உதவாக்கரைகளென சமூகத்தால் ஒதுக்கப்படும் மாற்றுத்திறனாளிகளை சமூக அந்தஸ்த்துடன் வாழ ஹியூமன் லின்க் வழிகாட்டுகின்றது.


கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சார்.
(பி.எம்.எம்.ஏ.காதர்)
சமூகத்தால் ஒதுக்கப்பட்டு உதவாக்கரைகளென நாமம் சூட்டப்பட்டு வாழந்துவருகின்ற மாற்றுத்திறனாளிகளை சமூக அந்தஸ்த்துடன் சமமாக வாழக்கூடிய நிலைக்கு அவர்களது திறன்களை விருத்தி செய்து தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கு வழிகாட்டி வருகின்ற ஹியூமன் லின்ங் நிறுவனத்தின் சேவைகள் அளவீடு செய்ய முடியாத பணியாகும் என கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சார் தெரிவித்தார்.
மருதமுனை ஹியூமன் லின்க் விஷேட தேவையுடையோருக்கான வளப்படுதல் நிலையத்தின் 10 வருட நிறைவு  நினைவுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் ஹியூமன் லின்க் பணிப்பாளர் ஏ.எல்.கமறுத்தீன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்; இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:-உலக சனத்தொகையில்15வீதத்திலும் இலங்கையில் 10 வீதத்திலும் கிழக்கு  மாகாணத்தில் 10 வீதத்திலும் விஷேட தேவையுடையவர்கள் வாழ்ந்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவ்வாறனவர்களை வளப்படுத்தி அவர்கள் பிறரில் தங்கி வாழ்கின்ற நிலைமைகளிலிருந்து மாற்றி சொந்தக்காலில் நிற்கக்கூடியவர்களாக மாற்றியமைக்கின்ற பாரிய சவால்களை மேற்குலக நாடுகளில் சாதாரணமாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை அந்த அளவிற்கு இல்லாதது ஓரளவு  நிறைவேற்றக் கூடிய வசதிகள் காணப்படுகின்ற போதிலும் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை அதிலும் அம்பாறை மாவட்டத்தில் இத்தகைய வாய்ப்பு வசதிகள் இல்லையென்றே கூறவேண்டும.;இந்தப் பாரிய இடைவெளியை நிரப்புவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு முனைந்து வருகின்ற ஹியூமன் லின்ங் நிறுவனத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
எதுவித அடிப்படை வசதிகளும் இல்லாது பலமான நம்பிக்கையோடு ஆரம்பித்து பல சவால்கள்,வ்தடைகள், விமர்சனங்கள்  என்பனவற்றையெல்லாம் தாண்டி தனக்கென ஒரு தனியான தடையத்தை ஏற்படுத்திக் கொண்டு பத்து வருட நிறைவை நினைவு  கூருவது ஒரு அளப்பரிய சாதனையாகவே நான் கருதுகின்றேன்.மேலும் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் விஷேட தேவையுடையோருக்காகப் பணியாற்றுகின்ற நிறுவனங்களுள் அம்பாறை மாவட்டத்தில் ஹியூமன் லின்ங் தனிச்சிறப்புடன் இயங்கிவருவது துறைசார் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் என்றார்.

இந்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக்  கல்விப் பணிப்பாணர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்ர,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரின் பிரத்தியேகச் செயலாளர் யூ.எம்.வாஹித், மக்கள்  தொடர்பு அதிகாரி எம்.ஐ.நயீம், சிறப்பு  அதிதியாக சமூக சேவைகள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் எம்.பி.சம்சுதீன், ஹியூமன் லின்ங் ஸ்தாபகரும். தலைவருமான  கே.எம்.றொஷான், சிரேஷ்ட் வரிமதிப்பீட்டாளர் எம்.ஐ.றூமில்  ஹியூமன்  லின்ங் செயலாளர் ஏ.ஆர்.ஏ.சத்தார் ஆகியோருடன் பலர்  கலந்து கொண்டனர்.
இங்கு நினைவு  மலர் ஒன்றும் வெளியிடப்பட்டதுடன் ஹியூமன் லின்ங் நடாத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்  மற்றும்  பரிசுப் பொதிகளும் அதிதிகளால் வழங்கப்பட்டது.அத்துடன் இங்கு கற்பிக்கின்ற ஆசிரியைகளுக்கு நினைவுச் சின்னங்களும் அதிதிகளால் வழங்கப்பட்டன மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சினாஸ் நிகழ்வுகளை  தொகுத்து வழங்கினார்.





Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்