மார்ச் 12 இயக்கம் நாடளாவிய ரீதியில் நடாத்தும் அரசியல் தலைவர்கள் மற்றும் வாக்காளர் சந்திப்பு
மார்ச் 12 இயக்கம் நாடளாவிய ரீதியில் நடாத்தும் அரசியல் தலைவர்கள் மற்றும் வாக்காளர் சந்திப்பு கல்முனை பஸ் நிலையம் முன்பாக நாளைமாரு தினம் (25)இடம் பெறவுள்ளது இலங்கை அரசியல் கலாசாரத்தில் ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு செயற்படும் மார்ச் 12 இயக்கம் எதிர்வரும் உள்@ரதிகார சபைத்தேர்தலில் “புதிய உள்@ரதிகார சபைத்தேர்தல் முறையுடன் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றைக் கட்டியெழுப்புவோம்.”என்ற தொனிப்பொருளில் நாட்டிலுள்ள சகல மாவட்டங்களும் உள்ளடங்கும் வண்ணம் நாடளாவிய விழிப்புணர்வு வேலைத்திட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மார்ச் 13 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகும் மக்களை விழிப்புணர்வு செய்யும் வேலைத் திட்டம் ஊடாக ஒவ்வொரு கிராமத்திலுள்ள மக்கள் விழிப்புணர்வு செய்யப் படுவதோடு அந்தந்த மாவட்டத்திலுள்ள அரசியல் அதிகார பீடத்தினுடனும் உரையாடல்களை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வேலைத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டதிலுமுள்ள சமயத் தலைவர்கள் உட்பட அரச பணியாளர்கள் , தொழிற்சங்கத் தலைவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், சிவில் அமைப்...