கல்முனை அருள்மிகு ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா
அம்பாறை மாவட்டத்தில் மிகப் பழமைவாய்ந்த இந்து ஆலயங்களில் ஒன்றான கல்முனை அருள்மிகு ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 10ஆம் நாள் சடங்கான சப்பற திருவிழா வெள்ளிக் கிழமை பெருந் திரளான பக்த அடியார்கள் புடை சூழ மிக சிறப்பாக நடை பெற்றது
கடந்த மாதம் திங்கட் கிழமை (27) கொடியேற்றத்துடன் ஆரம்பமான திரு விழா தொடராக பூஜை வழிபாடுகள் இடம் பெற்று சனிக் கிழமை (11) தீர்த்தோற்சவதுடன் நிறைவு பெற்றன .
உற்சவ காலத்தின் போது பஞ்சமுக அர்ச்சனை தீபத் திருவிழா இபக்தி முக்தி பாவநோற்சவம்இ வேட்டைத்திருவிழாஇபுஸ்பாஞ்சலி திருவிழா இகற்பூர சட்டி திருவிழா என்பன இடம் பெற்று நேற்று வெள்ளிக் கிழமை மக்கள் புடை சூழ சப்பறத்திருவிழா இடம் பெற்றது.
இதன் போது விநாயகப் பெருமான் எழுந்தருளி அரோகரா சத்தம் முழங்க யானை மீது அமர்ந்து ஊர்வலமாக கல்முனை மாநகர் ஊடாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
ஆலயத்தின் பிரதம குரு வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ கமலதேவதா~க் குருக்கள் தலைமையில் உற்சவ கால கிரியைகள் மஹோற்சவ பிரதம குரு சங்கானை வேதகாம கலா வித்தகர் பிரம்மஸ்ரீ நித்திய சிவாநந்தா குருக்களினால் நடாத்தி வைக்கப் பட்டன
Comments
Post a Comment