Posts

Showing posts from October, 2012

கல்முனை மாநகர சபையின் வரவு செலவுத்திட்ட ஆலோசனைகள், வருமான அதிகரிப்பு குறித்த கலந்துரையாடல்

Image
உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரனையுடனும், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடனும் ஆசிய மன்றம் நடைமுறைப் படுத்திவரும் உள்ளூர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் – 2013 தொடர்பிலான ஆலோசனைகள் மற்றும் வருமான அதிகரிப்பு குறித்த விஷேட கலந்துரையாடல் தற்பொழுது (8.00pm) சாய்ந்தமருது   பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சிதிட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீதின் நெறிப்படுத்தலில் கௌரவ முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடை பெற்றது

சமூர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி

Image
கல்முனைப் பிரதேச சமூர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் மற்றும், முதியோர் தினத்தையொட்டி கல்முனைக்குடி, மற்றும் மருதமுனை-நற்பிட்டிமுனை சமுர்த்தி வலையங்களுக்கிடையிலான மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி 2012.10.12ம் திகதி நற்பிட்டிமுனை அஷ்ரப் சதுக்கத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக கல்முனை பிரதே செயலாளர் திரு:எம்.எம்.நௌபல், கௌரவ அதிதியாக சமுர்த்தி முகாமைத்தவப் பணிப்பாளர் திரு: ஏ.ஆர்.எம். சாலி, விசேட அதிதியாக சமுர்த்தி வலய முகாமையாளர் திருமதி: எஸ்.எஸ். பரீதா ஆகியோர் கலந்து கொண்டனர். இம் மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியில் கல்முனைக்குடி சமுர்தி வலயம் நற்பிட்டிமுனை-மருதமுனை சமுர்த்திவலயத்தை தோற்க்கடித்து சம்பியன் கிண்ணத்தைத் தட்டிச்சென்றது இப் போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றிய 31 சிறுவர் கழகங்களுக்குமான விளையாட்டு உபகரணங்களையும் பிரதேச செயலாளர் வழங்கிவைத்தார்.

27ஆம் திகதியே ஹஜ் பெருநாள்

Image
இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் இன்று செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தது. ஹிஜ்ரி 1433 புனித துல்ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை இன்று செவ்வாய்க்கிழமை இரவு நாட்டின் எந்தவொரு பாகத்திலும் தென்படவில்லை.  இதற்கமையவே 27ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம்கள் பெருநாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. புனித துல்ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஹமீதிய்யா மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை பிரதிநிதிகள்இ கொழும்பு பள்ளிவாசல் நிர்வாக சபையின் பிரதிநிதிகள், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள் மற்றும் ஷரீயா கவுன்ஸில் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். புனித ஹஜ் பெருநாள் எதிர்வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் என்று நாட்காட்டிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பிரின்ஸ் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விளையாட்டு​ப் போட்டி

Image
நற்பிட்டிமுனை பிரின்ஸ் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று (30.09.2012) நற்பிட்டிமுனை அஷ்ரப் ஞபகார்த்த விளையாட்டு  மைதானத்தில் பாடசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் முஹமட் றியாஸ் தலைமையில் நடைபெற்றது. ஒலிம்பிக் தீபமேற்றி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் 25மீற்றர் ஓட்டம்,முயல் ஓட்டம், தவளை ஓட்டம், தாறா ஓட்டம், சமநிலை ஓட்டம், போத்தலில் தன்னீர் நிரப்புதல்,கரன்டியில் தேசிக்காய் ஏந்திய ஓட்டம் போன்ற பல்வேறுபட்ட போட்டிநிகழ்ச்சிகள் இடம் பெற்றன.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கௌரவ அதிதியாக முன்னாள் அட்டாலைச்சேனை பிரதேச சபை தவிசாளரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.நசீர், அதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம்.நபார், பெற்றோர் மற்றும் பிரேதேசவாசிகள் கலந்து சிறப்பித்தனர்.

பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானது இலங்கை

Image
இருபதுக்கு இருபது உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை 16 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் அரையிறுதிப் போட்டில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் மஹேலவை தவிர வேறு எவரும் பெரிதாக பிரகாசிக்கவில்லை. இலங்கை அணி சார்பில் மஹேல ஜயவர்த்தன 42, திலகரத்ன தில்ஷான் 35, குமார் சங்கக்கார 18, ஜீவன் மென்டிஸ் 15, திஸர பெரேரா 11, ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 10 என ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் அஜ்மால், அப்ரிதி, ஹபீஸ், உமர் குல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை வீழ்த்தினார்.

இன்று கிழக்கு மாகாணசபையின் கன்னி அமர்வு!

Image
கிழக்கு மாகாணசபையின் கன்னி அமர்வு இன்று காலை திருகோணமலையிலுள்ள மாகாண சபை மகாநாட்டு மண்டபத்தில் சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றது. சபையின் செயலாளரினால் சபையில் ஆளுநரின் சபை கூட்டுவதற்கான கடிதம் வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சபையில் தவிசாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான தெரிவு கோரப்பட்டதையடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் சபை உறுப்பினர் ஆரியவதி கலப்பதியின் பெயரை முன்மொழிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினரும் அக்கட்சியின் சபைக் குழுத் தலைவருமான எம்.எம். ஜெமீல் வழிமொழிய சபை ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து பிரதித் தவிசாளர் தெரிவு செயலாளரினால் அறிவிக்கப்பட்ட போது மாகாணசபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரான எம்.எஸ்.சுபைரின் பெயர் முன்மொழியப்பட்டது. இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் வழிமொழிய சபை ஏகமானதாக ஏற்றுக்கொண்டது. இதேவேளை கட்சித்தலைவர்களின் கூட்டம் நடைபெறுவதையொட்டி 15 நிமிடம் சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் சபை கூடியது.