Posts

Showing posts with the label விளையாட்டு

தேசிய கிரிக்கட் நடுவராக நற்பிட்டிமுனை றிலாஸ் நியமனம் தேசபிமான விளையாட்டு செம்மல் விருது வழங்கி கெளரவிப்பு

Image
இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு  சபையினால் நடத்தப்பட்ட கிரிக்கட் நடுவர்களுக்கான போட்டிப் பரீட்சையில் தேசிய ரீதியாக தரம் ஐந்து நடுவராக சித்தி பெற்ற நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகாவித்தியாலய விளையாட்டு ஆசிரியர் அபூபக்கர் முகம்மட் றிலாஸ் நடுவராக நியமிக்கப் பட்டுள்ளார் . கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபால பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வு ஆர்.பிரேமதாச கிரிக்கட்  மைதான விளையாட்டு அரங்கில் அண்மையில் நடை பெற்றது.  உள்ளூர் கிரிக்கட் போட்டி நடவடிக்கைகளின் தலைவர் சிந்தக்க எதிர்மன்னவினால்    நியமனக் கடிதம்  வழங்கி வைக்கப் பட்டது. நற்பிட்டிமுனை மண்ணுக்கு இந்தக் கெளரவத்தை பெற்றுக் கொடுத்த  முகம்மட் றிலாஸ் நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பினால் பாராட்டி கெளரவித்து பொன்னாடை போர்த்தி தேசபிமான விளையாட்டு செம்மல் விருது வழங்கி கெளரவித்தனர் . கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சி.எம். முபீத்தின்  நெறிப்படுத்தலில் நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவரு

தமிழனுக்கு புகழ் சேர்த்த தங்க மகன் பாலுராஜ்

Image
பாராட்டி கெளரவித்தார்  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் எம்.இராஜேஸ்வரன் .   தெற்காசிய கராத்தே தோ சம்மேளனம் நடாத்திய நான்காவது தெற்காசிய கராதே சம்பியஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் தொடர்ச்சியாக 3 தங்கப் பதக்கங்களை வென்று கல்முனை சேனைக்குடியிருப்பை  சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் இலங்கை கராத்தே வரலாற்றில் புதிய சாதனை படைத்தார்.  தமிழனுக்கு  புகழ் சேர்த்த தங்க மகன் என அவரை பாராட்டி வாழ்த்துப்  பா  வாசித்து  மாலை  அணிவித்து பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர்  எம்.இராஜேஸ்வரன் .   இந்த  நிகழ்வு நேற்று மாகாண சபை உறுப்பினரின் அலுவலகத்தில் ஊடகவியலாளர்  எஸ்.பேரின்பராசா தலைமையில் இடம் பெற்றது. பாலூராஜின் தாய் அன்னம்மா  சௌந்தரராஜாவும் கலந்து கொண்டார்  இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் முதன் முறையாக நடைபெற்ற 4ஆவது தெற்காசிய கராத்தே தோ சம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை (05) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. இதில் ஆண்களுக்கான சிரேஷ்ட பிரிவில் காட்டா(Kata) போட்டியில் தொடர்

நான்காவது தெற்காசிய கராதே சம்பியஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற சௌந்தரராஜா பாலுராஜ்

Image
தெற்காசிய கராத்தே தோ சம்மேளனம் நடாத்திய நான்காவது தெற்காசிய கராதே சம்பியஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் தொடர்ச்சியாக 3 தங்கப் பதக்கங்களை வென்று கல்முனை சேனைக்குடியிருப்பை  சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் இலங்கை கராத்தே வரலாற்றில் புதிய சாதனை படைத்தார்.  இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் முதன் முறையாக நடைபெற்ற 4ஆவது தெற்காசிய கராத்தே தோ சம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை (05) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. இதில் ஆண்களுக்கான சிரேஷ்ட பிரிவில் காட்டா(Kata) போட்டியில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் சௌந்தரராஜா பாலுராஜ் தங்கப் பதக்கம் வென்றார்.  முன்னதாக 2014ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய கராத்தே தோ சம்பின்ஷிப்பில் அவர் தங்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச கறுப்புப் பட்டியைக் கொண்டவரும் (Internatinal Black Belt 5 th  dann), வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆசிய நடுவராக தெரிவாகியுள்ளவருமான (Sensei) எஸ்.முருகேந்திரனின் கீழ் பாலுராஜ் பயிற்சிகளை முன்ன

நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் மினா இல்லம் வெற்றி

Image
ஒரு தசாப்தத்தின் பின்னர் நடை  பெற்ற நற்பிட்டிமுனை அல் -அக்ஸா  மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில்  மினா இல்லம் வெற்றிவாகை சூடிக் கொண்டது.  கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ.கையூம் தலைமையில் கடந்த சனிக்கிழமை இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் நற்பிட்டிமுனை தலைவர் அஷ்ரப் மைதானத்தில் நடை பெற்றது.  இந்த இல்ல விளையாட்டுப் போட்டியில்  மூன்று இல்லங்கள் கலந்து கொண்டன பச்சை நிற மினா இல்லம் , சிவப்பு  நிற ஸபா இல்லம் ,நீல நிற அரபா  இல்லம் . போட்டிகளின் அடிப்படையில் 694 புள்ளிகளைப்  பெற்று பச்சை நிற மினா இல்லம் முதலாம் இடத்தையும், 667 புள்ளிகளைப் பெற்று நீல நிற அரபா இல்லம் இரண்டாம் இடத்தையும் , 530 புள்ளிகளைப்  பெற்று சிவப்பு நிற சபா இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன  நடை பெற்ற  இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப்  பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார் , கல்முனை வலையாக கல்வித் பணிப்பாளர் எம்.எஸ்.ஆயத்துல் ஜலீல் உட்பட பிரதிக்கல்வித் பணிப்பாளர்கள் ,உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் ,கோட்டக்  கல்விப்  பணிப்ப

நற்பிட்டிமுனை அல் - அக்ஸா மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி

Image
அல் - அக்ஸா மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி 11 வருடங்களின் பின்னர் நாளை சனிக்கிழமை (06) நற்பிட்டிமுனை அஸ்ரப் விளையாட்டு மைதானத்தில் நடை பெறவுள்ளது. நற்பிட்டிமுனை மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் ஒன்று இல்லாத நிலையில் 1993ஆம் ஆண்டு கல்லூரியின் அதிபராக இருந்த எஸ்.எச்.சமட் எடுத்துக் கொண்ட பெரு முயற்சி காரணமாக நற்பிட்டிமுனை இளைஞர்க ளின் விளையாட்டு ஆசையை நிறைவேற்றும் வகையில் முஸ்லீம் மையவாடியை மைதானமாக்கி அன்று முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராகவிருந்த கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.மன்சூரை பிரதம அதிதியாக அழைத்து இற்றைக்கு 24 ஆண்டுகளுக்கு முன்னர் மிக கோலாகலமாக அந்த இல்ல விளையாட்டுப் போட்டியை நடாத்திவைத்தார் . அந்த நிகழ்வு இன்றும் நற்பிட்டிமுனை மக்களால் மறக்கப்பட முடியாத நிகழ்வாகவும் பாராட்டக் கூடிய அதிபராக சமட் அதிபர் விளங்குகிறார் . இதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு அதிபராக இருந்த ஏ.எம்.ஜமால்தீன் 11 ஆண்டுகளின் பின்னர் நற்பிட்டிமுனைக்கென அமர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபினால் அடையாளப் படுத்தப்பட்ட அஸ்ரப் மைதானத்தில் இல்ல விளையாட்டுப் போட்டியொன்

கல்முனை கல்வி வலய விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்

Image
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் பாடசாலை களுக்கிடையிலான  வலய மட்ட விளையாட்டுப் போட்டி கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் கல்முனை  உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் நேற்றுக்  காலை ஆரம்பமானது. கல்முனை  வலயத்துக்குட்பட்ட  கல்முனை முஸ்லிம் ,தமிழ் பிரிவு ,சாய்ந்தமருது ,காரைதீவு மற்றும் நிந்தவூர் கோட்டங்களை சேர்ந்த  65 பாடசாலைகளை சேர்ந்த ஆயிரத்துதுக்கும் குறையாத மாணவர்கள் போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர் . வலய மட்ட போட்டிகளில் பங்கு பற்றி முதலாம், இரண்டாம் இடத்தைப் பெறும் மாணவர்கள் மாகாண மட்டப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர். நேற்று  நடை பெற்ற  வலய மட்ட ஆரம்ப போட்டி நிகழ்வுகள் வலயக்  கல்வி அலுவலக முகாமைத்துவத்துக்குப்  பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ் உமர்மௌலானாவின் நெறி ப்படுதலுடன்  இடம் பெற்றன . ஆரம்ப நிகழ்வில்  வலயக் கல்வி அலுவலக நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் வீ.மயில்வாகனம் ,கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.ரஹீம், கோட்டக் கல்விப் ப

அம்பாறை மாவட்ட விளையாட்டுத் துறையை மேம்படுத்த பிரதியமைச்சர் நடவடிக்கை

Image
அம்பாறை மாவட்ட விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டுத் துறை அமைச்சினால் முன்னெடுக்கப் பட்டுள்ள வேலைத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வு   கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில்  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நடை பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் வழங்கி வைத்தார் நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் விளையாட்டுத் துறை அதிகாரிகள் அதிபர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை நடுவர் போட்டிப் பரீட்சையில் நற்பிட்டிமுனை றிலாஸ் சித்தி

Image
இலங்கை கிரிக்கட்  கட்டுப்பாட்டு  சபையினால்  நடாத்தப் பட்ட கிரிக்கட் நடுவர்களுக்காகன  போட்டிப் பரீட்சையில்  (UMPIRE) நற்பிட்டிமுனையை  சேர்ந்த றிலாஸ் முகம்மட் சித்தியடைந்துள்ளார் . விளையாட்டு துறையில் ஆர்வங் கொண்ட இவர்  தான் பிறந்த நற்பிட்டிமுனை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார் . மேலும் பல திறமைகள் பெற்று சாதனைகள் பல புரிய கல்முனை நியூஸ் இணையத்தளம் வாழ்த்துகிறது 

விளையாட்டுத்துறை பதில் அமைச்சராக ஹரீஸ் நியமனம்.

Image
(அகமட் எஸ். முகைடீன்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விளையாட்டுத்துறை பதில் அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ளதால் பிரதி அமைச்சர் ஹரீஸ் விளையாட்டுத்துறை பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை சந்தாங்கேணி மைதான அபிவிருத்தி !!ஹரீஸின் அதிரடி ஆட்டம் !!!

Image
(யு.எம்.இஸ்ஹாக் ) விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானம் சகல வசதிகளுடன் கூடிய மைதானமாக அபிவிருத்தி செய்யும் அபிவிருத்தி அங்குரார்ப்பண விழா நாளை  2016.10.09ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எ ச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நட்டு  வைக்கவுள்ளார். சந்தாங்கேணி விளையாட்டு மைதானம் சகல வசதிகளுடன் கூடிய உள்ளக அரங்கு, நீச்சல் தடாகம், நவீனமான முறையிலான மெய்வல்லுனருக்கான ஓடுபாதை என்பன நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் நகர திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான ரவூப் ஹக்கீம் கௌரவ அதிதியாகவும், சிறு கைத்தொழில் அமைச்சர் தயா கமகே, பிரதி அமைச்சர்களான பைசால் காசீம், அனோமா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.கே.கோடீஸ்வரன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல

நட்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய சிறுவர் தின விழா வெற்றிகரமாக நிறைவு

Image
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பின்தங்கிய பாடசாலையான நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய மாணவர்களின் வலய மட்டத்திலான பிரதான விளையாட்டு விழா இன்று நற்பிட்டிமுனை அஸ்ரப் சதுக்க மைதானத்தில் நடை பெற்றது.  நற்பிட்டிமுனை அல்-கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக  அபிவிருத்தி அமைப்பின் பூரண  அனுசரணையுடன்  அதிபர் திருமதி ஜெஸ்மினா ஹாரிஸ் தலைமையில் காலையில் மைதான  சுவட்டு விளையாட்டு நிகழ்வுகளும்  மாலையில் கலை நிகழ்கவுளும் சிறுவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும்  இடம் பெற்றன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கைத்தொழில் வணிக அமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் நற்பிட்டிமுனை அல்-கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக  அபிவிருத்தி அமைப்பின் தலைவருமான சீ.எம்.ஹலீம் சிறுவர்களை  மகிழ்வூட்டும் வகையில்  இனிப்பு வழங்கி மகிழ்வித்ததுடன் கற்றல் உபகரணங்களும் பரிசாக வழங்கி வைத்தார். அதிபர்க ,பிரதி அதிபர், ஆசிரியர்கள் , கல்லூரியின் பழைய மாணவர்கள் ,ஊர் மக்கள்  பலரின் ஒத்துழைப்புடன்  சிறப்பாக  நடை பெற்ற   சிறுவர் தின நிகழ்வைக் கண்டு கழிக்க  பொது மக்கள் பலர

நற்பிட்டிமுனை NFC வி.கழகம் வெற்றி பெற்றது.

Image
நற்பிட்டிமுனை ITS பௌண்டேசனால் நடாத்திவந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்றுப்போட்டியில்     நற்பிட்டிமுனை NFC வி.கழகம் வெற்றி பெற்றது. நற்பிட்டிமுனை ITS பௌண்டேசனால் நடாத்திவந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்றுப்போட்டி நற்பிட்டிமுனை இலவன் ஸ்டார் வி.கழத்தை எதிர்த்து நற்பிட்டிமுனை NFC வி.கழகம் விளையாடியது. இதில்  நற்பிட்டிமுனை NFC வி.கழகம் முதல் இடத்தை தட்டிக்கொண்டது.  இரண்டாம் இடத்தை இலவன் ஸ்டார் வி.கழகமும் , மூண்றாம் இடத்தை இஸ்றின் வி.கழகம் தட்டிக்கொண்டது.   முதல் இடத்தை தட்டிக்கொண்ட கழத்திற்கு 10000/- வும் , இரண்டாம் இடத்தைப் பெட்ரா கழகத்துக்கு    5000/-வும்,  மூண்றாம் இடத்தை பெற்ற  கழத்திற்கு 3000/-வும்  பரிசாக வழங்கப் பட்டன . இலங்கைப் போக்கு வரத்துச் சபையின் கிழக்கு மாகாண பிரதான முகாமையாளர்  ஏ.எல் சித்தீக், கல்முனைச் சாலை முகாமையாளர் வீ. ஜஹ்பர்   உட்பட  முக்கியஸ்தர்கள் பலரும் இந்தப்  போட்டியில்  கலந்து கொண்டனர் 

கல்முனை பிரதேசத்திலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு

Image
ஏ.பி.எம்.அஸ்ஹர் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை பிரதேசத்திலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று  நடைபெற்றது. பிரதேசசெயலாளர் எம்.எச்.எம் கனி தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்தும் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் நிதியொதுக்கீட்டிலிருந்தும் உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்டன இந்நிகழ்வில் திட்டமிடல் பிரதிப்பனிப்பாளர் கே ராஜதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர் கல்முனை பிரதேசத்தில் உள்ள  சுமார் 50க்கும் மேற்பட்ட கழகங்களுக்கு  உபகரணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.