புகைத்தல் ஒழிப்பு தின சித்திரப் போட்டி கல்முனை பஹ்றியா மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடாத்தப் பட்ட சித்திரப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (02) கல்முனை அல் - பஹ்றியா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது .
கல்முனை பிரதேச செயலக திவிநெகும சமுக அபிவிருத்தி பிரிவும், கல்முனை அல் - பஹ்ரிய மகா வித்தியாலயமும் இணைந்து
'புகைத்தலினால் ஏற்படும் விபரீதங்கள்' என்ற தலைப்பில் நடாத்திய இப் போட்டியில், கலந்துகொண்டு தங்கள் திறனை வெளிக்காட்டிய 120 மாணவர்களுக் கு இந்த சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அல் - பஹ்றியா மகா வித்தியாலய அதிபர் எம்.ஐ. அப்துல் ரஸாக் தலைமையில் இடம்பெற்ற இந் நிக ழ்வில், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி, திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் எ.ஆர் .எம். சாலிஹ், அல் - பஹ்ரிய மகா வித்தியாலய பிரதி அதிபர் எ.ஆதம்பாவா, திவிநெகும வலய உதவி முகாமையாளர் எஸ்.எல்.அஸீஸ், திவிநெகு சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நெளசாத் உட்பட ஆசிரியர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment