அம்பாறை மாவட்டத்தில் தயிர் விற்பனைக்கான தடை நீக்கப்பட்டுள்ளது
அம்பாறை மாவட்டத்தில் பால் கொள்வனவு மேற்கொள்ளுமாறும், தயிர் விற்பனை
செய்வதற்கு ஏற்பட்டிருந்த தடையுத்தரவு நீக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் இவ்
விடயத்தில் அச்சமோ, சந்தேகமோ கொள்ளத் தேவையில்லை எனவும் அம்பாறை மாவட்ட
கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர்.எம்.சி.எம்.ஜூனைட்
தெரிவித்தார்.
கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள கால்வாய் நோய்க் காரணமாக கடந்த (19) ஆம் திகதி முதல் மாடு, ஆடு, பன்றி ஆகியவற்றின் இறைச்சி மற்றும் உற்பத்தி பொருட்கள் நாட்டிலுள்ள 6 மாவட்டங்களில் தடைசெய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், கல்முனை மாநகர பிரதேசத்திலுள்ள உள்ளுர் கடைகளில் தடைசெய்யப்பட்டுள்ள உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படுவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பில் வைத்தியரை தொடர்புகொண்டு கேட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

Comments
Post a Comment