16-17 ஆம் திகதிகளில் மதுபான சாலைகளுக்கு பூட்டு
நாடு பூராகவும் உள்ள மதுபான சாலைகளை எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் ஒன்றை நடத்தும் நோக்கில் தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைவாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தால் இந்த உத்தரவு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதி மதுவரித் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.
அதன்படி, மேற்படி உத்தரவை மீறி செயற்படும் நபர்களை தேடி நாடு பூராகவும் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள சுமார் ஆயிரம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கபில குமாரசிங்க மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment