முதலமைச்சர் ,முதல்வர் சண்டையில் சாய்ந்தமருதில் SLMC இரண்டாவது விக்கட்டும் வீழ்த்தப் பட்டுள்ளது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி, கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலை கட்சியின் உறுப்புரிமைகளில் இருந்தும் அவர் கட்சியில் வகித்த சகல பதவிகளிலிருந்தும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம்; பிரதி அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் இதே போன்று கல்முனை மாநகர சபையின் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி,கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிபை கட்சியின் உறுப்புரிமைகளில் இருந்தும் அவர் கட்சியில் வகித்த சகல பதவிகளிலிருந்தும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியமை மற்றும் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியமை ஆகிய காரணங்களுக்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், தலைவர் அமைச்சர் ஹக்கீமினால் அவர்; வகித்து வந்த அதிஉயர் பீட உறுப்பினர், இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் உட்பட கட்சியின் சகல பதவிகளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதற்கான கடிதம் தம்மால் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் செயலாளர் நாயகம் பிரதி அமைச்சர் ஹஸனலி மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment