5000 மீனவர்களுடன் படகு மூலம் இந்தியா செல்ல டக்ளஸ் தீர்மானமாம் !
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக படகு மூலம் இந்தியா செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
இந்திய மீனவர்கள் வடமாகாண கடற்பரப்பில் அத்துமீறி நுழைவதாகவும் அவர்கள் கடல்வளங்களை அழிப்பதாகவும் வடமாகாண மீனவர்கள் தனக்கு எப்பொழுதும் முறைப்பாடு செய்கின்றனரெனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்திய மீனவர்கள் பல தடவைகள் வடகடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டதாகவும் சிலநேரங்களில் இரு நாட்டு மீனவர்களும் கடற்பரப்பில் மோதலில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக முதலில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு தந்தி அனுப்ப தான் திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த கட்ட நடவடிக்கையாக வடக்கு, பருத்தித்துறை, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளிலிருந்து 1,000 படகுகளில் 5,000 மீனவர்களுடன் இந்தியா செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். |
Comments
Post a Comment