Posts

வாக்காளர் பதிவு தொடர்பிபாக பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிக்கும் 2நாள் வதிவிடப் பயிற்சிநெறி

Image
( எஸ்.எல். அப்துல் அஸீஸ்)  சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) நடாத்திய வாக்காளர் பதிவு தொடர்பாக   பயிற்றுவிப்பாளர் களை பயிற்றுவிக்கும்  2நாள் வதிவி டப் பயிற்சிநெறி  கண்டி தேசத்தைக்  கட்டியெழுப்புவோர் அமைப்பின்  பயிற்சி நிலையத்தில் கடந்த 4,5ஆம் திகதிகளில் இடம்பெற்றது.  இதில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்க, மாகாண  மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் உட்பட ஐம்பது  பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.  கபே அமைப்பின் தேசிய அமைப்பாளரான எ.எ. மனாஸ் தலைமையில் இடம்பெற்ற  இப் பயிற்சிநெறியில் வளவாளர் களாக முன்னாள் தேர்தல் உதவி ஆணையாளரும்,சீதவாக்கே பிரதேச செயலாளருமான பண்டார யாப்பா, சட்டத்தரணி ஹரேந்திர வானக்கள ஆகியோர்கள் உட்பட  கபே அமைப்பின் உயர் மட்ட உத்தியோகத்த்கர்கள் சிலரும்  கலந்துகொண்டனர்.

விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரீஸ் நியமனம்!

Image
விளையாட்டுத்துறை பதில் அமைச்சராக பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (07) செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு லண்டன் சென்றுள்ளதால், பிரதி அமைச்சர் ஹரீஸ் பதில் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விளையாட்டுத்துறை பதில் அமைச்சராக சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹ Labels ரீஸ் கலந்து கொண்டார்

அமரர் மத்தியுவின் இறுதி பிறந்த நாள் நினைவுகள்

Image
(யு.எம்.இஸ்ஹாக்)  அமரர் எஸ்.ஐ .மத்தியு  அவர்களின்  77வது  பிறந்த நாள்  வைபவம்  கடந்த  24.11.2015 கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை  அதிபர்  பிரபாகரன் தலைமையில்  நடை பெற்றபோது  அன்னாருக்கு கிடைத்த மரியாதை தனது பிறந்த நாள் பரிசாக  சிறந்த மாணவி ஒருவரை தெரிவு செய்து  பரிசும் வழங்கினார்

இவ்வுலகை விட்டுப் பிரிந்த அமரர் அருட் சகோதரர் எஸ்.ஐ .மத்தியு அவர்களின் பூதவுடல் நாளை மாலை கல்முனையில் நல்லடக்கம்

Image
(யு.எம்.இஸ்ஹாக்)  இன்று காலை  கல்முனை வைத்தியசாலையில்  மரணமடைந்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் அருட்சகோதரர் எஸ்.ஐ .மத்தியு அவர்களின் பூதவுடல்  நாளை செவ்வாய்க்கிழமை (07.06.2016) மாலை கல்முனை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப் படவுள்ளது. நாளை காலை 8.00 மணிக்கு  அன்னாரது  இல்லத்தில் இருந்து நீதிமன்ற வீதி வழியாக கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலைக்கு மாணவர்களின் பேண்ட் வாத்திய மரியாதையுடன் எடுத்து வரப்பட்டு கல்லூரி ஆசிரியர்கள்,மாணவர்களின்  அஞ்சலி இடம் பெறும் அதன் பின்னர்  கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் உட்பட  பிரதேச பாடசாலை பாடசாலைகளின்  அதிபர்கள்,ஆசிரியர்கள் அஞ்சலி செலுத்தப் பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு  பூதவுடல்  கல்முனை  திரு இருதயநாதர்  ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப் படும் .  மாலை 4.00 மணிக்கு  ஆலயத்தில் இருந்து  கல்முனை நகர் ஊடாக மரியாதை  ஊர்வலமாக  பூதவுடல் மயானத்துக்கு எடுத்து செல்லப் பட்டு அடக்கம் செய்யப் படவுள்ளது 

கல்முனையின் கல்விமான் அருட் சகோதரர் எஸ்.ஏ.ஐ.மத்தியு காலமானார்

Image
கல்முனை பிராந்தியத்தில்  போற்றத்தக்க கல்விமானாக விளங்கிய  ஒய்வு பெற்ற முன்னாள் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரும் , கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை முன்னாள் அதிபரும் பிரபல எழுத்தாளருமான  அருட் சகோதரர் எஸ்.ஏ.ஐ.மத்தியு  அவர்கள்  இன்று  (06) இறையடி சேர்ந்தார் . நீண்ட  காலமாக நோய் வாய்ப்  பட்டிருந்த அவர் நேற்று  கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில்  சிகிச்சை பெற்றுவந்த அவர் மரணமடைந்தார் . இறக்கும் போது அவருக்கு வயது 77 ஆகும் .

கொஸ்கம முகாமின் ஆயுதக் கிடங்கில் தீ

Image
கொஸ்கம , சாலாவ இராணுவ முகாமில் பாரிய வெடிப்புச் சத்தத்துடன் தீ ஏற்பட்டுள்ளது. குறித்த இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கிலேயே குறித்த தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வெடிப்புச் சத்தம் கேட்டவுடன், பிரதேசவாசிகள் அங்கிருந்து அகன்றதாகவும் அச்சத்தம் பல கிலோ மீற்றர் தூரம் வரை கேட்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, குறித்த சம்பவம் காரணமாக ஏற்பட்ட சேதம் தொடர்பில் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை, பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி களுஅக்கல வரை அவிஸ்ஸாவளை - களுஅக்கல வீதி மூடப்பட்டுள்ளதோடு, அவிஸ்ஸாவளை - கொழும்பு வீதி அவிஸ்ஸாவளையில் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிய இணைப்பு கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தினால் அதனைச் சூழ 8 மீற்றர் தூரத்தில் வசிப்போரை அந்த இடங்களிலிருந்து அகன்று செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்டுள்ள தீவிபத்தினால் ஒரு புறம் கலுஅக்கல வரையும் மறுபுறம் அவிஸ்ஸாவலை வரை வெடிப்புச் சத்தங்கள் கேட்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை இந்த வெடிப்பு ச

மலேரியா நோய் நாட்டில் உட் புகுதலை தடுத்தல் அனைவருக்கும் கடமை - DR.N.Arif தெரிவிப்பு

Image
எமது நாட்டில் மலேரியா நோய் முற்றாக ஒழிக்கப் பட்டுவிட்ட போதிலும் இறக்குமதியாகின்ற மலேரியா நோயைக் அவ்வப்போது கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளை உரிய முறையில் வழங்குவதற்குரிய சகல ஏற்பாடுகளையும் சுகாதார அமைச்சும் மலேரியா தடுப்பு இயக்கமும் சிறப்பான முறையில் முன்னெடுத்து வருகின்றது.  நடுக்கத்துடன் காய்ச்சல் வந்தாலே, அது மலேரியா காய்ச்சல் தான் என்று நடுங்கிய ஒரு காலமும் இருந்தது. இன்று அந்த நிலை மாறி, எந்த சிகிச்சைக்கும் காய்ச்சல் குறையவில்லை என்கின்ற ஒரு நிலை வருகின்ற போது தான், அது மலேரியாவாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகின்ற நிலைக்கு அந்நோய் மாறிவிட்டது. ஆனால் அந்நோய் மாறவில்லை. நமது நாட்டிலிருந்து அந்நோயை, போலியோ என்ற இளம்பிள்ளைவாத நோயை இல்லாமலாக்கியது போன்று முற்றாக ஒழித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில், நமது நாட்டின் அரசாங்கங்களும், அதன் கீழிருந்த சுகாதார அமைச்சும் திறம்பட செயற்பட்டதன் காரணமாகவே, அந்நோயை மறந்த நிலைக்கு கொண்டுவர முடிந்திருக்கிறது என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிராந்திய தொற்றுநோய்த் தடுப்பியலாளரும், பிராந்திய மலேரியா தடுப்பு இயக்க வைத்திய

ரமழான்மாத தலைப்­பி­றையைத், தீர்­மா­னிக்கும் மாநாடு திங்கட்கிழமை (6 ஆம் திகதி)

Image
ஹிஜ்ரி 1437, ரமழான் மாதத்தின் தலைப்­பிறை பற்றி தீர்­மா­னிக்கும் நாள் எதிர்­வரும் 6 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை. எனவே அன்­றைய தினம் மாலை மஃரிப் தொழுகை நேர­மான 6.24 மணி­முதல் ரமழான் மாதத்தின் தலைப்­பி­றையைப் பார்க்­கு­மாறு கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் அனைத்து முஸ்­லிம்­க­ளையும் வேண்­டி­யுள்­ளது. பிறை கண்­ட­வர்கள் தகுந்த ஆதா­ரத்­துடன் நேரில் அல்­லது இங்கு குறிப்­பி­டப்­பட்­டுள்ள தொலை­பேசி இலக்­கங்கள்: 011 5234044, 011 2432110, 077 7316415 ஒன்­றிற்கு  அறியத் தரு­மாறும் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் தெரி­வித்­துள்­ளது. ரமழான் மாதத்தின் தலைப்­பி­றையைத் தீர்­மா­னிக்கும் மாநாடு எதிர்­வரும் 6 ஆம் திகதி மஃரிப் தொழு­கையைத் தொடர்ந்து நடை­பெ­ற­வுள்­ளது. இம் மாநாட்டில் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய கலா­சார திணைக்­கள பிர­தி­நி­திகள் என்போர் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

ரமழான் மாதம் தொடர்பில், ஜம்மியத்துல் உலமா விடுத்துள்ள முக்கியமான அறிக்கை

Image
அ ல்லாஹ் புனித ரமழான் மாதத்தில் அல்-குர்ஆனை இறக்கி வைத்ததன் மூலம் இதனை சிறப்புப்படுத்தியுள்ளான். இது துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும். மேலும் இது முஸ்லிம்களாகிய நாம் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் உலமாக்களின் வழிகாட்டலோடும் அதிகமாக நல்லமல்களை நிறைவேற்றும் மாதமுமாகும்.  துஆக்கள் அங்கீகரிக்கப்படும் இவ்வரிய மாதத்தைப் பயன்படுத்தி நாம் எமது தேவைகளுக்காகவும் உம்மத்துடைய நலனுக்காகவும் அதிகமாக துஆவில் ஈடுபட வேண்டும். குறிப்பாக அன்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்கள் நீங்கி வழமையான வாழ்வுக்குத் திரும்பவும், நாட்டில் ஒற்றுமை, சகவாழ்வு என்பன நிலவவும் நாம் பிரார்த்திக்க வேண்டும்.  ரமழானில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய ஒழுங்குகளும் ஆலோசனைகளும் பின்வருமாறு:  அல்-குர்ஆன் இறக்கப்பட்ட மாதமான ரமழானில் அதிகளவு அல்-குர்ஆனை ஓதுதல் மற்றும் அதனை விளங்கி நடைமுறைப்படுத்தல். இபாதத்களில் அதிகளவு கவனம் செலுத்துவதுடன் இரவு நேர வணக்கங்களில் ஈடுபடுதல். இதன் மூலம் நேரத்தை வீணாக்குவதைத் தவிர்ந்து கொள்ளல்.  கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள

அன்னமலையில் வைரவர் பூசைக்கு பூப்பறிக்க சென்ற குடும்பஸ்தர் குளத்தில் மூழ்கி மரணம்

Image
வைரவர் பூசைக்கு  பூப்பறிக்க சென்ற குடும்பஸ்தர்  குளத்தில் மூழ்கி மரணம் நிகழ்ந்த சம்பவம் இன்று(03) அன்னமலையில் இடம் பெற்றுள்ளது .  இன்று மாலை சவளக்கடை போலிஸ் பிரிவுக்குட்பட்ட  அன்னமலை  தாமரைக் குளத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்த அன்னமலை  இரண்டை சேர்ந்த 45 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தந்தையான  சித்தம்பலம்  அருளம் பலம் என்பவர்  குளத்தில் மூழ்கி சடலமாக மீட்க்கப் பட்டுள்ளார் . வீட்டில் இடம் பெறவிருந்த வைரவர் பூசைக்கு தாமரைப் பூப்பறிக்க சென்ற வேளையிலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது . இன்று மாலை 7.30 மணிக்கு சடலம் மீட்க்கப் பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது  சம்பவம் தொடர்பாக சவளக்கடை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தின் புதிய நுழைவாயில் கட்டட திறப்பு விழாவும்,

Image
சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தின்  புதிய நுழைவாயில் கட்டட திறப்பு விழாவும்,புலமைப்பரிசில் பரீட்சையில்  சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும் பாடசாலை அதிபர் MSM.பைசால் தலைமையில் இன்று(2016/06/03) நடைபெற்றது. இவ்விழாவில்  பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் HMM.ஹரிஸ் அவர்களும் , கௌரவ அதிதியாக  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் அவர்களும்  சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களும் மற்றும் அதிபர்கள் ,ஆசிரியர்கள் உட்பட  பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

புகைத்தல் ஒழிப்பு தின சித்திரப் போட்டி கல்முனை பஹ்றியா மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

Image
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு  நடாத்தப் பட்ட சித்திரப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று  (02) கல்முனை அல் - பஹ்றியா  மகா  வித்தியாலயத்தில் இடம்பெற்றது . கல்முனை பிரதேச செயலக திவிநெகும சமுக அபிவிருத்தி பிரிவும், கல்முனை அல் - பஹ்ரிய மகா  வித்தியாலயமும் இணைந்து  'புகைத்தலினால் ஏற்படும் விபரீதங்கள்' என்ற தலைப்பில் நடாத்திய  இப் போட்டியில், கலந்துகொண்டு தங்கள் திறனை வெளிக்காட்டிய 120 மாணவர்களுக் கு இந்த சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அல் - பஹ்றியா  மகா  வித்தியாலய அதிபர் எம்.ஐ. அப்துல் ரஸாக் தலைமையில் இடம்பெற்ற இந்  நிக ழ்வில்,  கல்முனை  பிரதேச செயலாளர்   எம்.எச். முகம்மட் கனி, திவிநெகும தலைமைப்பீட  முகாமையாளர்    எ.ஆர் .எம். சாலிஹ்,  அல் - பஹ்ரிய மகா  வித்தியாலய பிரதி அதிபர் எ.ஆதம்பாவா, திவிநெகும வலய உதவி   முகாமையாளர் எஸ்.எல்.அஸீஸ்,  திவிநெகு சமுக அபிவிருத்தி  உத்தியோகத்தர் என்.எம்.நெளசாத்  உட்பட ஆசிரியர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.