Posts

Showing posts with the label பொது விடயம்

கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் சந்திப்பு

Image
கல்முனை மாநகர சபை முன்னாள் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனை அண்மையில் கொழும்பிலுள்ள கனேடிய தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.கிழக்கு மாகாண தற்கால அரசியல் களநிலவரம், கல்முனை மாநகரத்தில் எதிர்காலத்தில் இடம்பெற வேண்டிய அபிவிருத்தி தொடர்பாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகவும்   அவர் குறிப்பிட்டார்.அத்துடன் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைத்தமை விசேட அம்சமாகும்.

ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் பற்றிய வாழ்வும் பணிகளும் நூல் வெளியீட்டு விழா

Image
 வரலாற்றுக்  கட்டுரை  எழுத்தாளரும்  முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர்  பற்றிய வாழ்வும் பணிகளும் நூல் வெளியீட்டு விழா ஏ.ஆர்.மன்சூர்  பவுண்டேஷன் ஏற்பாட்டில் நடை பெற்றது. முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர்  புதல்வரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் மர்ஹூம் மன்சூரின் பாரியார் திருமதி சொஹ்ரா மன்சூர்  முன்னிலையில்  இந்த நூல் வெளியீட்டு  விழா இடம் பெற்றது.  சனிக்கிழமை (12.01.2019) மர்ஹூம் மன்சூர் ஆரம்பக்கல்வி கற்ற பாடசாலையான கல்முனை உவெஸ்லி  உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு  விழாவில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகரத் திட்டமிடல்  தேசிய நீர் வழங்கல்  மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும், உள்ளுராட்சி மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர். ஏ.ஆர்.மன்சூர்  வாழ்வும் பணிகளும் பற்றிய நூலின் ஆய்வுரையை பேராதனைப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர்  எம்.ஏ. நுகுமான் வழங்கி யதுடன்

செஸ்டோ”99” அமைப்பின் வருடாந்த பொது ஒன்றுகூடலும் புதிய நிர்வாகத் தெரிவும்

Image
அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஏழு வருடங்களாக பல்வேறு வகையான சமூக சேவைகளில் ஈடுபட்டு  இயங்கிவருகின்ற கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் வருடாந்த பொது ஒன்றுகூடல் கடந்த சனிக்கிழமை (22) இறக்காமம் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.  இவ்வருடாந்த ஒன்றுகூடலின் போது 2019 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத்  தெரிவு  இடம்பெற்றது. இதன் போது இவ்வமைப்பின் 2019 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக இலங்கை கல்வி நிர்வாக சேவை  அதிகாரி   என்.எம்.ஏ மலீக் தெரிவு  செய்யப்பட்டதோடு செயலாளராக  எஸ்.ரீ. சதாத் , பொருளாளராக ஏ.ஏம்.இர்ஷாத் ஆகியோர்  தெரிவு  செய்யப்பட்டனர் . இதனைத் தொடர்ந்து இவ்வமைப்பின் புதிய தலைவர்  என்.எம்.ஏ மலீக் உரையாற்றும போது போது 2018 ஆம் ஆண்டில் சிறப்பாக இவ்வமைப்பை வழி நடாத்திய நிர்வாகத்தினருக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்ததோடு எதிர்வரும் வருடத்தில் இவ்வமைப்பை சிறப்பாக வழி நடாத்தி இப்பிரதேச மக்களுக்கு தேவையான சேவைகளில் ஈடுபட அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பு இன்றியமையாதது எனவும்  தெரிவித்தார் . செஸ்டோ”99” அமைப்பானது இப்பிரதேச மக்களின் நீண்ட கால தேவையாக இருந்

மக்கள் மேம்பாட்டுக்கான அமைப்பின் வருடாந்த ஒன்று கூடலும்,டீ சேட் அறிகமும்

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்,ஏ.டபள்யு. எம்.ஜெஸீல்) மருதமுனை மக்கள் மேம்பாட்டுக்கான அமைப்பின் ;( KOPE)  வருடாந்த ஒன்று கூடலும்,டீ சேட் அறிமுக நிகழ்வும் சனிக்கிழமை மாலை(15-12-2018)மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் அமைப்பின் தலைவர் எம்.ஏ.ஏ.அக்ரம் தமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய கல்விப்பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர்மௌலானா,ஓய் பெற்ற ஆசிரியை திருமதி அலாவுதீன்,கல்முனை பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ரீ.அன்சார்,கிராம சேவை உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.நஸ்மி ஆகியோர் கலந்து கொண்டனர். இங்கு அமைப்பின் உறுப்பினர்களுக்கு  டீ சேட் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டது

வரப்போகும் வரவுசெலவுத்திட்டம் கவற்சிககரமானதாக அமையும்

Image
கணக்காளர்-  ஹபீபுல்லாஹ்  எதிர்வரும் காலத்தில் அமையப்போகும் அரசாங்கத்தினால்  சமர்பிக்கப்படவுள்ள  வரவுசெலவுத்திட்டம்  கவற்சிககரமானதாக அமையும் . குறிப்பாக  இதில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு  பல அனுகூலங்கள் பெறக்கூடிய வாய்ப்பு அதிகம் ஏற்படுத்தப்படும் என நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் தெரிவித்தார். அரச அதிவிசேட  வர்த்தமானிப் பத்திரிகை 2052/26 இற்கு  அமைய அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் -1இல் உள்ள உத்தியோகத்தர்களுக்கான தடைதாண்டல் பரீட்சையில் விலக்கழிப்பினை பெற்றுக் கொள்வதற்கான தமிழ் மொழி மூல  பயிற்சி நெறி அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 75 உத்தியோகத்தர்களுக்கு  அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர்  கூடத்தில்  நடைபெறுகிறது. இபயிற்சி வகுப்பில் வளவாளராக கலந்து கொண்டு அரசின் வரவு செலவு திட்ட முறை மற்றும் வருடாந்த மதிப்பீடு ,வரவு செலவு வட்டத்தின் அறிமுகம் தொடர்பாக   உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் போதே மேற்கண்ட விடயங்களை தெளிவு படுத்தினார். கணக்காளர் மேலும் தெரிவிக்கையில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் சமர்ப்ப

கல்முனை செலான் வங்கிக் கிளையின் 7வது ஆண்டு நிறைவு விழா

Image
கிழக்கு மாகாணத்தில் வர்த்தக மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு  மேலும் 5 செலான் வங்கிக்கிளைகளை  ஆரம்பிக்கவுள்ளதாக  செலான் வங்கி பிராந்திய முகாமையாளர் எஸ்.முதாதிஸ்ஸ தெரிவித்துள்ளார் . கல்முனை செலான்  வங்கிக் கிளையின் 7வது  ஆண்டு நிறைவு விழா  வங்கி முகாமையாளர் திருமதி பிறேமினி மோகன்ராஜ் தலைமையில் சாய்ந்தமருது சீ பிரீஸ் விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (04.12.2018) நடை பெற்றது.இந்நிகழ்வில் கிழக்குப்பிராந்திய முகாமையாளர் எஸ்.முதாதிஸ்ஸ பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார் . இலங்கையில் 168 செலான் வங்கி  கிளைகள் இயங்குகின்றன . அதில் கிழக்கு மாகாணத்தில் 11 கிளைகள் இயங்கும் நிலையில் கிழக்கின் வர்த்தக மேம்பாட்டை அடிப்படையாக கொண்டு மேலும் 5 கிளைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இலங்கையில் இயங்கும் செலான் வங்கிகளுக்குள் கல்முனை கிளை 4ஆம் தரத்தில் காணப்படுகிறது கல்முனை கிளையின் சிறந்த செயற்பாட்டின் அடிப்படையில் அடுத்த ஆண்டு 3ஆம் தரத்துக்கு உயர்த்துவதற்கும் வாங்கி நிருவாகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார் . ஏழாண்டு நிறைவைக்கொண்டாடும

மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்

Image
பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் மற்றும் நீர்த் தாரைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  லோட்டஸ் வீதி சுற்றுவட்டத்துக்கு அருகில் வைத்து பொலிஸார் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

கல்முனை கடலில் இன்று மீன் மழை 1kg Rs.200

Image

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

Image
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.  92 ஒக்டைன் பெற்றோல் வகைகள் 10 ரூபாவால் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.  அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 155 ரூபாவில் இருந்த 145 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.