"மலரும் கிழக்கு" அம்பாறையில் கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி
கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டிலான கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி இம்முறை அம்பாறையில் இடம்பெறவுள்ளது, மலரும் கிழக்கு எனும் தொனிப்பொருளில் இடம் பெறவுள்ள இந்தக் கண்காட்சி நாளை ஞாயிற்றுக் கிழமை ( 10 ) ஆம் திகதி அம்பாறையில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது, இந்த கைத்தொழில் வர்த்தகக் கண்காட்சி 10,11 மற்றும் 12 ஆகிய மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ளது, இதற்கு முன்னர் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இந்த கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது, கௌரவ ஜனாதிபதி மற்றும் பிரதமரின் 2025 ஆம் ஆண்டுக்கான அடைவு இலக்கினை அடைவதற்கான பயணத்தில் கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பை அதிகரிக்கும் விதத்தில் இந்தக் கண்காட்சியின் உள்ளடக்கங்கள் அமையப் பெற்றுள்ளது கிழக்கு மாகாணத்தின் உற்பத்திப் பொருட்களின் சந்தை வாய்ப்பினை அதிகரித்தல் வர்த்தக மற்றும் கைத்தொழில் கண்காட்சியின் பிரதான நோக்காக அமைந்த...