இராஜ கோபுரம் திறந்து வைக்கும் நிகழ்வு
கல்முனை மாநகர் ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலய புனராவர்த்தன இராஜ கோபுரம் திறந்து வைக்கும் நிகழ்வு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (17) இடம் பெறும் .
பஞ்சமி திதியும் விஷாக நட்சதிரமும் இடப லக்கினமும் கூடிய நேரம் காலை 9.19 முதல் 10.49மணி வரையான சுப முகூர்த்தத்தில் ஆலய இராஜ கோபுரம் திறந்து வைக்கப் பட்டு கும்பாபிஷேகம் நடை பெறும் .
வியாழக் கிழமை மாலை நாளை (16) விநாயகர் வழிபாடு, புண்ணியவாசனம் சாந்திக்கு கிரியைகள் என்பன நடை பெற்று இன்று வெள்ளிக்கு கிழமை காலை 7.30 மணிக்கு விநாயகர் வழிபாடு புண்ணியவாசனம் , யாக மண்டப பூசை ,விசேட தீபாராதனை ,வேத தோத்திர,நாத கீத மங்களங்கள் முழங்க குறித்த நேரத்தில் இராஜ கோபுர கும்பாபிஷேகம் நடைபெற்று பிரசாதம் வழங்கப் படும் .
Comments
Post a Comment