சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான மாணவர்கள் ஆர்பாட்டத்தில்


இவ்வருடம் சம்மாந்துறையில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு புதிதாக அனுமதி பெற்ற மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தினார்கள் என்ற எதுவித ஆதாரமுமற்ற குற்றச்சாட்டின் பேரில் தென்னிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம்
வகுப்பு தடையை விதித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்குமாறும் கோரியும் இன்று நண்பகல் சம்மாந்துறையிலுள்ள வளாகத்திற்கு முன்பாக மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பல்கலைக்கழக மாணவர்களும் மாணவிகளும் பாதையோரத்தில் பதாதைகளை ஏந்திய வண்ணம் கோசம் எழுப்பியதோடு ஏனைய பீட மாணவர்களையும் தம்மிடம் இணைந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தனர்.




Comments

Popular posts from this blog

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்