தப்லீக் ஜமாஅத்தின் அமீர் வபாத்


உலகலாவிய முஸ்லிம் தஹ்வா  அமைப்புக்களில் ஒன்றான தப்லீக் ஜமாஅத்தின்  மௌலானா துபைருள் ஹஸன் அவர்கள் கடந்த 18.03.2014 செவ்வாய்க் கிழமை டில்லியில் வபாதானார் .
நீண்டகாலம் உபாதைக்குட்பட்டிருந்த அமீர் அவர்கள் சில வாரங்களாக புதுடில்லியில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவர் முன்னை நாள் தப்லீக் ஜமாஅத்தின் மூன்றாவது அமீர் மௌலானா இனாமுல் ஹஸன் அவர்களின் மகனாவார். 1926 ஆம் ஆண்டு இந்தியாவில் நிறுவப்பட்ட தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகர் மௌலானா முஹம்மத் இல்யாஸ் (ரஹ்) அவர்கள் முதல் அமீராகவும் அவரின் வபாதிற்குப் பிறகு மௌலான முஹம்மத் யூஸுப் (ரஹ்) அவர்கள் இரண்டாவது அமீராகவும் பணிபுரிந்தனர்.


இவர் தப்லீக் ஜமாஅத்தின் டில்லி மர்கஸின் தலைமையகத்தின் கீழ் இயங்கும் காஷிபுல் உலூம் கல்லூரியின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
மௌலானாவின் ஜனாஸா தொழுகையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தார்கள். சனநெரிசலை கட்டுப்படுத்துவதற்காக டில்லி போக்குவரத்து பொலிஸ் விசேட ஏற்பாடுகளை ஒழுங்கு செய்திருந்தது.
யா அல்லாஹ் மௌலானா துபைருல் ஹஸன் அவர்களின் பாவங்களை மன்னிப்பாயாக. அவருக்கு அருள் புரிவாயாக. அவருடைய மண்ணறையை விசாலப்படுத்தி அவருக்கு சங்கை செய்வாயாக. கப்ருடைய வேதனையை விட்டும் அவரை பாதுகாப்பாயாக. அவரை மேலான உயர்ந்த சொர்க்கமான ஜன்னதுல் பிர்தௌஸில் குடியமர்த்துவாயாக ஆமீன்.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்