ஏ.எம். பறக்கத்துல்லாஹ் எழுதியுள்ள கல்முனை மாநகரம்: உள்ளூராட்சி மற்றும் சிவில் நிருவாகம் என்ற நூலுக்கு பேராசிரியர் நுஹ்மான் வழங்கியுள்ள அணிந்துரை குறிப்புகள்




இலங்கையின் உள்ளூராட்சி வரலாறு மிகத் தொன்மையானதுசிங்கள மன்னர் காலத்தில் மிக வளர்ச்சியடைந்த ஒருஉள்ளூராட்சி முறை இங்கு நிலவியதுஇன்றைய மாவட்டங்கள் போன்ற ஒரு நிருவாகப் பிரிவு சிங்கள மன்னர்காலத்தில் இருந்ததுஇது திசாவை எனப்பட்டதுஇதை நிருவகித்த அதிகாரிகளும் திசாவை என்றேஅழைக்கப்பட்டனர்போத்துக்கேயர் இலங்கையின்   கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றிய காலத்தில் கோட்டைராசதானி நான்கு திசாவைகளாகப் 
பிக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகிறதுபிரித்தானியர் கண்டி ராச்சியத்தைக்கைப்பற்றியபோது அது பன்னிரண்டு திசாவைகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததுதிசாவைகள் பல கோரளைகளாகவும்,கோரளைகள் பல பற்றுகளாகவும்பற்றுகள் கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தனகிராம நிருவாகம்கிராமசபைகளால் (கம்சபாமேற்கொள்ளப்பட்டனஉள்ளூராட்சி நிருவாகத்தில் கிராம சபைகள் கீழ் அலகுகளாகவும்திசாவைகள் மேல் அலகுகளாகவும் இருந்தனஇவற்றின்   அதிகாரங்கள் மரபுரீதியாக வரையறுக்கப்பட்டிருந்தன.

                இலங்கையின் கரையோரப்பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சிசெய்த போத்துக்கேயரும் டச்சுக்காரரும் இந்தஉள்ளூராட்சி நிருவாக முறையில் அதிகமாற்றங்களைச் செய்யவில்லைஆனால்இவர்களை அடுத்துஆட்சிக்குவந்த பிரித்தானியர் (1796 - 1948) உள்ளூராட்சி முறையில் பல மாற்றங்களைச் செய்தனர். 1818ல் இவர்கள்கம்சபா முறையை ஒழித்தனர்எனினும் 1833ல் கோல்புறூக் கொமிசன் பிறிதொருவகையில் கம்சபா முறையை அறிமுகப்படுத்தியது. 1856ல் கம்சபா முறை மீண்டும் நடைமுறைக்குவந்ததுஎனினும் அரசாங்க அதிபரே இதன்உறுப்பினர்களை நியமித்தார்சபைக் கூட்டங்களுக்கு அவர் அல்லது உதவி அரசாங்க அதிபர் தலைமைதாங்கினார்.

                19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து பிரித்தானிய அரசு உள்ளூராட்சி முறையில் பல மாற்றங்களைக்கொண்டுவந்ததுமுனிசிப்பல் கவுண்சில் சட்டத்தின் மூலம் 1865ல் கொழும்பிலும் கண்டியிலும் இரண்டு மாநகரசபைகள் அமைக்கப்பட்டன. 1871ல் கொண்டுவரப்பட்ட கிராமக் குழுக்கள் (ஏடைடயபந ஊழஅஅவைவநநளசட்டத்தின்மூலம் உள்ளூர் நிருவாகத்துக்காக கிராம குழுக்களும் நீதிபரிபாலனத்துக் காகக் கிராம நீதிமன்றங்களும்உருவாக்கப்பட்டன.

                1892ல் சிறு நகரங்களில் மின்சாரம்நீர் வழங்கல்வடிகால்பொதுவசதிகள்சந்தைகள் போன்றவற்றைப்பரிபாலிப்பதற்காக சுகாதார சபைகள் (ளுயnவையசல டீழயசனளஉருவாக்கப்பட்டனஇதற்குரிய அதிகாரிகள்கவர்னரால் நியமிக்கப்பட்டனர்.  பெரிய நகரங்களில் இத்தகைய நிருவாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக1898ல் உள்ளூர்ச் சபைகள் (டுழஉயட டீழயசனளஉருவாக்கப்பட்டன.

                1920ல் கொண்டுவரப்பட்ட உள்ளூராட்சிச் சட்டம் நகர மாவட்ட சபைகள்கிராம மாவட்ட சபைகள்பொதுச்சபைகள் என மூன்று வகையான உள்ளூர் நிருவாக அமைப்புகளை உருவாக்கியதுஇவற்றுக்கான உறுப்பினர்கள் vதெரிவு செய்யப்பட்டார்கள். 1933ல் டொனாமூர் கொமிசன் உள்ளூர் ஆட்சி முறையிலும் புதிய சீர்திருத்தங்களைஅறிமுகப்படுத்தியதுமுன்னைய உள்ளூர்ச் சபைகள் கலைக்கப்பட்டு பெரிய நகரங்களுக்காக நகர சபைகளும்(Urban Council சிறிய நகரங்களுக்காகப் பட்டின சபைகளும் (Town Councilஉருவாக்கப்பட்டன. 1939ல்நகர சபைகளும், 1946ல் பட்டின சபைகளும் நடைமுறைக்கு வந்தன.
                சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கையில் மாநகர சபைகள்நகர சபைகள்பட்டின சபைகள்கிராம சபைகள் என நான்கு உள்ளூராட்சி அமைப்புகள் நடைமுறையில் இருந்தன. 1952ல் இச்சபைகளின் அதிகாரங்கள்அதிகரிக்கப்பட்டன.

                1980ல் பட்டின சபைகளும் கிராம சபைகளும் ஒழிக்கப்பட்டு மாவட்ட சபைகள் உருவாக்கப்பட்டன. 1987ல்கொண்டுவரப் பட்ட 13ஆவது அரசியல் அமைப்புச் சீர்திருத்தத்தின்படி புதிதாக மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.அத்தோடு மாவட்ட சபைகள் ஒழிக்கப்பட்டு 1988ல் பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டன. 13ஆவது அரசியலமைப்புச்சீர்திருத்தத்தின் கீழ் இன்றுவரை உள்ளூராட்சி நிருவாகத்தின் அலகுகளாக மாநகர சபைகளும் நகரசபைகளும்பிரதேச சபைகளுமே நடைமுறையில் உள்ளன.
               
                உள்ளூராட்சி முறைக்குச் சமாந்தரமாக மத்திய அரசின் சிவில் நிருவாக அமைப்புமுறை ஒன்றும்மன்னராட்சிக் காலத்திலிருந்து தொடர்ந்து நிலவிவந்திருக்கிறதுமுதலியார்உடையார்வன்னியனார் போன்றபதவிகளை காலனித்துவ ஆட்சியாளர்களும் குறிப்பாக ஆங்கிலேயரும் பேணிவந்திருக்கிறார்கள்ஆயினும்,ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே இன்றைய சிவில் நிருவாக முறை நடைமுறைக்குவந்ததுஆங்கில ஆட்சியாளர்1833ல் இலங்கை சிவில் சேவையை  ஏற்படுத்தினர்இலங்கை மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொருமாகாணத்துக்கும் அரசாங்க அதிபர்கள்  நியமிக்கப்பட்டனர்அவர்களின் கீழ் பல உயர் அதிகாரிகள்பணியாற்றினர்ஆரம்பத்தில் ஆங்கிலேயர்களே இப்பதவிகளை வகித்தனர். 1931ல் டொனாமூர் சீர்திருத்தம்அறிமுகப்படுத்தப்பட்டபின் இலங்கையரும் இப்பதவிகளில் நியமிக்கப்பட்டனர்வன்னிமை என்னும் உள்ளூர் சிவில்நிருவாக அதிகாரிகளாக ஆங்கிலம் படித்த சுதேசிகளே நியமிக்கப்பட்டனர். 1946ல் வன்னிமை முறை ஒழிக்கப்பட்டுஅதனிடத்தில் பெரும்பாக இறைவரி அதிகாரிகள் (னுசுழுநியமிக்கப்பட்டனர்சுதந்திரத்தின் பின் 1963ல் இலங்கைசிவில் சேவை ஒழிக்கப்பட்டு அதனிடத்தில் இலங்கை நிருவாக சேவை  அறிமுகப்படுத்தப்பட்டது. 1972ல்இலங்கை குடியரசாக மாறியபோது இலங்கை நிருவாக சேவை ளுடுயுளு எனப் பெயர்மாற்றம் பெற்றது.

                பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலத்தில் நிலவிய  சிவில் நிருவாக முறையே இன்றுவரை பல்வேறுபெயர் மாற்றங்களுடன் தொடர்கின்றது எனலாம்கச்சேரிஅரசாங்க அதிபர்உதவி அரசாங்க அதிபர் என்பனமாவட்டச் செயலகம்மாவட்டச் செயலாளர்பிரதேச செயலாளர் என மாற்றம் பெற்றனவிதானை அல்லது கிராமத்தலைவர் என்பன கிராம சேவகர் அல்லது கிராம நிலதாரி எனப் பெயர்மாற்றம் பெற்றன.இன்று இலங்கையின் மாவட்ட நிருவாகம் ஒரு மாவட்டச் செயலாளரையும்அவரின்கீழ் பல பிரதேசச்செயலாளர்களையும் அவர்களின் கீழ் பல கிராம சேவகர்களையும் கொண்டதாக அமைந்துள்ளது.

                இலங்கையில் உள்ளூராட்சி சிவில் நிருவாகம் பற்றிய இச்சுருக்கமான வரலாற்றுப்   பின்னணி சகோதரர் .எம்பறக்கத்துல்லாஹ் எழுதியுள்ள கல்முனை மாநகரம்உள்ளூராட்சி மற்றும் சிவில் நிருவாகம் என்ற இந்நூலின்முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதற்கு உதவும் என்று நம்புகின்றேன்பொதுவாக இலங்கையின் உள்ளூராட்சிநிருவாக வரலாறு பற்றிய நூல்களும் ஆய்வுகளும் வெளிவந்துள்ள அளவுக்கு பிரதேசரீதியில் ஒரு குறிப்பிட்டபிரதேசத்தின் உள்ளூராட்சி வரலாறுஅதில் மக்களின் பங்குபற்றல் பற்றிய நூல்களும் ஆய்வுகளும் இல்லை என்றேசொல்லவேண்டும்கடந்த இரண்டு மூன்று தசாப்பங்களில் பிரதேச வரலாறு பற்றிகுறிப்பாகஇலங்கைமுஸ்லிம்களின் பிரதேச வரலாறுகள் பற்றி அநேக நூல்கள் வெளிவந்துள்ளனஅவை பெரிதும் கிராமபிரதேசஅல்லது மாவட்ட மட்டத்திலான பொது வரலாறுகளாகவே உள்ளனஅவ்வகையில் இந்நூல் வித்தியாசமானது.

                பிரித்தானியர் காலத்திலிருந்து இன்றுவரை கல்முனைப் பிரதேசத்தின் உள்ளூராட்சி வரலாற்றுத்தகவல்களை அரிதில் முயன்று தேடிச் சேகரித்துஅவற்றை நிரல்படுத்திப் பல தலைப்புகளில் தொகுத்து ஒரு நூலாகநமக்குத் தந்திருக்கிறார் நூலாசிரியர் பறக்கத்துள்ளாஹ்இவர் கல்முனைக் குடியில் பிறந்தவர்சமூக அக்கறையும்அரசியல் ஈடுபாடும் மிக்க இளைஞர்தற்போது கல்முனை மாநகரசபை உறுப்பினராக உள்ளார்அவருடைய ஆர்வமேஇந்நூலின் அடிப்படைகல்முனைப் பிரதேசத்தின் முழுமையான வரலாற்றை பெரிய அளவில் கொண்டுவரவேண்டும்என்ற அவரது பேராவலின் முதல் கட்டமாக இந்நூலை நமக்குத் தந்துள்ளார்அடுத்த நூல்களுக்கான தகவல்களையும்அவர் சேகரித்துவருகிறார்பலர் சேர்ந்து செய்ய வேண்டிய காரியத்தை அவர் தனி ஒருவனாகச் செய்கிறார்.

                இலங்கையின் உள்ளூராட்சிசிவில் நிருவாக வரலாற்றின் ஒரு பகுதியே கல்முனைப் பிரதேசத்தின்உள்ளூராட்சிசிவில் நிருவாக வரலாறுஇது நுண்ணாய்வு வகையைச் சேர்ந்ததுநமது சொந்த வரலாற்றுவளர்ச்சியின் ஒரு பகுதியை இந்நூல் நமக்கு விரிவாகத் தருகின்றதுஇதற்குப் பின்னாலுள்ள ஆர்வமும் முயற்சியும்அளப்பரியதுசமூகம் அவருக்குக் கைகொடுத்து உதவவேண்டும்நூலாசிரியருக்கு எனது பாராட்டுகளும்வாழ்த்துகளும்

எம்.நுஃமான்
கல்முனை.
04.11.2015

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்