சாய்ந்தமருதில் நாளை சுதந்திர தின ஏற்பாடு; மேற்கத்திய நாடுகளின் அச்சுறுத்தலிருந்து விடுபட பிரார்த்திப்போம்!
நாட்டின் 66வது சுதந்திர தினத்தை
முன்னிட்டு சாய்ந்தமருது–மாளிகைக்காடு
ஜூம்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் பல்வேறு சுதந்திர தின நிகழ்வுகள்
சாய்ந்தமருதில் நாளை இடம்பெறவுள்ளது.
இச்சுதந்திர தின நிகழ்வுகள் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப்
பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா தலைமையில்
நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுகள் நாளைக் காலை 8 மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன்
ஆரம்பிக்கபடவுள்ளதுடன் அன்றைய தினம் ஜூம்ஆப் பள்ளிவாசல் வளாகத்தில் சிரமதான
நிகழ்வும், மரநடுகையும் மற்றும் நாட்டின் நிலையான சமாதானத்திற்கும், இன
நல்லுறவை வலியுறுத்தியும் பள்ளிவாசலில் துஆப் பிரார்த்தனையும்
இடம்பெறவுள்ளதாக சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல்
நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.
சுந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருதிலுள்ள வர்த்தக நிலையங்கள்,
வீடுகளில் தேசியக் கொடியினை ஏற்றுமாறும் அன்றைய தினம் எமது தாய் நாட்டிற்கு
மேற்கத்திய நாடுகளினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலிருந்து விடுபட ஐவேளை
தொழுகையில் துஆப் பிரார்த்தனையிலும், விஷேட தொழுகையிலும் ஈடுபடுமாறும்
சாய்ந்தமருது பிரதேச வர்த்தகர்களையும், பொதுமக்களையும் சாய்ந்தமருது –
மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ்
வை.எம்.ஹனீபா கேட்டுள்ளார்.
Comments
Post a Comment