Posts

Showing posts with the label விருதுகள்

தரம் உயர்வு பெற்ற கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் ஜலீலுக்கு நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் பாராட்டு

Image
இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் -1 க்கு உயர்வு பெற்ற  கல்முனை வலயக்  கல்விப் பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல் அவர்களைப்  பாராட்டும் நிகழ்வு இன்று (16) வியாழக்கிழமை  கல்முனை அல்தாப்  ஹோட்டலில்  நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் தலைவர் சீ .எம்.ஹலீம் தலைமையில் நடை பெற்றது . மதிய விருந்துபசாரத்துடன் நடைபெற்ற இந்நிகழ்வில்  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார் . இந்த நிகழ்வில்  பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான Dr எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா (கல்வி முகாமைத்துவம்), எஸ்.எல்.ஏ.ரஹீம் (கல்வி அபிவிருத்தி),பீ.எம்.வை.அரபாத் மொஹிதீன் (திட்டமிடல் ),கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் உட்பட  அல் -கரீம் பவுண்டேஷன் செயலாளர் யு.எல்.எம்.பாயிஸ் ,அல் -கரீம் பவுண்டேஷன் ஆலோசகரும் ,ஊடகவியலாளரும் ,சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளருமான யு.எம்.இஸ்ஹாக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 

நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலய மாணவர்களுக்கு பாராட்டு

Image
நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில் முதல் தடவையாக கல்விப் பொது தராதர பரீட்சைக்குத்  தோற்றி  சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு சமீபத்தில் நடை பெற்றது. கல்லூரி அதிபர் வை.எல்.பஷீர் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலையக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கலந்து கொண்டார். கெளரவ அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் சீ .எம்.முபீத் ,கைத்தொழில் வணிக அமைச்சரின் இணைப்பாளரும் அல் -கரீம் பவுண்டேசன் தலைவருமான சீ .எம்.ஹலீம் ,பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான எஸ்.எம்.எம்.எஸ்.உமர்மௌலானா ,ஏ.எல்.எம்.முக்தார் ,எஸ்.எல்.ஏ.ரஹீம், கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.எம்.சக்காப்   ஆகியோரும்  நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலய அதிபர் எம்.எல்.ஏ.கையூம்,பிரதி அதிபர்  வீ.எம்.ஸம்ஸம் , உதவி அதிபர்களாக மௌலவி ஏ.சாலிதீன்,திருமதி ஏ.முனாசீர் ,கல்முனை அல் -ஹாமியா அரபுக் கல்லூரி அதிபரும் நற்பிட்டிமுனை உலமா சபை தலைவருமான மௌலவி யு.எல்.ஏ.கபூர்  ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் மற்றும் ஊர் பிரமுகர்கள் பலர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து  மாணவர்களுக்கு பாராட்டு  வழங்கி சிறப்பித்தனர்.

கல்முனை மாநகரத்தில்; பெரும் சவலாலாக இருந்து வருகின்ற திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காணப்படும்

Image
கல்முனை மேயர் ஏ.எம்.றக்கீப் (பி.எம்.எம்.ஏ.காதர்)  கல்முனை மாநகரப் பிரதேசத்திலே பெரும் சவலாக இருந்து வருகின்ற திண் மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு  காண்பதற்று துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தெரிவித்தார்.  கல்முனை மாநகர சபையின் ஆறாவது மேயராகத் தெரிவு  செய்யப்பட்டுள்ள மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப்பைப் பாராட்டி கௌரவித்த நிகழ்வு  செவ்வாய்க்கிழமை(08-05-2018)மாலை மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய போதே மேயர் றக்கீப் இவ்வாறு தெரிவித்தார்.பெரிய நீலாவணை  நெசவாளர் சமூக சேவை மன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்த கௌரவிப்பு நிகழ்வு  கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சிரேஷ்ட தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்வின் நெறிப்படுத்தலில் மன்றத்தின் தலைவர் ஏ.எல்.சபுறுத்தீன் தலைமையில் நடைபெற்றது. மேயர் றக்கீப் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :-கல்முனை மாநகரப் பிரதேசத்திலே பல்வெறு பிரச்சினைகள் உள்ளன அவற்றை உடனடியாகத் திர்த்து வைக்க முடியாது பிரச்சினைக

கல்முனை மாநகர சபையின் ஆறாவது மேயர் ஏ.எம்.றக்கீபுக்கு மருதமுனையில் கௌரவிப்பு

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) கல்முனை மாநகர சபையின் ஆறாவது மேயராகத் தெரிவு  செய்யப்பட்டுள்ள மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப்பைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  நாளை(08-05-2018)மாலை மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பெரிய நீலாவணை  நெசவாளர் சமூக சேவை மன்றம் ஏற்பாடு செய்துள்ள இந்த கெரவிப்பு நிகழ்வு  மன்றத்தின் ஆலோசகர் ஏ.அர் எம்.சாலிஹ்வின் நெறிப்படுத்தலில்   தலைவர் ஏ.எல்.சபுறுத்தீன் தலைமையில் நடைபெவுள்ளது. இந்த நிகழ்வில் பெரிய நீலாவணை  நெசவாளர் சமூக சேவை மன்றத்தின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்து வரும் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனியும் கௌரவிக்கப்படவுள்ளார். இங்கு மன்றத்தின் உறுபினர்களும் கலந்து கொள்ளவு ள்ளனர்.   

கல்முனை தமிழ் பிரதேச செயலக கலாச்சார பேரவையினால் நேற்று (15) நடாத்தப் பட்ட கலாச்சார நிகழ்வில் கெளரவிக்கப் பட்ட கலை இலக்கியவாதிகள் சிலர்

Image

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் எம்.சி.அன்சாருக்கு தேசகீர்த்தி விருது

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் மருதமுனையைச் சேர்ந்த எம்.சி.அன்சார் அவர்களின் சமூக சேவையை கௌரவித்து மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பு தேசகீர்த்தி விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்த நிகழவு  அண்மையில் கொழும்பு தபால் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் அமைப்பின் தலைவர் மொகமட் ஷரீக் ஹை தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு துரைராஜ சிங்கம் மாகாணப் பணிப்பாளர் எம்.சி.அன்சாருக்கு பதக்கம் அணிவித்து விருது மற்றும் சாண்றிதழ் வழங்கி கௌரவித்தார். 1963ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி அகமது லெப்பை முகம்மது காசிம் சாலைக்குட்டி சவ்தா உம்மா தம்பதிக்கு முதல் மகனாக மருதமுனையில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியலயத்திலும் உயர்கல்வியை மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியிலும்  கற்றார்.

கல்முனை சாஹிரா கல்லூரி மாணவன் மொஹமட் ஸவ்பத்துக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஜலீல் புகழாரம்

Image
இந்தோனேசியாவில் நடை பெற்ற சர்வதேச இளம் கண்டு பிடிப்பாளர்களுக்கான போட்டியில்  சர்வதேச ரீதியில் தங்கப் பதக்கம் வென்ற கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவன் மொஹமட் ஸவ்பத்துக்கு  கல்முனை வலயக்கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பாராட்டு தெரிவித்துள்ளார் . கல்முனை ஸாஹிரா கல்லூரி அதிபர் மற்றும் மாணவனை வழிப்படுத்திய ஆசிரியர்கள் அவருக்கு ஊக்கம் வழங்கிய அவரது பெற்றோர்கள் அனைவருக்கும் வாழ்த்தும் பாராட்டும்  தெரிவிப்பதாக வலயக்கல்விப் பணிப்பாளர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார் . மாணவன் மொஹமட் ஸவ்பத் பெற்றுள்ள தங்கப்பதக்கம் கல்முனை கல்வி வலயத்துக்கும் , கிழக்கு மாகாணத்துக்கும்  ,கல்முனை ஸாஹிராவுக்கும் மொத்தத்தில் நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக வலயக்  கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார் 

"வித்தகர் விருது " பெற்ற சுப்பிரமணியம் அரசாரத்தினம் அவர்களைப் பாராட்டும் விழா

Image
கிழக்கு மாகாண இலக்கிய விழாவில்  தமிழ்  இலக்கியப் பனி புரிந்தமைக்காக  "வித்தகர் விருது " பெற்ற  சுப்பிரமணியம் அரசாரத்தினம் அவர்களைப்  பாராட்டும்  விழா  நாளை (09) கல்முனையில் நடை பெறவுள்ளது. ஓய்வு நிலை கோட்டைக்கல்வி அதிகாரி பொன் செல்வநாயகம் தலைமையில் கல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில்  நாளை காலை 9.30 மணிக்கு இப்பாராட்டு விழா நடை பெறவுள்ளது.

கிழக்கு ஆளுநருக்கு சமூக சேவையாளர் நற்பிட்டிமுனை ஹலீம் வாழ்த்து

Image
கிழக்கு மாகாண ஆளுனராக  ரோஹித போகொல்லாகம பதவியேற்றபின்னர் ஆளுநர்  அலுவலகத்துக்கு சென்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான  றிஷாத் பதியுதீனின் இணைப்பாளரும் ,சமூகசேவையாளருமான நற்பிட்டிமுனை சி.எம்.ஹலீம்  ஆளுநருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்

தினகரன் பிரதம ஆசிரியர் கே.குணராசா அம்பாறை மாவட்டத்தில் கௌரவிக்கப்பட்டார்

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) சிரேஷ்ட ஊடகவியலாளரும்தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான கே.குணராசா அம்பாறை மாவட்டத்தில் கௌரவிக்கப்பட்டார்.லேக்ஹவுஸ் நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் ஏற்பாடு செய்த விஷேட ஒன்றுகூடல் திங்கள்கிழமை(22-05-2017)மாலை நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.இங்கு ஊடகவியலாளர்கள் சார்பில் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா இவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார். இதில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான மீரா எஸ்.இஸ்ஸதீன்,   எம்.ஏ.பகுறுதீன் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.