சாய்ந்தமருது ஏ.ஆர்.எம்.பாடசாலை முன்பள்ளி சிரார்களின் கலை நிகழ்வும் வருடாந்த பரிசளிப்பு விழாவும்

சாய்ந்தமருது ஏ.ஆர்.எம்.பாடசாலை முன்பள்ளி சிரார்களின் கலை நிகழ்வும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய நூற்றாண்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
முன்பள்ளி அதிபர் எம்.எச்.றிபாயா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாகவும், கல்முனை வலய கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் கௌரவ அதிதியாகவும், சாய்ந்தமருது கோட்ட கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.முபாறக் மௌலவி மற்றும் கல்முனை கல்வி வலய முன்பள்ளி உதவி கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.சகாப் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் 
கலந்து கொண்டனர்.
இங்கு சிறுவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பரிசுகளும் வழங்கப்பட்டன.



Comments