மன உளைச்சல் அப்துல்லாவும் ,அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் கௌரவிப்பும்
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் நிதி மோசடி என்ற தலைப்பில் Srilanka Muslim இணையத்தில் வெளியாகி உள்ள செய்திக்கான விளக்கம் - சம்மேளனத்தின் பொருளாளர் யு.எம்.இஸ்ஹாக்
முதலில் நான் தெரிவித்துக் கொள்வது இந்த அப்துல்லா என்ற ஊடகவியலாளர் எமது சங்கத்தில் உள்ளவராக இருந்தால் அவர் முள்ளந்தண்டுள்ள ஆண் மகனானால் எங்களுடைய சம்மேளனக் கூட்டம் நடை பெற்ற போது இவற்றை எல்லாம் கேட்டு தெளிவு கண்டிருக்கலாம் . இவ்வாறான செய்திகளை அனுப்பும் போலிப் பெயர் வழி காரர்களின் செய்திகளை பிரசுரிக்கும் இணையங்கள் இதன் உண்மை தன்மையை உறுதிப் படுத்திய பின்னர் வெளியிட வேண்டும் அது தொடர்பாக சம்பந்தப் பட்டவர்களின் கருத்தையும் கேட்டு பிரசுரிக்க வேண்டும் . என்பது எனது தயவான கருத்து .
அப்துல்லா செய்தியாளனாக இருந்திருந்தால் அவர் எமது சங்கத்தில் அங்கத்தவராக இருந்திருந்தால் இதனை என்னிடம் கேட்டு தெரிந்திருப்பார் . அப்துல்லா சொல்வது போன்று மீரா இஸ்ஸதீன் சம்மேளனத்தின் தலைவர் திருகுதாள வேலை செய்வதற்கு பொருளளராகிய நான் கணக்கு தெரியாதவனும் அல்ல படிப்பறிவில்லாதவனும் அல்ல .நிதி மோசடியில் இறங்குவதற்கு நான் தொழில் இல்லாதவனும் அல்ல வாழ வழி தெரியாதவனும் அல்ல . நான் அப்படியான குடும்பத்தை சேர்ந்தவனும் அல்ல என்பதை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்கும் அதேவேளை போலிப் பெயர் ஊடகவியலாளரான அப்துல்லாவுக்கும் கூற விரும்புகின்றேன்.
எமது சம்மேளனத்தில் அங்கத்துவம் பெறாத இந்த அப்துல்லா இவற்றை எல்லாம் எம்மிடம் கேட்பதற்கும். இது தொடர்பாக எழுதுவதற்கும் தகுதி அற்றவர் . இவரது இந்த அறிக்கைக்கு பதில் எழுத வேண்டிய அவசியமோ கடமையோ எமக்கு இல்லை இருந்த போதும் ஊடகத்தில் வெளியானமைக்காக தெரியப் படுத்தவேண்டியுள்ளது.
சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்த அந்த 80 பேர் எப்போதாவது ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு செயல் பட்ட வரலாறு இருந்தால் அந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் சொன்னால் அது நன்றாக இருக்கும் . என்னுடன் பேசுவதற்கு எனது தொலை பேசி இலக்கத்தை கேட்டுள்ள அப்துல்லா ஒரு ஊடகவியலாளனின் தொலை பேசி இலக்கம் தெரியாமல் இருப்பது கண்டு வெட்க்கப் படுகின்றேன் . இருந்தாலும் அப்துல்லாவின் சந்தேகங்களை தெளிவு படுத்த எனது தொலை பேசி இலக்கம் 0720312386 என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் .
விபரக் கொத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் அம்பாறை ,மட்டக்களப்பு ,திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியாளர்களும் கொழும்பில் உள்ள ஊடக நிறுவனங்களில் பணியாற்றுகின்ற ஊடகவியலாளர்கள் என்பதனையும் அறியாத ஊடகவியலாளராக அப்துல்லா காணப் படுகின்றார். எத்தனை சாப்பாடு எத்தனைபேருக்கு ரீ சேட் என்பதை அந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் எமது சம்மேளனத்திடம் கேட்டு அறிந்து கொள்ளாமல் அப்துல்லாவின் கவலைக்கு உட்படுத்தியுள்ளமை இந்த பாராட்டு விழா நடை பெறுவதை பொறுக்கமுடியாத செயலாகும். பாராட்டு விழா நடை பெறும் தினத்தன்று அப்துல்லா வருகை தந்தால் யாரெல்லாம் ரீ சேட் அணிகின்றார்கள் .யாரெல்லாம் சாப்பிடுகின்றார்கள் என்பதை கணக்கெடுக்க முடியும் .
பாராட்டு விழாவில் 24 ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப் படவுள்ளனர் சம்மேளனத்தின் கட்டுக் கோப்பை மீறியவர்களும் கயவர்களும் இடைநிறுத்தப் பட்டுள்ளதை அறிவீர்கள் என நினைக்கின்றேன்.
அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்கள் சம்மேளனத்துக்கு வழங்கிய ரூபா 120000 க்கான காசோலை நாங்கள் சொல்லி அவர் எழுதவும் இல்லை வழங்கவும் இல்லை . காத்தான்குடி அல் -ரபா டிஜிடல் பிரிண்டிங் நிறுவனத்தின் கூறு விலைப் பிரகாரம் அவர்களின் நிறுவனத்துக்கு காசோலை வரையப் பட்டது. அது ஏன் என்பதை அமைச்சர் அவர்களிடம்தான் அப்துல்லா கேட்டு அறிய வேண்டும்.
24 ஊடகவியலாளருக்கான மேமொண்டோவுக்கு அப்துலா கூறும் மூக்கு சாஸ்திரக் கணக்குப் படி 50 ஆயிரம் அல்ல 144000 ஆயிரம் ஆகும் . மீதிப் பணத்தை அப்துல்லா தர முடியும் என்றால் அதனை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகவுள்ளோம் . அமைச்சர் அவர்களால் எழுதப் பட்டு ஒப்பமிடப் பட்ட காசோலையை யார் பெற்றால் என்ன நான் போய் தொகையை மாற்ற முடியாது . அல்லது அமைச்சரின் ஒப்பத்தை நான் இட முடியாது என்பதை அப்துல்லா உணரவில்லையா ?
மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் அவர்கள் 10ஆயிரம் அல்ல எமக்கு 15ஆயிரம் ரூபா வழங்கியுள்ளார் இதனை அந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் அறியவில்லையா? அதற்க்கான பற்று சீட்டை அப்துல்லாவிடமா வழங்குவது பணம் வழங்குவதற்கு முன்னமே மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் அவர்கள் அவரது கையால் தொகையும் எழுதி அவரே பற்றுசீட்டையும் எடுத்துக் கொண்டார் தேவை என்றால் அவரிடம் தகவலை பெற்றுக் கொள்ளலாம் அவரது தொலைபேசி இலக்கம் (0777328903)
ஊடகவியலார்கள் கௌரவிப்பை பொறுத்துக் கொள்ள முடியாத இந்த அப்துல்லா மன உளைச்சலுடன் காணப் படுகின்றார் என்பதே எனது கருத்தாகும் . அப்துல்லாவுக்கு இன்னும் குழப்ப நிலை இருந்தால் எனது தொலை பேசி இலக்கத்தை அறிவித்துள்ளேன் என்னுடன் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும் . நானும் ஒரு இணையதளத்தின் பொறுப்பாளனாக இருக்கின்றேன் இவ்வாறான ஆதாரமில்லாத போலிப் பெயர்களைக் கொண்டவர்களின் செய்திகளை பிரசுரிக்கும் முன்னர் சம்பந்தப் பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு உண்மை தன்மையை அறிந்த பின்னர் செய்தி வெளியிட வேண்டும் .
அப்துல்லா கனவு காண்பது போன்று அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் இலகுவானதொன்றல்ல பலமிக்க அமைப்பு அவ்வாறன நிறுவனத்தின் செய்தியை வெளியிடுவதி ஊடக நிறுவனங்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை சம்மேளனத்தின் பொறுப்பு வாய்ந்த பொருளாளர் பதவி வகிக்கும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்
யு.எம்.இஸ்ஹாக்
பொருளாளர்
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம்
Comments
Post a Comment