்கைகளில் மாற்றம் இல்லை.அரச வளங்களை விற்பதற்கு சுதந்திரக் கட்சி எதிரானது எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் நேற்று நடைபெற்ற சுதந்திரக் கட்சி ஊடக மாநாட்டில் பேசிய

மாணவர்களின் மனங்களை அறிந்து மதிநுட்பத்துடன் மனநிறைவோடு கற்பித்தவர் எங்கள் ஆசான் தாஹிர் சேர்

Image
நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப்  (பி.எம்.எம்.ஏ.காதர்) கற்பித்தலின் நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் கற்பித்து பல மாணவர்களை உருவாக்கிய பெருமை நல்லாசான் ஓய்வு  பெற்ற அதிபர் ஏ.எல்.எம்.தாஹிர் அவர்களையே சாரும் என ஏ.எல்.எம்.தாஹீர் அதிபரின் மாணவரும் மன்னார்  மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கான மேல் நீதிமன்ற நீதிபதியுமான தாவூத் லெப்பை அப்துல் மனாப் தெரிவித்தார். ஓய்வு  பெற்ற அதிபர் ஏ.எல்.எம்.தாஹிர் அவர்களின் சேவையைப் பாராட்டி அவரிடம்  கற்ற மாணவர்கள் அமைப்பான மருதமுனை ஷம்ஸ் உயர்தர வட்டம்  ஏற்பாடு செய்த மகிழ்ச்சிப் பிரவாக விழா ஞாயிற்றுக்கிழமை (16-04-2017)மருதமுனை அல்-மதீனா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது இங்கு உரையாற்றி போதே நீதிபதி இவ்வாறு தெரிவித்தார்.  ஓய்வு  பெற்ற ஏ.எல்.எம்.தாஹிர் அதிபரின் மாணவரான கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏ.எல்.எம்.தாஹிர் அதிபரிடம் உயர்தரம் கற்ற மாணவர்களும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இங்கு நீதிபதி தாவூத் லெப்பை அப்து

கல்முனை பிரதேசத்தில் இன்று எரிபொருளுக்கு ஏற்பட்ட நெரிசல்

Image

மீத்தொட்டமுல்ல; ஜப்பான் நிபுணர் குழு அறிக்கை ஜனாதிபதியிடம்

Image
குறுகிய கால நடவடிக்கைகள்: - அடித்தளத்தை பலப்படுத்தி பொலித்தீனால் மூடுதல் - மழை காலத்துக்கு முன்னதாக குப்பை மேட்டின் அமைப்பை மலை போன்ற  (ஈர்ப்பு சக்திக்கமைய)  வடிவத்திற்கு மாற்றுதல்   நீண்ட கால நடவடிக்கைகள்: -  குப்பைமேட்டின் அளவை படிப்படியாக குறைத்தல்  -  மீள்சுழற்சி, மின்சாரம் மற்றும் இயற்கை உர உற்பத்தி செய்தல்   மீத்தொட்டமுல்ல குப்பைமேடு அனர்த்தத்துக்கு காரணமான விடயங்கள் மற்றும் இனிவரும் காலங்களில் அவ்வாறான சம்பவம் ஏற்படுவதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விதந்துரைப்பதற்காக வருகை தந்த ஜப்பானிய நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று (24) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டது.    பிரதிநிதிகள் குழுவின் தலைவரான Mitsutake Numahata வினால் குறித்த அறிக்கை, ஜனாதிபதியிடம் வழங்கி தமது விதந்துரைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.   குறித்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கான குறுங்கால நடவடிக்கையாக குப்பைமேட்டின் அடித்தளத்தை பலப்படுத்தி பொலித்தீனால் மூடுதல் மற்றும் மழை காலத்துக்கு முன்னதாக குப்பை மேட்டின் அமைப்பை மலை போன்ற வட

கொரிய மொழித் தேர்ச்சி பரீட்சை எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பம்

Image
தென்கொரியாவில் தொழில் வாய்ப்பை எதிர்பார்த்துள்ளவர்களுக்கான கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சை எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த பரீட்சை பன்னிபிட்டியவில் அமைந்துள்ள கொரிய களனி மத்திய நிலையத்தில் தொடர்ந்து நான்கு மாதங்கள் நடைபெறும் என்று இலங்கை லேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. இந்த பரீட்சையில் சுமார் 23 ஆயிரம் இளைஞர் யுவதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் நாளாந்தம் 320 பேர் தோற்றவுள்ளனர். இம்முறை பரீட்சைகள் கணனியூடாகவே நடைபெறவுள்ளதாகவும் பரீட்சைக்கான திகதி நேரம் மற்றும் பரீட்சை நிலையம் குறித்த மேலதிக விபரங்களை www.slbfe.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிட முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அதிபர் ஜெஸ்மினாவுக்கு வீடு தேடிச் சென்ற சேவை நலன் பாராட்டு !!

Image
நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் ஓய்வு பெற்ற நற்பிட்டிமுனை லாபிர்  வித்தியாலய அதிபர்  திருமதி ஜெஸ்மினா ஹாரீஸ் அவர்களுக்கு நடை பெற்ற  சேவை நலன் பாராட்டு விழா அவரது தெஹிவளை வீட்டி ல்  நடை பெற்றது . நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அபிவிருத்தி அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் தலைமையில் நடை பெற்ற  நிகழ்வில் அமைப்பின் செயலாளர்  யு.எல்.எம்.பாயிஸ்  உட்பட அமைப்பின் அங்கத்தவர்களும்  நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகாவித்தியாலய பிரதி அதிபர் வீ.எம்.ஸம்ஸம் ,ஆசிரியை கே.எல்.குழந்தையும்மா ,நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலய ஆசிரியர் எம்.எல்.அஷ்ரப் ஆகியோரும் மாணவர்களும் பெற்றோர்களும்  நிகழ்வில் கலந்து கொண்டனர்