நற்பிட்டிமுனை லாபீர் முன்பள்ளிப் பாடசாலை வருடாந்த பரிசளிப்பு விழா

நற்பிட்டிமுனை லாபீர்  முன்பள்ளிப்  பாடசாலை  வருடாந்த பரிசளிப்பு விழா இன்று  (20)   பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில்  லாபீர் வித்தியாலய பிரதான மண்டபத்தில்  இடம் பெற்றது .

பழைய மாணவர் அமைப்பின் சார்பில் கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.எம்.ஆஸாத்  தலைமையில்  இடம் பெற்ற இவ்விழாவில்  தென்கிழக்குப் பல்கலைக்கழக  சிரேஸ்ட விரிவுரையாளர்  கலாநிதி எச்.எம்.எம்.நளீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் .  கௌரவ
அதிதியாக   கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜஹ்பர்  , வலயக் கல்வி அலுவலக திட்ட உத்தியோகத்தர்  சி.எம்.நஜீப் , லாபீர் வித்தியாலய பிரதி அதிபர் எம்.எல்.எம்.அஸ்ரப் , பகுதி தலைவர் மௌலவி .எம்.ரீ.ஏ.மனாப் ஆகியாகியோரும் கலந்து சிறப்பித்தனர் .

அங்கு மாணவர்களின் கலை நிகழ்வுகளும்  மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவமும் இடம் பெற்றது. அறிவிப்பாளர்  வீ.எம்.மக்பூல்  தொகுப்பில்  நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப் பட்டு  சிறப்பாக நடைபெற்றன .














Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்