தெற்காசிய உதைபந்தாட்ட விழா
தெற்காசிய உதைபந்தாட்ட விழா இன்று இந்தியாவின் புதுடில்லியில் ஸ்ரீ ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ஆரம்பமாகின்றது.
தெற்காசிய நாடுகள் அனைத்தும் பங்குகொள்ளும் இந்த உதைபந்தாட்ட விழாவில் 15 போட்டிகள் இடம்பெறஉள்ளதுடன் போட்டிகள் இம்மாதம் 11 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இன்று தொடக்கம் இப்போட்டிகள் பி.ப. 3.00 மணிக்கும் பி.ப. 6.00 மணிக்கும் ஆரம்பமாகும்.
இறுதியாக 2009 ஆம் ஆண்டில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட மாலைதீவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான போட்டியும் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானிற்கு இடையிலான போட்டியும் இன்று நடைபெறஉள்ளது.
இலங்கைக்கும் பூட்டானுக்கம் இடையிலான போட்டி நாளை நடைபெற உள்ளது. மேலும் அதிகமான பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போட்டியும் நாளை நடைபெற உள்ளது.
இந்தியாவின் மூன்றாவது பெரிய மைதானமான ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் சுமார் 60000 பார்வையாளர்களுக்கான ஆசன வசதிகள் காணப்படுகின்றன.
Comments
Post a Comment