அமைச்சர் றிஷாத் பதியுதீனின் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து

அமைச்சர் றிஷாத் பதியுதீனின் கொழும்பு 7 இல் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்தார்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர், சட்டத்தரணி என்.எம்.சஹீட் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
நீதிமன்றத்தை அவமதித்ததாக றிஷாத் பதியுதீனுக்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று மேதிக விசாரணை எதுவுமின்றி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இதுகுறித்து அவர்:-
2012ம் ஆண்டு ஜூலை மாதம் 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் எனது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள கைத்;தொலைபேசியிலிருந்து என்னுடைய அனுமதியின்றி அதிகாரம் அளிக்கப்படாத வகையில் மன்னார் நீதிமன்ற நீதவான் ஜூட்சன் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டது சம்பந்தமாக நான் எனது மனவருத்தத்தை தெரிவிப்பதோடு நீதிமன்றத்தின் சுதந்திரத்தையும் கௌரவத்தையும் பேணுபவன் என்ற வகையில் நீதித்துறைக்கு ஏதேனும் அகௌரவம் ஏற்பட்டிருப்பின் அதற்காகவும் மனம் வருந்துவதோடு எனது அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புக்காக வேண்டி நீதித்துறையிடம் வருத்தத்தை தெரிவித்தேன்.
எனது அறிவுக்கு எட்டியவரை நான் குறிப்பிட்ட நீதவானை எந்த சந்தர்ப்பத்திலும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளாதபோதும் எனது தொலைபேசியிலிருந்து இந்த அழைப்புக்கள் சென்றதனால் நீதிமன்ற அவமதிப்;பு வழக்குக்கு உட்படுத்தப்பட்டேன்.
இது தொடர்பில் ஏழு சட்டத்தரணிகள் எனக்கு எதிராக நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடுத்திருந்தனர். நூன் எந்த வகையிலும் இதற்கு பொறுப்பாளியாக இல்லாதபோதும் எனது தொலைபேசி இலக்கங்கள் பதிவாகியிருந்ததனால் நான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (14.03.2014) வருத்தம் தெரிவித்தேன்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஆரம்பமான நாள் முதலே நான் இதற்;கு பொறுப்பாளி அல்ல என்றும், நீதித்துறையை என்றுமே மதிப்பவன் என்றும் அந்தத்துறையின் கௌரவமான பணிகளுக்கு எந்த காலத்திலும் நான் இடைஞ்சலாக இருந்தவன் அல்லன் என்றும் தெரிவித்து வருந்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்