Posts

Showing posts from January, 2016

உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை பெப் 1 - 29 வரை!

Image
2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களை பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவங்கள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களை  www.doenets.lk   என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பாடசாலை பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் அதிபர் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை அவர்களாகவே பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னதாக கிடைக்கும் வகையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், பரீட்சைகள் திணைக்களம், தபால் பெட்டி இல 1503, கொழும்பு. என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்முனையில் வெற்றிகரமாக நிறைவு பெற்ற விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய தேசிய வாரத்தின் இறுதித் தின விழா

Image
விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய தேசிய வாரத்தின் இறுதித் தினமான நேற்று  (30) சனிக்கிழமை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் கல்முனையில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப் பட்ட  பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் காலை முதல் மாலை வரை வெற்றிகரமாக நடை பெற்று முடிந்தது. விளையாட்டு மற்றும் உடல் ஆராக்கிய தேசிய வாரத்தை முன்னிட்டு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் வழிகாட்டலின் கீழ்  அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச செயலகங்கள் ஊடாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன . கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகம், கல்முனை தமிழ் பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை பொலிஸ் நிலையம், வலயக் கல்வி அலுவலகம் , பாடசாலை சமூகம் மற்றும் ஏனைய திணைக்களங்கள், விளையாட்டுக்கழகங்கள், விளையாட்டு ஆர்வலர்கள் ஆகியோர் இணைந்த இந்த விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்திருந்தனர் . காலை 7.00 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியது . இதில் முதல் நிகழ்வாக மக்களுக்கு விழிப்புணர்வ...

கல்முனையில் நாளை....தேசிய உடல் ஆரோக்கிய வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள்

Image
விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய தேசிய வாரத்தின் இறுதித் தினமான நாளை (30) சனிக்கிழமை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் கல்முனையில் பிரமாண்டமான முறையில் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் காலை முதல் மாலை வரை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகம், அரச நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டலில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான விளையாட்டு மற்றும் உடல் ஆராக்கிய தேசிய வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விஷேட விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளும் உடல் ஆரோக்கிய நிகழ்வுகளும் கடந்த 5 நாட்களாக வௌ;வேறு தொனிப்பொருளில் இடம்பெற்றன. விளையாட்டு மற்றும் உடல் ஆராக்கிய தேசிய வாரத்தை முன்னிட்டு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் வழிகாட்டலின் கீழ் நாளை அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச செயலகங்கள் ஊடாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகம், கல்முனை தமிழ் பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை பொலிஸ் நிலையம், பாதுகாப்ப...

கல்விக்கு கை கொடுக்கும் கல்முனை மனித வள அபிவிருத்தி அமைப்பு

Image
கல்முனை மனித வள அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் பிரதேச வறிய மாணவர்களின் கல்வித்தாகத்தை போக்கி அவர்களின் வாழ்க்கையில் எழுச்சியை உண்டு பண்ணும் நோக்கில் பாடசாலைகளின் வறிய மாணவர்களுக்கு இலவசமாக கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.   கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம்  வித்தியாலயத்தின் அதிபர் ஏ.சி.எம். அபூபக்கர்  தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்  பிரதம அதிதியாக  கலந்து கொண்டார் . கல்முனை மனித வள அபிவிருத்தி அமைப்பின் பிரதித் தலைவரும் கல்முனை பெரியபள்ளிவசல் பேஷ் இமாமுமான எம்.சி.ஏ.சமட் மௌலவி ,அமைப்பின் செயலாளர் எஸ்.எல்.எம்.இப்றாஹிம் பொருளாளர்  ஏ.ரஹீம்  மற்றும்  அமைப்பின் ஆலோசகர்களான வைத்தியர்கள்  ஜெசீலுல்  இலாஹி, ஏ.எல்.எம்.பாறூக்  உட்பட  முக்கிய பலர்  கலந்து கொண்டு  மாணவர்களுக்கு கற்றல் உபகரங்களை வழங்கி வைத்தனர். இந்நிகழ்வில் மேற்படி அமைப்பின் அங்கத்தவர்கள்,பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொ...

சீருடை வவுச்சர்கள் பெப்ரவரி வரை செல்லுபடியாகும்

Image
இவ்வாண்டுக்காக வழங்கப்பட்ட சீருடை வவுச்சர்கள் பெப்பரவரி மாதமும் செல்லுபடியாகும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. குறித்த சீருடை வவுச்சர்களை பயன்படுத்தி பாடசாலை சீருடைகளை பெற்றுக்கொள்வது ஜனவரி மாதம் 31ஆம் திகதி மட்டுமே செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பெப்ரவரி மாதம்  இறுதி வரை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை இவ்வவுச்சர்களை பயன்படுத்தி சீருடைகளை பெற்றுக்கொள்ளாதவர்களும் மேலுமொரு சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கில் வவுச்சர் செல்லுபடியாகும் காலத்தை நிட்டிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் மருதமுனை பி.எம்.எம்.ஏ.காதர் சமாதானத் தூதுவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Image
மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் இலங்கை சமாதானக் கற்கைகள் நிலையத்தினால் 2015ஆம் ஆண்டுக்கான“சமாதானத் தூதுவர்” விருது வழங்கி கெரவிக்கப்பட்டார். ஊடகத்துறையின் மூலம் இன நல்லுறவுக்கும்,சமாதானத்திற்கும் இவர் ஆற்றிவரும் பெரும் பங்களிப்புக்காகவே இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்வு  இலங்கை சமாதானக் கற்கைள் நிலையத்தின் சம்மாந்துறை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.இதன் போது இலங்கை சமாதானக் கற்கைள் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் இந்த “சமாதானத் தூதுவர்” விருதை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டொக்டர் ஐ.எல்.அப்துல் மஜீட்,கல்முனை பிரதேச செயலக சிரேஷ்ட திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,கெப்சோ நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் காலிம் இம்தாத்,வர்த்தகர் எம்.எச்.அஹமட் அஜ்மீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

கல்முனை பொலிசாரின் விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு நிகழ்ச்சி

Image
உடல் ஆரோக்கிய வாரத்தை முன்னிட்டு  கல்முனை பொலிசாரின் விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய  மேம்பாட்டு நிகழ்ச்சி திட்டம் கல்முனை பொலிஸ்  நிலையப் பொறுப்பதிகாரி  ஏ.டபிள்யு .ஏ.கப்பார் தலைமையில்  இன்று  (28) கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் இடம் பெற்றது. உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட அனைத்து பொலிஸ்  அதிகாரிகளும் பொலிஸ்  நிலையத்தில் இருந்து கால் நடையாக கல்முனை வடக்கு  ஆதார வைத்திய சாலைவரை சென்று  மீண்டும் கல்முனை நகரை அடைந்து கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் உடற் பயிற்சியில் ஈடுபட்டனர்