2014 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாளை
2014 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாளை வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படவுள்ளது. என தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த நிதியாண்டிற்கான செலவினங்களுக்கு
154,252 கோடி 25 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாவை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலம் கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
நவம்பர் 22 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி
வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும்.இரண்டாம் வாசிப்பு மீதான
வாக்கெடுப்பு அன்று மாலை இடம்பெறவுள்ளது. குழு நிலை விவாதங்கள் டிசம்பர் 2
முதல் 20 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதோடு அன்று மாலை வரவு செலவுத் திட்டம்
மீதான இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியினால்
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதால் பாராளுமன்றத்திலும் அதனை அண்டிய
பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள்
செய்யப்பட்டுள்ளன.
Comments
Post a Comment