கல்முனைப் பிரதேசத்தில் பால்மா கொள்ளை! பால்மா பெட்டிகள் கைப்பற்றப் பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் 05 பேரும் கைது!!

நீண்ட காலமாக   கல்முனைப் பிரதேசத்தில்  பால்மா வகைகளை  கொள்ளையிட்டு விற்பனை செய்து வந்த கும்பல் ஒன்று கல்முனை பொலிசாரினால் கைது செய்யப் பட்டுள்ளனர் .

அம்பாறை  மாவட்ட  பால்மா  விநியோகஸ்தரான  கல்முனைக்குடியை சேர்ந்த  ஆமிட் லெப்பை  முகம்மட்  பளீல் என்பவரது  நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த  பால்மா பெட்டிகள்  நிரப்பப் பட்டிருந்த லொறி உடைக்கப் பட்டு  கடந்த  செவ்வாய்க் கிழமை (14) ஒரு இலட்சம்  ரூபாவுக்கும்  அதிகமான  பால் மாப் பெட்டிகள்  களவாடப் பட்ட நிலையில்  இது தொடர்பாக  கல்முனை போலீசில் முறைப்பாடு  செய்யப் பட்டதன் பிரகாரம்  களவாடப் பட்ட பெருந்தொகை  பால்மா பெட்டிகள்  கைப்பற்றப் பட்டுள்ளதுடன்  சந்தேகத்தின் பேரில்  கல்முனைகுடியை சேர்ந்த 05 பேரும்  கைது செய்யப் பட்டுள்ளனர் . 

கல்முனை போலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு.ஏ.கப்பாரின் வழி  காட்டலின் கீழ்  பொலிஸ்  நிலையப் பெருங்குற்றதடுப்பு  பொறுப்பதிகாரி  இந்துநில் உட்பட பொலிஸ்  சாஜன்  ஏ.முஸ்தபா  ஆகியோரால்  குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டதன்  அடிப்படையில்  குறித்த விடயம் அம்பலத்துக்கு வந்ததை அடுத்து கைது  இடம் பெற்றுள்ளது.

சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள்  தொடர்ச்சியாக இந்த கொள்ளை நடவடிக்கையில்  ஈடுபட்டு வந்தவர்கள் என்றும்  களவாடும் பொருட்களை கல்முனை வர்த்தக நிலையம் ஒன்றில் விற்பனை செய்து வந்துள்ளதாகவும்  பொலிசாரினால் தெரிவிக்கப் பட்டது

குறித்த கொல்லைக்குப் பயன் படுத்தப் பட்ட முச்சக்கர வண்டியும் அதன்  சாரதியும்  கைது செய்யப் பட்டுள்ளனர் . திருட்டுடன் சம்பந்தப் பட்ட சந்தேக நபர்கள் திருடியதை ஒப்புக் கொண்டதன் பிரகாரம் நேற்று கல்முனை நீதிவான் நீதி மன்றில் முன்னிலைப் படுத்தப் பட்டனர்

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்