54.000 பெண்கள் அரசாங்க சேவையில்!
அரச சேவையில் 75 வீதமானவர்கள் பெண்களாக உள்ளதாகவும் , அரச சேவைகள் மற்றும் அரச சேவையின் இணைந்த சேவைகளில் 54.000 பெண்கள் பணியாற்றுவதாகவும் அரச நிர்வாக மற்றம் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்,
இவ்வாறு பெண்கள் கூடுதலாகக் காணப்படுவதானது நிர்வாக செவையை முன்னெடுத்துச் செல்வதில் நடைமுறைச்சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
ஐ. தே. க. எம். பி. அனோமா கமகேயின் வாயில் மூலமான விடைக்கான கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்த அவர், அரச சேவையில் 44.96 வீதம் பெண்கள் பணியாற்றுகின்றனர்.
அதேபோல். அரச சேவையின் இணைந்த சேவையில் 52,684 பெண்களும் பணியாற்றுகின்றனர். பொதுவாகப் பார்த்தால் அரச சேவையில் 75 வீதமானவர்கள் பெண்களாக உள்ளனர். அண்மையில் வழங்கிய நியமனங்களில் கூடுதலானவர்கள் பெண்கள் கூடுதலாக பெண்ணை கொண்டு நிர்வாக சேவையை முன்னெடுப்பது நடைமுறைச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பரீட்சைகள் நடத்தி உரியவர்களைத் தேர்வு செய்யும் போது கூடுதலான பெண்களே பரீட்சைகளில் தோற்றி கூடுதலான புள்ளிகளுடன் தேர்வாகின்னர். இருந்தும் நாம் அவர்களைத் தடுக்கவில்லை என்றும் அமைச்சர் கூறினார்
Comments
Post a Comment