ஹக்கீமுக்கு எதிராக சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம்
பெரும்தொகையாக வாக்களித்த சாய்ந்தமருது மக்களின் எதிர்பார்ப்புக்களை புறந்தள்ளி, வாக்களிக்காத ஒருவரை கிழக்குமாகாண முதலமைச்சராக நியமிக்கும் அமைச்சர் ஹக்கீமின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப்பகுதி மக்கள் இன்று பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று ஜும்ஆ தொழுகையை அடுத்து சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் முன் கூடிய பெருந்தொகையான மக்கள், அமைச்சர் ஹக்கீமின் கொடும்பாவியைத் தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "ஹக்கீம் ஒழிக", "வாக்களிக்காத ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கு முதலமைச்சர் பதவியா?", "பெருந்தொகை வாக்குகளை வழங்கிய சய்ந்தமருது மக்கள் சார்பில் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கக்கூடாதா?", "ஹக்கீமே உனது துரோகத்தனத்துக்கு முடிவில்லையா?" போன்ற கோசங்களை எழுப்பியவாறு மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் ஹக்கீமின் கொடும்பாவியை எரிக்க முற்பட்டபோது அங்கு குவிந்த கல்முனை பொலிஸார் அதை எரிக்கவிடாது தடுத்தனர்.
இதனால் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி பொலிஸார் ஹக்கீமின் கொடும்பாவியை எரிக்கவிடாது, தமது வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.

Comments
Post a Comment