Posts

Showing posts with the label சட்டம்

உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

Image
பாணந்துறை எகொட உயன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில் மூவர் காயமடைந்து உள்ளதுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1933- கொரோனா பரவல் முறைப்பாட்டுக்கு மேலதிக இலக்கம்

Image
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் பொதுமக்கள், பொலிஸ் தலைமையகத்திற்கு முறைப்பாடுகளை மேற்கொள்ள 1933 எனும் புதிய தொலைபேசி இலக்கமொன்றை பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது. 1933 எனும் குறித்த தொலைபேசி இலக்கம் வழியாக, முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்பதோடு, 119 அவசர தொலைபேசி சேவைக்கும் இம்முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நாட்களில் 119 இலக்கத்திற்கு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையிலான முறைப்பாடு தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 119 அவசர அழைப்பு மத்தியநிலையத்திற்கு கிடைக்கும் அழைப்புகளால் ஏற்படும் அழைப்பு நெரிசலை தடுக்கும் நோக்கில் அவ்விலக்கத்திற்கு ஒரே நேரத்தில் கிடைக்கும் அழைப்பு எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 195 பேர் கைது

Image
இன்று மாத்திரம் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 195 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 110 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட வாகனங்கள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கும் வரையில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க படமாட்டாது எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

டிக்கோயாவில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - மீறினால் ஊருக்கு சீல்!

Image
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவலை பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் இன்று (31) தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த 12 தொடக்கம் 15 திகதி வரை டிக்கோயா தரவலை பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் நடைபெற்ற தேவ ஆராதனை தொடர்ந்து கடந்த 29 திகதி முதல் அவ் ஆலயத்தின் போதகர் உட்பட 09 பேர் ஏப்ரல் 02 திகதி வரை தனிமை படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் போது மேலும் சிலர் யாழ்ப்பாணம் தேவ ஆராதனையின் போது கலந்து கொண்டுள்ளதாக உறுதி செய்யப்படுத்தப்பட்டதை அடுத்து டிக்கோயா ஆராதனையிலும் இவர்கள் கலந்து கொண்டுள்ளதுடன் உலர் உணவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உலர் உணவு பெற்றுக்கொண்ட குடும்பங்களும் ஆராதனையில் கலந்து கொண்ட 65 குடும்பங்கள் உட்பட கொழும்பு அவதான பகுதியிலிருந்து வருகை தந்த குடும்பங்களைச் சேர்ந்த 200 குடும்பங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டன. இவர்கள் தனிமைப்படுத்தும் விதிகளை மீறும் பட்சத்தில் இத்தோட்டத்திற்கு சீல் வைக்க நேரிடும் என அம்பகமுவ பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி கிசான் பிரேமசிறி தெரிவித்தார். இதே வே

ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள மாவட்டங்கள்!

Image
கொழும்பு, கம்பஹா,புத்தளம், கண்டி, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏனைய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிரதேசங்களுக்கு பிற்பகல் 2.00க்கு பின்னர் மீண்டும் ஊரடங்கு சட்டம்

Image
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் குறித்த மாவட்டங்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு களுத்துறை புத்தளம் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தவிர்ந்த நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொண்டனர். எவ்வாறாயினும், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் அத்தியாவசிய சேவையை தவிர்ந்த ஏனைய விடயங்களுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டிருந்தது. அநேகமான பிரதேசத்தில் மக்கள் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடித்து நகரங்களில் நடந்து கொண்டமை காணக் கூடியதாய் இருந்தது. எவ்வாறாயினும் சில பிரதேசங்களில் பொது மக்களின் நடவடிக்கைகள் சுகாதார ஆலோசனைகளுக்கு எதிராக இருந்தமையை காணக்கூடியதாக

மட்டு. தற்கொலை குண்டுத்தாக்குலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது

Image
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கான எச்சரிக்கை!

Image
ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் குறிப்பிட்ட அத்தியாவசிய சேவைகளை விநியோகிக்கும் குழுவினருக்கு மாத்திரம் தத்தமது நிறுவனங்களினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை பயன்படுத்தி வீதிகளில் நடமாட முடியும் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு அனுமதி பத்திரம் தவறாக பயன்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்தார். அதேபோல் ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கைது செய்து பொலிஸ் பிணையின்றி தடுத்து வைக்கும் இயலுமை உள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

Image
கொரோனா வைரஸை நாட்டினுள் கட்டுப்படுத்தும் வரை தாங்கள் வசிக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருக்குமாறு வௌிநாட்டில் வாழும் இலங்கையர்களிடம் அரசாங்கம் கோரியுள்ளது. கொரோனா வைரஸை தடுப்பதற்கு அரசினால் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டினுள் வைரஸ் பரவலை பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக வௌிநாட்டவர்கள் வருகை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவின் போது எந்தவொரு நபரும் வீதிகளுக்கு வரக்கூடாது.

Image
மீண்டும் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு! நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை உரிய முறையில் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. கடுமையான உடல்நலப் பிரச்சினையாக மாறியுள்ள கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவின் போது, ​​அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் பணிக்குழு மக்கள் தொடர்ந்து அத்தியாவசிய உணவு மற்றும் பிற பொருட்களை வீட்டிலேயே பெற்றுக் கொள்வதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. ஊரடங்கு உத்தரவின் போது எந்தவொரு நபரும் வீதிகளுக்கு வரக்கூடாது. பணிக்குழுவால் அனுமதிக்கப்பட்ட விநியோக வாகனங்களை மட்டுமே வீதிகளில் இயக்க முடியும். ஊரடங்கு அனுமதி பத்திரம் இல்லாமல் வேறு எந்த வாகனத்தையும் இயக்க முடியாது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு நகர்த்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், விவசாயம், சிறு , பெருந்தோட்ட தேயிலை தொழிற்துறை

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்காக Contact Sri Lanka

Image
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் நலனுக்காக வெளியுறவு அமைச்சு மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றால் ´இலங்கையை அழையுங்கள்´ என்ற வழிமுறையை நேற்று (26) முதல் வெளிவிவகார அமைச்சு ஆரம்பித்துள்ளது. இந்த வலை இணைப்பு அமைச்சின் இணைய தளமான www.mfa.gov.lk இல் வழங்கப்பட்டுள்ளதுடன் இதற்குள் www.contactsrilanka.mfa.gov.lk என்ற இணைய முகவரியை பயன்படுத்தி அணுகலாம். COVID - 19 பரவலை எதிர்த்து அரசாங்கத்தின் அனைத்து பங்குதாரர்களின் முயற்சிகளையும் ஒருங்கிணைப்பதற்கும், விரைவான, வேகமான மற்றும் திறமையான சேவை வழங்கலுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. COVID -19 பரவல் போன்ற அவசர நிலைமைகளின் போது வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் இந்த தளத்தில் தம்மை பதிவுச்செய்து தமது உதவிகளை வழங்க முடியும். இந்த தளம் விரைவான நடவடிக்கைக்கு நிகழ்நேர தரவைப் பெற அமைச்சகத்தை அனுமதிக்கிறது. இந்த திறந்த அணுகல் தளம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு அரசாங்க

பொருள் கொள்வனவிற்கு கல்முனையில் மக்கள் வெள்ளம்

Image
  ஊரடங்கு சட்டம் தளர்ததப்பட்டதையடுத்து வெறிச்சோடிப் போயிருந்த கல்முனை நகரம் பொருட் கொள்வனவுக்காக சனத்திரளால் நிரம்பி வழிந்தது. கல்முனை கொரணா செயலணியின் திட்டப்படி இன்று  (26) கல்முனை பொதுச்சந்தை வியாபாரம் விளையாட்டு மைதானங்களுக்கு மாற்றப்பட்டதையடுத்து கல்முனை சந்தாங்கேணி மைதானம் மக்களால் நிரம்பி வழிந்தது. நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிசாரும், சுகாதார துறையினரும் மேற் கொண்ட நடவடிக்கைகளை தாண்டியும்  மக்கள் பொருட் கொள்வனவில் அக்கறை செலுத்தியதையும் மக்கள் அலைமோதியதையும்  அவதானிக்க முடிந்தது. எனினும் வங்கி மற்றும் வர்த்தக நிலையங்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் காணப்பட்டனர் பொருட் கொள்வனவுக்காக கல்முனைக்கு வருகை தந்த மக்களை கட்டுப்படுத்துவதில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

அரச, தனியார் ஊழியர்களுக்கான அறிவிப்பு

Image
மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை வீட்டில் இருந்து பணி புரியும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்களை வலுப்படுத்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை வீட்டில் இருந்து பணி புரியும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிறுவனங்களை தவிர அனைத்து அரசாங்க, அரை அரசாங்க மற்றும் தனியார் பிரிவுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த காலப்பகுதியினை அரசாங்க பொது விடுமுறையாக கருதாமல், பொது சேவையினை தொடர்ந்தும் பேண வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுத்து சுய தனிமைப்படுத்தலுக்கு வழிவகுத்தல் இதன் நோக்கமாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதி வீட்டிலிருந்தே பணி புரியும் வாரமாக ஏற்கனவே பிரகடனப்படுத்தப்

3 மாவட்டங்களில் மீள அறிவிக்கும் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில்

Image
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் மார்ச் மாதம் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் அன்றைய தினமே மதியம் 12 மணிக்கு மீண்டும் அமலாக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய மாவட்டங்களில் தற்போது அமலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் மதியம் 12 மணிக்கு அமலாக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏப்ரல் 15 அதிகாலை வரை ஒட்டுமொத்த இந்தியாவும் முடக்கம்- மோடி உரை

Image
இன்று இரவு சரியாக 8 மணிக்கு இந்திய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரையில், கரோனாவை சமாளிக்க சமூக விலகல் தான் ஒரே தீர்வு,கரோனா நம்மை தாக்காது என்று யாரும் என நினைக்க கூடாது. கரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் தனிமைப்படுத்தபடுகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு என்பது ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்ற எடுக்கப்பட்ட முடிவு. ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம் எனவே ஊரடங்கிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதி இல்லை. குறைந்த பட்சம் 21 நாட்கள் ஊரடங்கு பின்பற்ற வேண்டியது முதல்கட்ட தேவையாக இருக்கிறது. மக்கள் சுயகட்டுப்பாட்டுடன் இல்லை என்றால் நாம் அழிவை சந்திக்க நேரிடும். உறவினர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். பொருளாதாரத்தை விட மக்களின் பாதுகாப்பே முக்கியம். ஊரடங்கு மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் நலனே முக்கியம். இந்த 21 நாட்களை மக்கள் ஆக்கபூர்வமாக செயல்படுத்த வேண்டும். ஒருவருக

கல்முனை பிரதேச செயலக பிரிவில் நடமாடும் விற்பனைக்கு அனுமதி.

Image
எமது நாட்டில் தற்போது உள்ள கொரோனா தாக்கம் காரணமாக தொடர்ச்சியான முறையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் அன்றாடம் தங்களுக்குரிய பொருட்களை கொள்வனவு செய்யும் பொருட்டு நடமாடும் விற்பனைக்கு அனுமதி வழங்கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் தலைமையில் இன்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.அப்துல் லத்தீப்,கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்வின்,கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் எம்.ஜெளபர் கல்முனை பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம் முஹர்ரப்,பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்ஸான் உட்பட கிராம சேவகர்கள் மற்றும் நடமாடும் விற்பனையாளர் என பலர் கலந்து கொண்டனர்.

ஊரடங்கு வேளையிலும் கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட முடியும்

Image
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நேரத்திலும் நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட முடியும் என்றும் கடற்றொழில் சார் அடையாளத்தை உறுதிப்படுத்துபவர்கள் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையிலும் தொழிலசார் போக்குவரத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுவர் எனவும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற ஊரடங்கு சட்டம் காரணமாக ஆழ்கடலில் இருந்து பிடித்து வரப்படுகின்ற கடலணவுகளை இறக்குவதற்கும் அவற்றை ஏனைய இடங்களுக்கும் எடுத்துச் செல்வதற்கும் முடியாமல் இருப்பதாகவும் இதன் காரணமாக பெருந் தொகையான நஸ்டத்தை எதிர்கொள்ளும் சூழல் உருவாகி இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து டிக்கோவிற்ற துறைமுகத்திற்கு இன்று (24 ) நேரடியாக விஜயம் மேற்கொண்ட அமைச்சர், நிலமைகளை நேரடியாக அவதானித்ததுடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் மேற்கொண்ட ஆலோசனைகளையடுத்து மேற்குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஆழ்கடலில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களை

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது மருந்தகங்களை திறக்க நடவடிக்கை

Image
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் படி ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டதன் காரணமாக, வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களிலிருந்து நாள்தோறும் மருந்துகளை பெற்றுக் கொள்ளும் ஏராளமான நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலைமையை கருத்திற் கொண்டு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு ஒரு விசேட திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி, அனைத்து மருந்தகங்களையும் அத்தியாவசிய தேவை கருதி ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது திறப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. நோயாளியின் மருத்துவ சான்றிதழ் மற்றும் மருந்து சீட்டை இதற்கான அனுமதிப்பத்திரமாக ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் கருத்திற் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளது. மேலும், மருந்தகங்களில் தொழில் புரியும் ஊழியர்களுக்கும் மற்றும் மருந்துகளை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் இதன்போது அனுமதி வழங்குமாறும் பொலிஸ்மா அதிபரிடம் சுகாதார அமைச்சு கோரியுள்ளது.

கொரோனா தொற்று - அதிக அவதானம் நிறைந்த 3 மாவட்டங்கள் அறிவிப்பு!

Image
கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலில் அதிக அவதானம் நிறைந்த மாவட்டங்களாக கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வெளியேறினர்

Image
தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 311 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களான புனானை மற்றும் கந்தகாடு ஆகிய முகாம்களில் கடந்த 14 நாட்களாக மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டவர்களுக்கு எவ்விதமான நோய்த்தொற்றும் இல்லை என்பது கண்டறியப்பட்டதையடுத்து இவர்களை தங்களின் குடுப்பங்களுடன் ஒன்றினைக்கும் பணி இன்று இரானுவத்தினரினால் முன்னெடுக்கப்பட்டது பஸ் மூலமாக புனானை முகாமில் இருந்து மத்தறைக்கும் இரண்டு பஸ்கள் மூலமாக கொழும்புக்கும் கண்டிக்குமாக இவர்கள் 9.50 மணியளவில் பொலிஸ் பாதுகாப்புடன் இரானுவத்தினர் இவ்வாறு அழைத்து செல்லப்பட்டதாக எமது மட்டக்களப்பு ஊடகப்பிரிவு தெரிவித்துள்;ளது கந்தக்காடு பகுதியில் இருந்து 108 பேர்கள் இரானுவத்தினரினால் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.