வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ள துரைவந்தியமேடு கிராமத்திற்கு படகுச் சேவை!
அம்பாரை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக கல்முனை மாநகர சபை பிரிவிலுள்ள துரைவந்தியமேடு குடியேற்ற கிராமம் வெள்ளத்தில் மூழ்கி சூழப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொருட்டு இன்று கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் கே.லவநாதன், மாநகர முதல்வர் கலாநிதி.சிராஸ் மீராசாஹிப், ஆணையாளர் ஜே.லியாக்கத்தலி, நகர சபை உறுப்பினர் எம்.எச்.நபார் உட்பட அதிகாரிகள் பலரும் கடற்படை அதிகாரிகளும் அங்கு சென்றனர்.
அங்கு சென்ற அதிகாரிகள் அம்மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டதுடன், சமைத்த உணவையும் வழங்கினர். கல்முனை கிட்டங்கி வீதி தாம்போதியின் மேலாக போக்குவரத்து செய்ய முடியாதவாறு வெள்ளம் பாய்வதால் அக்குடியேற்ற கிராம மக்களின் போக்குவரத்திற்கென இராணுவத்தினர் இயந்திரப் படகு சேவையை ஆரம்பித்துள்ளனர்.
Comments
Post a Comment