மார்ச் 12 இயக்கம் நாடளாவிய ரீதியில் நடாத்தும் அரசியல் தலைவர்கள் மற்றும் வாக்காளர் சந்திப்பு



மார்ச் 12 இயக்கம் நாடளாவிய ரீதியில் நடாத்தும் அரசியல் தலைவர்கள் மற்றும் வாக்காளர் சந்திப்பு கல்முனை பஸ் நிலையம் முன்பாக நாளைமாரு தினம் (25)இடம் பெறவுள்ளது

இலங்கை அரசியல் கலாசாரத்தில் ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு செயற்படும் மார்ச் 12 இயக்கம் எதிர்வரும் உள்@ரதிகார சபைத்தேர்தலில் “புதிய உள்@ரதிகார சபைத்தேர்தல் முறையுடன் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றைக் கட்டியெழுப்புவோம்.”என்ற தொனிப்பொருளில் நாட்டிலுள்ள சகல மாவட்டங்களும் உள்ளடங்கும் வண்ணம் நாடளாவிய விழிப்புணர்வு  வேலைத்திட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி மார்ச் 13 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகும் மக்களை  விழிப்புணர்வு  செய்யும்  வேலைத் திட்டம் ஊடாக ஒவ்வொரு கிராமத்திலுள்ள மக்கள் விழிப்புணர்வு  செய்யப் படுவதோடு அந்தந்த  மாவட்டத்திலுள்ள அரசியல் அதிகார பீடத்தினுடனும் உரையாடல்களை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வேலைத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டதிலுமுள்ள சமயத் தலைவர்கள் உட்பட அரச பணியாளர்கள் , தொழிற்சங்கத் தலைவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அத்துடன் பிரதேச மக்களையும் இணைத்துக் கொண்டு நடாத்தப்படவு ள்ள மாவட்டக் கலந்துரையாடலில்  எதிர்வரும் உள்ளுரதிகார சபைத் தேர்தலில் வட்டார முறையில் தெரிவு  செய்யப்படும் வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய நியதிகள் , விகிதாசார பிரதிநிதித்துவம் தொடர்பான பட்டியல் தயாரிக்கப்படும் போது  கவனத்தில் கொள்ளவேண்டிய நியதிகள் , பெண்களுக்கான 25வீத பிரதிநிதித்துவம்  தொடர்பான பட்டியல் தயாரிக்கப் படும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய நியதிகள்அ,ரசியல் கலாச்சாரத்தில் ஆக்க பூர்வமான மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக கட்சிகளால் எடுக்க முடியுமான நடவடிக்கைகள் போண்ற விடயங்கள் பற்றி அரசியல் பிரமுகர்களின் கட்சி நிலைப்பாடு பற்றி  மக்களுக்கு விளக்கமளிப்பதற்கான ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி