ரமழான்மாத தலைப்­பி­றையைத், தீர்­மா­னிக்கும் மாநாடு திங்கட்கிழமை (6 ஆம் திகதி)

ஹிஜ்ரி 1437, ரமழான் மாதத்தின் தலைப்­பிறை பற்றி தீர்­மா­னிக்கும் நாள் எதிர்­வரும் 6 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை.


எனவே அன்­றைய தினம் மாலை மஃரிப் தொழுகை நேர­மான 6.24 மணி­முதல் ரமழான் மாதத்தின் தலைப்­பி­றையைப் பார்க்­கு­மாறு கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் அனைத்து முஸ்­லிம்­க­ளையும் வேண்­டி­யுள்­ளது.

பிறை கண்­ட­வர்கள் தகுந்த ஆதா­ரத்­துடன் நேரில் அல்­லது இங்கு குறிப்­பி­டப்­பட்­டுள்ள தொலை­பேசி இலக்­கங்கள்: 011 5234044, 011 2432110, 077 7316415 ஒன்­றிற்கு  அறியத் தரு­மாறும் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் தெரி­வித்­துள்­ளது.

ரமழான் மாதத்தின் தலைப்­பி­றையைத் தீர்­மா­னிக்கும் மாநாடு எதிர்­வரும் 6 ஆம் திகதி மஃரிப் தொழு­கையைத் தொடர்ந்து நடை­பெ­ற­வுள்­ளது.

இம் மாநாட்டில் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய கலா­சார திணைக்­கள பிர­தி­நி­திகள் என்போர் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்