Posts

Showing posts with the label மரணம்

பொலிஸ் பரிசோதகரும்,கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான மருதமுனையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மான் காலமானார்.

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) பொலிஸ் பரிசோதகரும், கல்ம ுனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான மருதமுனையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மான் வயது 54 இன்று(05-12-2018)அதிகாலை ஓரு மணியளவில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் உயிரிளந்துள்ளார். இவர் 1965.02.10ஆம் திகதி மருதமுனையில் பிறந்தார்.இவர் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் மருதமுனையைச் சேர்ந்த மர்ஹ_ம் அனுஸ்லெப்பை மரைக்கார்; செயினுலாப்தீன்,ஆதம்பாவா ஹபீபா உம்மா தம்பதியின் மூத்த புதல்வராவார். இவர் 1988.01.18ஆம் திகதி உப பொலிஸ் பரிசோதகராக நியமனம் பெற்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் தனது கடமையைப் பொறுப்பேற்று தலைமன்னார்,கல்முனைஆகிய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றினார். கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது மட்டக்களப்பு மாவட்ட வெல்லாவெ பொலிஸ் பிரிவில் கடமையின் நிமிர்த்தம் சென்று கொண்டிருந்த போது பயங்கர வாதிகள் மறைந்திருந்த தாக்கிய போது மிகவும் சாதுரியமாக தன்னுடன் பயனித்த பொலிஸ் உத்தியோகத்தர்களையும், ஆயுதங்

சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஷ் தினேஷின் இறுதி ஊர்வலம்

Image
கடந்த 30ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ்  சோதனை சாவடியில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்படட பெரியநீலாவணையை  சேர்ந்த  கணேஷ் தினேஷ் என்ற பொலிஸாரின்  சடலம்  இன்று  (02) பெரியநீலாவணை மயானத்தில் பூரண பொலிஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இன்று காலை  மரணித்தவரின் சடலம் வைக்கப்பட்டிருந்த பெரியநீலாவணை  இல்லத்துக்கு சென்ற கிழக்கு மாகாண ஆளுநர்  ரோஹித போகொல்லாகம  இறுதி அஞ்சலி செலுத்தினார்  பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையுடன் தேசியக்கொடியினால் மூடப்பட்ட பேழையில் எடுத்துச் செல்லப்பட்ட  சடலம்  பொலிஸாரினால் 39 துப்பாக்கி வேட்டுக்கள்  தீர்க்கப்பட்டு அடக்கம் செய்யப் பட்டது  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அனுப்பிவைக்கப்பட்ட  அனுதாப செய்தி ஜனாதிபதியின் இணைப்பாளர் வைத்திய கலாநிதி பெர்ணாண்டுவினால் அங்கு வாசிக்கப்பட்டது . அதே போன்று பொலிஸ் மா அதிபரினால் அனுப்பிவைக்கப்பட்ட அனுதாப செய்தியை  பொலிஸ் அதியட்சகர் ஏ.எம்.றபீக் வாசித்தார் . மரணித்த பொலிஸாரின் இறுதி சடங்கில் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர உட்பட போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் .

மட். வவுணதீவு சோதனைச் சாவடியில் இரு பொலிஸார் சுட்டுக்கொலை

Image
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் சோதனைச் சாவடியில் இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இன்று (30) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் மற்றும் பிரசன்னா ஆகிய பொலிஸ் கான்ஸ்டபில் இருவரே உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு வவுணதீவிலுள்ள பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் இவ்விரு பொலிஸாரும்  கடமையில் ஈடுபட்டிருந்த வேளை,  அவ்விடத்திற்கு வந்த இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்திலேயே இவ்விரு பொலிசாரும் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. T56 ரக துப்பாக்கிகளினால் குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகளையும் கொலையாளிகள் எடுத்துச்சென்றுள்ளனர். குறித்த பகுதிக்கு சென்றுள்ள கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடயவியல் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையினர், புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் மாவீரர் தின நினைவேந்தல்

Image
யாழ். பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 2018 ஆண்டுக்கான மாவீரர் தின நினைவேந்தல் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (27) பிற்பகல் 12.30 மணி அளவில் பல்கலைக்கழக முன்றலில் உள்ள தூபியில் நடைபெற்றது.  இந்நிகழ்வினை பல்கலைகழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆரம்பித்து வைத்தார்.  யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மாணவர்கள் எனப் பலரும் நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்ததுடன், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள். 

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டில் பலி

Image
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஹபரகட வசந்த மற்றும் மீகொட உபுல் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.  குறித்த இருவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.  கொட்டாவ, ருக்மல்கம வீதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயேயாகத்திலேயே குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

ஆப்கானிஸ்தான் தலைநகரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 40 பேர் பலி - பலரின் நிலை கவலைக்கிடம்

Image
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  முஹமத் நபியின் பிறந்தநாள் ஆண்டுதோறும் மீலாதுன் நபி என்னும் பெயரில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டின் மீலாதுன் நபி கொண்டாட்டங்கள் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் விமான நிலையத்துக்கு செல்லும் வீதியில் உள்ள உரனஸ் திருமண மண்டபத்தில் இன்று மீலாதுன் நபி விழா பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.  மாலை சுமார் 6.15 மணியளவில் இங்கு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 60 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதுடன் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.  தற்கொலைப்படை கைவரிசையாக கருதப்படும் இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் இன்னும் பொறுப்பேற்று கொ

கல்முனை உதவிப் பிரதேச செயலாளர் சீதாராமன் ஜெயரூபன் காலமானார்

Image
கல்முனை உதவிப்  பிரதேச செயலாளர்  சீதாராமன் ஜெயரூபன்   இன்று  (18) ஞாயிற்றுக்  கிழமை  கொழும்பு  லங்கா ஹோஸ்பிடலில் காலமானார் . அவர் இறக்கும் போது  அவருக்கு வயது  34 ஆகும்  இரண்டு  பிள்ளைகளின் தந்தையான  ஜெயரூபன்  பழுகாமத்தில் சீதாராமன் சிவ கெளரிக்கு  மகனாக  பிறந்து 2012 ஆம் ஆண்டு  அக்கரைப்பற்று  கோளாவிலில்  திருமணம் செய்துள்ளார். 2010 ஆம் ஆண்டில்  இலங்கை அரச நிருவாக சேவைக்கு தெரிவாகி  அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில்  உதவி பிரதேச செயலாளராக  முதல் நியமனம் பெற்ற  இவர் திருக்கோவில் பிரதேச செயலகத்திலும்  உதவி பிரதேச செயலாளராக  பணியாற்றி வந்தார் . கடந்த  2018.08.15 ஆம் திகதி கல்முனை  பிரதேச செயலகத்துக்கு உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெயரூபன்  சிறிது காலம் நோய்வாய்பட்டிருந்த நிலையில் இன்று  (18) காலமானார். அன்னாரது சடலம் இன்று  அக்கரைப்பற்றுக்கு எடுத்துவரப்பட்டு கோளாவில் மயானத்தில் நாளை  (19) அடக்கம் செய்யப்படவுள்ளது.   2   Attachments    

பேராசிரியர் S.H. ஹஸ்புல்லாஹ் காலமானார்

Image
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினரும், பேராதனை பல்கலைக் கழகத்தின் புவியல் விஞ்ஞானத் துறை பேராசிரியருமான எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் (67) காலாமானார். அவர் இன்று (25) யாழ். பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தபோது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார். 1950 ஆம் ஆண்டு செப்டெம்பர் 03 ஆம் திகதி மன்னார், எருக்கலம்பிட்டியில் பிறந்த அவர்,  ஒரு ஆண் மற்றும் இரு பெண்குழந்தைகளின் தந்தையாவார். சாஹுல் ஹமீத் ஹஸ்புல்லாஹ்,  சமூக ரீதியான செயற்பாடுகள், இன நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அதிக அக்கறையுள்ள சமூக ஆர்வலராவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் பட்டம் பெற்ற அவர், கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியாக பல்கலைக்கழகத்தில் முதுமாணி மற்றும் கலாநிதி (MA, Ph.D.) பட்டங்களையும் பெற்றார். முசலி தெற்கு மீள்குடியேற்றம்  மற்றும் வில்பத்து சர்ச்சை தொடர்பிலான " Denying the Right to Return"  (மீள்குடியேறுவதற்கான உரிமை மறுப்பு) எனும் நூலையும் எழுதி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் தாயார் இன்று (22.09.2017) காலமானார்கள்.-

Image

கல்முனையின் காவலன் கலாநிதி ஏ.ஆர். மன்சூர் காலமானார்.

Image
கல்முனையின் காவலன் என்றழைக்கப்பட்ட கல்முனை பிரதேசத்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி ஏ.ஆர். மன்சூர் இன்று மாலை கொழும்பு தனியார் வைத்தியசாலையில் காலமானார். அவரது ஜனாஸா இன்று(2017.07.25) இரவு  விசேட விமானத்தில் கல்முனைக்கு கொண்டுவரப்பட்டு நாளை(26) கல்முனையில்  அடக்கம் செய்யப்படவுள்ளது. கல்முனை பிரதேசத்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி ஏ.ஆர். மன்சூர் அவர்கள் 1977 தொடக்கம் 1994ம் ஆண்டு வரையிலான 17 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு  மாவட்ட அமைச்சராகவும், வர்த்தக, வாணிபம் மற்றும் கப்பல்துறை அமைச்சராகவும் பணியாற்றி அரசியலிருந்து  கெளரவமாக ஓய்வு  பெற்றவர். பின்னர் சில ஆண்டுகள் குவைத் நாட்டின் இலங்கைக்கான தூதுவராகவும் பணியாற்றினார். பெரும்பாலான அரசியல்வாதிகளைப் போல் அரசியல் இருப்புக்களை தக்கவைத்துக்கொள்ள குறுக்கு வழிகளை செயற்படுத்த விரும்பாத மிகவும் நேர்மையான அரசியல்வாதியாக இறுதிவரையில் செயற்பட்டுவந்தவர். சமூக பொறுப்புகள் நிறைந்த, சமூக நெருக்கடிகளுக்கு மத்தியில் உயர்ந்த சமூக குறிக்கோள்களைக் கொண்டி

மரண அறிவித்தல்

Image
ஓய்வு பெற்ற அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா  இன்று(07) அதிகாலை காலமானார் . அவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 6.30க்கு கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலில் இடம் பெறும்

மட்டக்குளி துப்பாக்கி சூட்டில் குடும்பஸ்தர் பலி

Image
மட்டக்குளி, ஜுபிலி மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.   இவ்வாறு மரணடைந்தவர் மட்டக்குளி, சமித்புர பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான இசுறு என அழைக்கப்படும் சுபயப்பு கங்கானம்லாகே கயான் ஜீவன்த என்பவராவார்.   இன்று (05) காலை மட்டக்குளிய ஜுபிலி வீதியில் தனது குடும்பத்துடன் முச்சக்கரவண்டியை செலுத்திக் கொண்டிருந்த நபர் மீது, மோட்டார்சைக்களில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.   இச்சம்பவத்தில் பாரிய காயத்திற்குள்ளான முச்சக்கர வண்டியின் சாரதி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, மரணடைந்துள்ளார்.   இதன்போது, குறித்த முச்சக்கரவண்டியில் அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் பயணித்துள்ளதோடு, அவர்களுக்கு எவ்வித  பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   சடலம், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.   கொலைக்கான காரணம், இது வரை அறியப்படாத நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கா

பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்களின் தந்தை காலமானார்

Image
அல்ஹாஜ் எம்.ஐ ஹபீப் முஹம்மட்(பெரியதம்பி முதலாளி)அவர்கள் இன்று காலமானார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன் அன்னார் மர்ஹூம்களான முஹம்மது இஸ்மாயில் மற்றும் மீரா உம்மாவின் மகனும், உம்மு சல்மாவின் அன்புக் கணவரும் மர்ஹூம் பத்தும்மா,முஹம்மட் காசீம்,முஹம்மட் யாஸீன் ஆகியோரின் சகோதரனும் ஆவார். மர்ஹூம் இஸ்ஸடீன்,ரஹீம்,அமீர் அலி,ஹரிஸ்(விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்),பாயிஸா,பாயிதா ஆகியோரின் அன்பு தகப்பனாரும் ஆவார். பொறியியலாளர் ஏ.சீ.எம்.அன்சார்(அவுஸ்திரேலியா),டாக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான்(வைத்திய அத்தியட்சகர்-அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை)ஆகியோரின் மாமனாரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை அதாவது சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கல்முனை நூராணியா தைக்கா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களின் ஐந்தாம் ஆண்டு 'நினைவின் நிழலில்' நிகழ்வு இன்று கல்முனையில் நடைபெற்றது.

Image
உலகறிந்த கவிஞர் ''சண்முகம் சிவலிங்கம்'' அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவாக   ''நினைவின் நிழலில்'' நிகழ்வு கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை   (07.04.2017)  நடைபெற்றது. எழுத்தாளரும் கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் ஆலோசகருமான உமாவரதராஜன் தலைமையில் கல்முனை பாத்திமா தேசிய பாடசாலை கிளனி மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கவிஞர் சண்முகம் சிவலிங்கம் தொடர்பாக பேராசிரியர் சி .மௌனகுரு அவர்களின்  ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு அரங்கு ஆய்வு கூடம் வழங்கிய  'அப்பா ' கவி நாடகம் மேடையேற்றப்பட்டதுடன், நினைவு சிறப்புரையை கவிஞரும் விரிவுரையாளருமான சோ .பத்மநாதன் வழங்கினார்.  அத்துடன் ர .ஜோயல் குழுவினரால் கவிஞரின் சில  கவிதைகள் உள்ளடங்கிய ஒளித் தொகுப்பான 'வரிகளும் வடிவமும் ' திரையிடப்பட்டது.  கல்முனை தமிழ் சங்கத் தலைவர் பரதன் கந்தசாமி அவர்கள் வரவேற்புரையும்,  கல்முனைநெற் ஊடக குழுவின் இயக்குனர் கோ.பிரசாந்  நன்றியுரையையும், நிகழ்ச்சி தொகுப்பை   க. டினீஸ்கரனும்  வழங்கினர்.  இன்றைய நிகழ்வில்  பேராசிரியர் மௌனகுரு அவர்களுக்கும்