ஆசியர்களின் நன்மைகளைக் கருத்திற் கொண்டே தகவல்கள் திரட்டப்படுகின்றன: ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தகவல் சேகரிப்பு படிவம் பற்றி கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ நிஸாம் தெரிவிக்கின்றார்
கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால்
ஆசிரியர்களின் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள படிவம்
ஆசிரியர்களின் நலன்களைக் கருத்திற் கொண்டதேயாகும். எம்மால் கோரப்பட்டுள்ள
தகவல்கள் யாவும் கணணி மயப்படுத்தப்பட்டு வைக்கப்படும். மேலும், ஆசிரியர்
ஒருவர் ஓய்வு பெறும் வரைக்கும் இத்தகல்கள் மூலமாக நன்மைகளைப் பெற்றுக்
கொள்ள முடியும். மற்றப்படி ஆசிரியர்களை அலைய வைக்க வேண்டுமென்றோ அல்லது
அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டுமென்ற நோக்கத்திலோ இத்தகவல்கள்
திரட்டப்படவில்லை. எதிர் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள எந்த
ஆசிரியரும் அலையக் கூடாதென்பதே எமது நோக்கமாகும்.
கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களின்
தகவல்களை திரட்டுவதற்காக கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால்
ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள படிவம் தொடர்பாக ஆசிரியர்களிடையே
ஏற்பட்டுள்ள விமர்சனங்கள், சந்தேகங்கள் பற்றி கிழக்கு மாகாண கல்விப்
பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாமிடம் நாம் கேட்ட போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவரிடம் நாம் கேட்ட கேள்விகளும், பதில்களும் வருமாறு:
கேள்வி : ஆசிரியர்களின் விமர்சனத்திற்கும், சந்தேகத்திற்கும் உள்ளாகியுள்ள தகவல்களை திரட்டும் படிவம் மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்டதன் நோக்கம் என்ன?
பதில் : கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில், கிழக்கு மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களைப் பற்றிய தெளிவானதும், பூரணத்துவமானதும், உண்மையானதுமான தகவல்களில்லை. அண்மையில் ஒரு வலயத்தில் 1300 ஆசிரியர்கள் இருக்கின்ற போதிலும், 950 ஆசிரியர்கள் இருப்பதாக மாகாண கல்வித் திணைக்களத்திற்கு தகவல்கள் தரப்பட்டுள்ளன. இதனைப் பற்றி நாம் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு ஒரு கருத்தரங்கு மூலமாக தெளிவான ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினோம். சுpல பாடசாலைகள் மாணவர்களின் தொகையை அதிகமாக காட்டிக் கொண்டு, ஆசிரியர் பற்றாக்குறை என்று தொவிக்கின்றார்கள். ஆசிரியர்களை தருமாறும் கோரி வருகின்றார்கள்.
மேலும், 42 ஆசிரியர்கள் இரட்டைச் சம்பளம் பெற்று வந்தமையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களில் சிலர் தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு பதிலாக தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட்டுள்ளார்கள். பட்டப்படிப்பின் போது விவசாயத்தினை ஒரு பாடமாக கற்றுக் கொண்டவர் தன்னை ஒரு விஞ்ஞான பட்டதாரி என்று தகவல் தந்துள்ளார். ஆனால், அவர் ஒரு கலைப்பட்டதாரியாவார். இன்னும் சில ஆசிரியர்கள் திருமணம் முடித்தவர் தன்னை திருணம் முடிக்கவில்லை என்றும், திருமணம் முடிக்காதவர் தான் திருமணம் முடித்துள்ளதாகவும் குறிபிட்டுள்ளார்கள். பல ஆசிரியர்களின் தகவல்கள் வலயக் கல்வி அலுவலகங்களில் கூட சரியாகயில்லை. பல ஆசிரியர்களின் முதல் பதவியேற்ற கடிதம், முதல் நியமனத் திகதி என்பன இல்லாதுள்ளன. உதாரணமாக ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களில் எத்தனை பேர் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் என ஆசிரியர்களைப் பற்றிய சரியான தகவல்கள் இல்லாதுள்ளன. பிழையான தகவல்கள் உள்ளன. இவைகளைக் கருத்திற் கொண்டு மாகாண கல்வித் திணைக்களம் தகவல் தளத்தை ஏற்படுத்தவுள்ளது. இத்தகவல்கள் மூலமாக ஆசிரியர் ஒருவர் பாதிப்புக்குள்ளாகும் போது, அவருக்கு நியாயத்தையும், நிவாரணத்தையும் விரைவாக வழங்கக் கூடியதாக இருக்கும். ஆகவே, ஆசிரியர்களின் தகவல்களை பெற்றுக் கொள்ளுவது, முழுக்க முழக்க ஆசிரியர்களுக்கு நன்மைகளைச் செய்வதற்காகவாகும்.
கேள்வி : குறிப்பிட்ட தகவல் படிவத்தில் பல தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றை மூன்று நாட்களுக்குள் பெற்று வழங்குவது ஒரு சிரமமான காரியம். கால அவகாசம் போதாதென்று ஆசிரியர்கள் குறை கூறுகின்றார்களே?
பதில் : குறிப்பிட்ட படிவத்தை ஆசிரியர்களுக்கு மார்ச் மாதம் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதிக்குள் வழங்குமாறு சகல வலயக் கல்வி அலுவலகத்தையும் நாம் அறிவுறுத்தி இருந்தோம். அதன் படி வலயக் கல்வி அலுவலகங்கள் படிவங்களை வழங்கியுள்ளன. ஆசிரியர்கள் குறிப்பிட்ட படிவத்தை மார்ச் மாதம் 28ஆம் திகதிக்குள் வலயக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினோம். இரண்டு வார கால அவகாசம் போதுமானதாகும். கேட்கப்பட்ட தகவல்களுள் வதிவிடத்தை அல்லது வாக்காளர் பதிவை உறுதிப்படுத்துவதற்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும். ஆதலால், வழங்கப்பட்ட கால அவகாசம் போதாது என்று கூற முடியாது.
கேள்வி : மார்ச் மாதம் 22ஆம் திகதிக்கு முன்னர் படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டுமென்று அதிபர்கள் சொன்னதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றார்களே?
பதில் : சில வேளை, வலயக் கல்வி அலுவலகங்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப அவ்வாறு சொல்லி இருக்கலாம். அல்லது அதிபர்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப சொல்லி இருக்கலாம். ஆனால், மார்ச் 28ஆம் திகதி வரைக்கும் ஒப்படைக்கலாம்.
கேள்வி : வதிவிடத்தையும், வாக்காளர் பதிவையும் கேட்டிருப்பதன் நோக்கம் யாது?
பதில் : வதிவிடத்தை உறுதி செய்ய வேண்டும். அல்லது வாக்காளர் பதிவை வழங்க வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டும் வழங்கினால் போதுமாகும். ஆனால், இவற்றைப் பெறுவதன் நோக்கம், சில ஆசிரியர்கள் கஸ்டப் பிரதேச பாடசாலை என்று வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பாடசாலையில் கடமையாற்றிக் கொண்டு, அதற்காக கொடுப்பனவையும் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இதே வேளை, இன்னுமொரு ஆசிரியர் நாளாந்தம் 100 முதல் 150 கிலோ மீற்றர் வரை பயணம் செய்து பாடசாலைக்கு செல்லுகின்றார். அவருக்கு எந்தக் கொடுப்பனவும் வழங்கப்படுவதில்லை. எதிர் காலத்தில் இதனைத் தவிர்த்து ஒரு ஆசிரியர் தமது வதிவிடத்தில் இருந்து எவ்வளவு தூரம் பயணம் செய்து பாடசாலைக்கு செல்லுகின்றார் என்பதனை வைத்து கொடுப்பனவு வழங்க கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு இத்தகவல் அவசியமாகும்.
கேள்வி : ஆசிரியர் இடமாற்றங்களை மேற்கொள்வதற்காகத்தான் இத்தகவல்கள் திரட்டப்படுவதாக ஆசிரியர்கள் சந்தேகிக்கின்றார்களே?
பதில் : நிச்சயமாக ஆசிரியர் இடமாற்றங்களை செய்வதற்காக இத்தகவல்கள் திரட்டப்படவில்லை. ஆசிரியர்களின் இடமாற்றங்களை இனிமேல் நாங்கள் செய்யவும் மாட்டோம். ஆசிரியர் இடமாற்றங்களை செய்வதற்கு முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.காசிம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் கீழ்தான் இடமாற்றங்கள் இடம்பெறும். ஆனால், நியாயமற்ற முறையில் ஆசிரியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால், அந்த இடமாற்றம் பிழையானதென்று சுட்டிக்காட்டுவதற்கும், இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கும் இத்தகவல்கள் குறிப்பிட்ட ஆசிரியருக்கு உதவியாக இருக்கும்.
கேள்வி : மகப்பேற்று திகதியை பெண் ஆசிரியர்களிடம் குறிப்பிட்ட படிவத்தில் கேட்கப்பட்டிருப்பதனை ஆசிரியர்கள் தேவையற்ற கேள்வியாக கருதுகின்றார்கள்?
பதில் : ஒரு ஆசிரியைக்கு இடமாற்றம் அல்லது வேறு ஏதாவது ஒன்று நடக்கும் போது, குறிப்பிட்ட ஆசிரியை தான் ஒரு கற்பிணி என்று கூறுகின்றார். இந்நிலையில், அவருக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கும் போது, அவருக்கு பிள்ளையும் பிறந்துவிடும். இதனால், அந்த ஆசிரியைக்கு நிவாரணம் பெற முடியாது போய்விடுகின்றது. ஆதலால்;, முன் கூட்டியே தகவல்கள் இருந்தால், அவருக்கு கல்வி திணைக்களம் எந்த நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும், அவர் கற்பிணி என்பதனை கருத்திற் கொண்டே நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதனால், கற்பிணித் தாயாக உள்ள ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுகின்றது. அதற்காகவே, மகப்பேற்று திகதி கேட்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு பாடசாலையில் எத்தனை ஆசிரியைகள் மகப்பேற்று லீவில் இருக்கின்றார்கள் என்று தெரியவரும். அதன் மூலமாக குறிப்பிட்ட பாடசாலையின் கல்வி நடவடிக்கைக்கு தேவையான ஆசிரியர்களை பெற்றுக் கொடுக்க முடியும். பாடசாலையின் கல்வி நடவடிக்கையும் பாதிக்காது.
கேள்வி : தகவல் படிவம் பூர்த்தியாக்கப்பட்டு வழங்கப்பட்டதன் பின்னர் கற்பிணியாகும் ஆசிரியர்கள் இருப்பார்களே அவர்களின் நிலை?
பதில் : கேட்கப்பட்டுள்ள தகவல்களுள் நிரந்தரமான தகவல்களும் உள்ளன. வருடா வருடம் பெற்றுக் கொள்ள வேண்டிய தகவல்களும் உள்ள அதன் படி, நீங்கள் குறிப்பிட்ட கற்பிணித் தாய் ஆசிரியைகளின் தகவல்களும் கிடைக்கும். மேலும், மாகாணத்தில் உள்ள எல்லா ஆசிரியர்களுக்கும் மாகாண கல்வி திணைக்களத்தினால் இலக்கங்கள் வழங்கப்படும். குறிப்பிட்ட ஆசிரியர் எந்த வலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றாலும், இந்த இலக்கத்தில் மாற்றம் ஏற்படாது. ஆசிரியர் ஒருவர் தான் ஏற்கனவே வழங்கிய தகவல்களில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டால், அதனை குறிப்பிட்ட இலக்கத்தை தெரிவித்து மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.
கேள்வி : மாகாண கல்விப் பணிப்பாளர் ஆசிரியர்களை அலையவிட்டிருப்பதாக சொல்லப்படுகின்றதே?
பதில் : ஆசிரியர்களை அலைய வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இத்தகவல்கள் திரட்டப்படவில்லை. அவர்கள் அலையக் கூடாதென்பதற்காகவே தகவல்கள் திரட்டப்படுகின்றன. ஆசிரியர்களின் சுயவிபரக் கோவையில் பல குறைபாடுகள் உள்ளன. பதவியை உறுதிப்படுத்தாத ஆசிரியர்கள் உள்ளார்கள். ஓய்வூதிய இலக்கத்தை பெற்றுக் கொள்ளாதவர்கள் உள்ளார்கள். பதவி உயர்வு பெற்றுக் கொள்வதற்காகன ஆவணங்கள் இல்லாதவர்கள் உள்ளார்கள். இத்தகையவர்கள் இந்த படிவத்தை பூர்த்தி செய்யும் போது, அவர்களின் குறைபாடுகள் எங்களுக்கு தெரிய வரும். நாங்கள் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து, இக்குறைபாடுகளை பூர்த்தி செய்யுமாறு கேட்போம். இதனால், அவர்களின் சுயவிபரக் கோவை பூரணப்படுத்தப்படும். இதனால், இலகுவாக பதவி உயர்வு பெறவும், ஓய்வூதியம் பெறவும் முடியும். சுனாமியால் பாதிக்கப்பட்ட பல ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ள போதும், அவர்களினால் இற்றைவரை ஓய்வூதியத்தைப் பெற முடியாதுள்ளது. காரணம், அவர்களின் சுயவிபரக் கோவையில் குறைபாடுகள் உள்ளன. ஆனால், நாம் எடுக்கும் தகவல்கள் ஆசிரியர் ஒருவர் பாதிக்கப்பட்டாலும், அவரைப்பற்றிய முழுத் தகவலும் மாகாண கல்வி திணைக்களத்தில் இருக்கும். அவர் பாதிக்கப்படவும் மாட்டார்.
மேலும், பெற்றுக் கொள்ளப்படும் தகவல்கள் மூலமாக சேவை நிபந்தனைகளை தாண்டியும் பல வருடங்களாக தமது சொந்த இடத்திலிருந்து தூர பிரதேசத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு நிவாரணம் கிடைக்க உள்ளது. குறிப்பிட்ட படிவம் தொடர்பில் ஆசிரியர்களிடையே பிழையான எண்ணங்கள் ஏற்படக் காரணம் அதிபர்களாகும். மாகாண கல்வி திணைக்களத்தினால் சொல்லப்படும் தகவல்களை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கின்றார்கள், ஆனால், அதிபர்கள் ஆசிரியர்களுக்கு அத்தகவல்களை முறையாக தெரிவிப்பதில்லை என்பது மிகப் பெரிய குறைபாடாகும் என்றார்.

Comments
Post a Comment