Posts

Showing posts from March, 2011

உள்ளூராட்சித் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் 5ஆம் திகதி பாராளுமன்றம் வருகின்றது

Image
உள்ளூராட்சி தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார் மக்களுக்கு மேலும்பல நன்மைகளை செய்துகொடுக்கும் வகையிலும், ஏற்கனவே காணப்பட்ட சில குறைபாடுகளை நிவர்த்தி செய்தும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர் வரும் 5ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்றத்தில் இந்தத் திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்படும்.ஏற்கனவே இருந்த விருப்பு வாக்கு முறைமை சீர்ப்படுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக தொகுதி முறைமை கொண்டு வரப்படவுள்ளது. இதன் ஊடாக விருப்பு வாக்குகளினால் ஏற்படுகின்ற மோதல்கள் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார் விரிவாக உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தினால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என முஸ்லிம் அமைப்புகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட்ட பல அமைப்புகள் கடந்த வருடம் 12 மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் அந்த வழக்குகள் இருந்த நிலைய...

கல்முனை மாநகர ஆணையாளராக நியாஸ் நியமனம்

கல்முனை மாநகர ஆணையாளராக எம்.ஏ.எம். நியாஸ் நியமனம் செயப்பட்டுள்ளார்.  மூதுரை சேர்ந்த இவர் மூதூர் ,கிண்ணிய ,ஓட்டமாவடி  பிரதேச செயலாளராகவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதி ஆணையாளராகவும் பதவி வகித்த இலங்கை நிருவாக சேவை முதலாம் வகுப்பு அதிகாரியுமாவார்.

கல்முனையில் தபால் வாக்களிப்பு

Image
நடை பெறவுள்ள  உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் வாக்களிப்பு இன்று கல்முனை பிரதேசத்தில் நடை பெற்றது . கல்முனை பொலிஸ் நிலையத்தில்  நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா தலைமையில் வாக்களிப்பு இடம் பெற்றது 

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் அறிக்கை வெளியீடு

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் அறிக்கை வெளியீடு இன்று கல்முனையில் இடம் பெற்றற்றது. தமிழரசு கட்சி பொது செயலாளர் மாவை சேனாதி ராஜா தலைமையில் கல்முனை வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடை பெற்ற கூட்டத்தில் தமிழ் கூட்டமைப்பு எம்பிக்கள்  பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உள்ளூராட்சி சபை தேரலில் போட்டி இடும் பல வேட்பாளர்களும் கட்சி மூத்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கண்ணீர் அஞ்சலி

Image
கண்ணீர் அஞ்சலி   முன்னாள் கல்முனை உவெஸ்லி  உயர் தர  பாட சாலை அதிபர்  பா.வெங்கடாசலதிர்க்கு கல்லூரியில் நினைவு பேருரை நிகழ்த்தப்பட்டது. கல்லூரி அதிபர்  வீ.பிரபாகரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மாவை சேனாதி ராஜா எம்.பீ ,முன்னாள் அமைச்சர்  ஏ.ஆர்.மன்சூர் ,கிழக்கு மாகான சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ரசாக் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து  கொண்டனர்.