கல்முனையில் வெற்றிகரமாக நிறைவு பெற்ற விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய தேசிய வாரத்தின் இறுதித் தின விழா

விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய தேசிய வாரத்தின் இறுதித் தினமான நேற்று  (30) சனிக்கிழமை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் கல்முனையில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப் பட்ட  பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் காலை முதல் மாலை வரை வெற்றிகரமாக நடை பெற்று முடிந்தது.

விளையாட்டு மற்றும் உடல் ஆராக்கிய தேசிய வாரத்தை முன்னிட்டு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் வழிகாட்டலின் கீழ்  அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச செயலகங்கள் ஊடாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன .

கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகம், கல்முனை தமிழ் பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை பொலிஸ் நிலையம், வலயக் கல்வி அலுவலகம் , பாடசாலை சமூகம் மற்றும் ஏனைய திணைக்களங்கள், விளையாட்டுக்கழகங்கள், விளையாட்டு ஆர்வலர்கள் ஆகியோர் இணைந்த இந்த விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்திருந்தனர் .

காலை 7.00 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியது . இதில் முதல் நிகழ்வாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடை பவனி  இடம் பெற்றது . இதில் பிரதி அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள், மூன்று பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், முப்படையினர், பாடசாலை மாணவர்கள், விளையாட்டுக் கழகங்களின் வீரர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நடை பவனி  சாய்ந்தமருது அல்-கமறூன் வித்தியாலயத்தின் முன்பாகவும் ,கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை முன்பாகவும்  இருந்து ஆரம்பிக்கப் பட்டது .


இதனைத் தொடர்ந்து மரதன் ஒட்டம் இடம் பெற்றது .. இந்நிகழ்வு நீலாவணை விஷ்னு வித்தியாலயத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு கல்முனை பிரதான வீதி வழியாக சாய்ந்தமருதை வந்தடைந்தது . இந்நிகழ்வினை பிரதி அமைசர் ஹரீஸ் ஆரம்பித்து வைத்தார் . இதனை அடுத்து கிரிக்கெட் சுற்று போட்டி சந்தாங்கேணி மைதானத்தில் இடம் பெற்றது .

மாலை நேர நிகழ்வுகள் பிற்பகல் 3.00 மணிக்கு கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது. இதில் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் வீரர்களை கொண்டு ஒரு கண்காட்சி உதைபந்தாட்ட போட்டி இடம் பெற்றது . அத்துடன் 40 வயதுக்கு கீழ்பட்ட மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளும் இடம் பெற்றதுடன்  கராத்தே போட்டியும் இடம் பெற்றது .

இறுதியாக போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றி வீரர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இடம் பெற்றது . இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ்  செய்க்  அமீர்,கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்  உட்பட  பலர்  கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணங்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தனர்



























Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது