Posts

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு இன நல்லிணக்கம் மற்றும் சமாதானத்துக்கான விருது

Image
உலக சமாதான தினத்தைக் கொண்டாடும் முகமாக  கல்முனை  வலையாக கல்வி அலுவலக சமாதானக் கல்விப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள  வலய சமாதான தின விழா  எதிர் வரும் திங்கட் கிழமை (17)  நிந்தவூர் அல் -மஷ்ஹர்  பெண்கள் பாடசாலையில் நடை பெறவுள்ளது . கல்முனை கல்வி வலயத்துக்கான  இன நல்லிணக்க மற்றும் சமாதான கல்வி அதிகாரி  எம்.ஏ.எம்.ரஸீன்  ஏற்பாடு   செய்துள்ள  நிகழ்வு  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல்  தலைமையில்  நடை பெறவுள்ளது. இந்த  நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் கிழக்குமாகாண கல்வித் பணிப்பாளர்  எம்.ரீ.அப்துல்  நிஸாம்  இன நல்லிணக்கம் மற்றும் சமாதானத்துக்கான  விருது  வழங்கி கெளரவிக்கப் படவுள்ளார் 

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 32 சமூக சேவையாளர்களுக்கு திருகோணமலையில் விருது வழங்கும் விழா

Image
மலையக  கலை கலாச்சார சங்கம் ஏற்பாடு  செய்துள்ள அண்ணல் மகாத்மா காந்தி  நினைவு தின விழா  நாளை திருகோணமலையில் நடை பெறவுள்ளது. இதன் போது  கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 16 பேருக்கு ரத்ன தீபம் விருதும் ,16 பேருக்கு  மகாத்மா காந்தி விருதும்  வழங்கப் படவுள்ளது. இதில் அம்பாறை மாவட்டத்தைப்  பிரதிநிதித்துவப் படுத்தி ஊடகத்துறை ,சமூகசேவை மற்றும் ஆசிரியர்  சேவை புரிந்த  நற்பிட்டிமுனையை சேர்ந்த  ஆறு பேருக்கு இரத்தின தீபம் விருது வழங்கப் படவுள்ளது. திருகோணமலை  சர்வோதய  அமைப்பின் முகாமைத்துவாளர் தேசாபிமானி விஸ்வகீர்த்தி  வேல்முருகு ஜீவராஜ் தலைமையில் இடம் பெறும் நிகழ்வில்16 பேருக்கு இரத்னதீபம் விருது வழங்கப் படவுள்ளது. ஒடடமாவடி பிரதேச செயலாளரும் ,பன்னூலாசிரியருமான எம்.எம்.நௌபல் தலைமையில் இடம் பெறும் நிகழ்வில் 16 பேருக்கு  மகாத்மா காந்தி விருதும்  வழங்கப் படவுள்ளது.   திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ண சிங்கத்துக்கு "தேசாபிமான விஷ்வாகீர்த்தி" விருது வழங்கி கெளரவிக்கப் படவுள்ளது.

புலமைப் பரீட்சையில் மருதமுனை அல் -ஹம்றாவில் 19 பேர் சித்தி

Image
இவ்வாண்டு நடை பெற்ற  தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில்  மருதமுனை  அல் -ஹம்றா  வித்தியாலயத்தில் 100 மாணவர்கள் தோற்றியதில்  19 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 70 புள்ளிகளுக்கு மேல் அதிக எண்ணிக்கையான  மாணவர்கள் பெற்றுள்ளனர் . கல்முனை முஸ்லிம்  கோட்டத்தில்  அதிகூடிய  182 புள்ளிகளைப் பெற்ற பாடசாலை என்ற பெருமையும் அல்  ஹம்றாவுக்கு  கிடைத்துள்ளதாக  பாடசாலையின்  அபிவிருத்திக்கு குழு செயலாளர் நளீம் எம்.பதூர்டீன் தெரிவித்தார் . மேலும்  இப்பாடசாலையின்    அபிவிருத்திக்கு குழு செயலாளர் நளீம் எம்.பதூர்டீன் ஆசிரியை மிஹ்றூனா ஆகியோரின்   புதல்வரான  ,     பதூர்டீன் மிஷால் அஹமட்  172 புள்ளிகளைப்  பெற்று சித்தியடைந்துள்ளார் . சித்தியடைந்த மாணவர்களுக்கும்  ,இப்பரீட்சைக்கு  தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் ,இவர்களை வழிப்படுத்தி புள்ளிகளால் புள்ளிகளாக்கிய  அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் தங்கள் கால நேரங்களை கல்விக்காக அர்ப...

மருதமுனை சுவேடோ ஸ்ரீ லங்காவின் வருடாந்த பரிசளிப்பு விழா 2016

Image
(முன்னோடிப் பரீட்சையில்   சித்தியடைந்த மருதமுனை அல் -ஹம்றா மாணவன்  பதூர்டீன் மிஷால் அஹமட் நினைவு சின்னம்  பெறுவதைக் காணலாம் ) இவ்வாண்டுக்கான  தரம்  5 புலமைப் பரிசில்  பரீட்சை   நடை பெறுவதற்கு முன்னர்  மருதமுனை  சமூக நலன்புரி அபிவிருத்தி  அமைப்பு (சுவேடோ  ஸ்ரீலங்கா ) நடாத்திய  முன்னோடிப் பரீட்சையில்  சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும்  வருடாந்த நிகழ்வு   அந்த அமைப்பினால் கடந்த 02.10.2016 ஞாயிற்றுக் கிழமை மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி  திறந்தவெளியரங்கில்  அமைப்பின் தலைவர்  எம்.ரீ.எம்.ஹாறூன்  தலைமையில் நடை பெற்றது. இந் நிகழ்வில்  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்  பிரதம அதிதியாகவும், சம்மாந்துறை  அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த  ஆதார வைத்திய சாலையின்  சத்திர சிகிச்சை நிபுணர் DR.A.W.M. சமீம் கெளரவ அதிதியாகவும்  மற்றும் கல்முனை மாநகர ஆணையாளர் ஜெ.லியாகத் அலி உட்பட  பல  அரசியல் பிரமுகர...

நற்பிட்டிமுனை புலமை சித்தி மாணவர்கள் இருவரையும் ஹலீம் கெளரவித்தார்

Image
நற்பிட்டிமுனை அல் அக்ஸா மகா வித்தியாலயத்திலிருந்து இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி தேர்வு செய்யப் பட்ட  பசில் றீமா (157 ) , லியாக்கத் லிபாஸ் (156 ) ஆகிய இரு மாணவர்களையும்   அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமுக சேவை அமைப்பின் தலைவரும் ,அமைச்சர் றிசாத் பதியுதீனின்  அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான  சி.எம்.ஹலீம்   பாராட்டி கெளரவித்து  பணப் பரிசும் வழங்கினார். கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ.கையூம் தலைமையில் நடை பெட்ரா நிகழ்வொன்றில்  கலந்து கொண்டு இந்தக் கெளரவிப்பை   மாணவர்களுக்கு  வழங்கினார் .  இந்த  கெள ரவிப்பு  இடம் பெற்ற  சந்தர்ப்பத்தில்  கோட்டக் கல்விப் பணிப்பாளர்  ஏ.எல்.சக்காப் ,உட்பட  பலர் கலந்து கொண்டனர் 

கல்முனை வலயக் கல்வி அலுவலக வாணி விழா இனிதாக நிறைவு

Image
கல்முனை வலயக் கல்வி அலுவலக  வாணி விழா   இன்று காலை பிரதிக் கல்விப்  பணிப்பாளர் வீ.மயில்வாகனம் தலைமையில் நடை பெற்ற  போது  நிகழ்வில் பிரதம அதிதியாக வலையாக கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்  கலந்து கொண்டார் .

தேசிய தலைமைக்கு ஹரீஸ் தகுதியானவர் கல்முனையில் தயாசிறி ஜயசேகர புகழாரம்

Image
நானும் பிரதி அமைச்சர் ஹரீஸும்  ஒன்று பட்டு செயற்படுவது போன்று கல்முனை மக்களும்  பிரதி அமைச்சர்  ஹரீஸுக்கு உங்களின் சக்தி ,பலத்தைக் கொடுத்து  தேசிய தலைவராக மாற்ற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர  கல்முனை மக்களைக் கேட்டுக் கொண்டார் .  விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஒதுக்கீட்டில் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானம் சகல வசதிகளுடன் கூடிய மைதானமாக அபிவிருத்தி செய்யும் அபிவிருத்தி அங்குரார்ப்பண விழா நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை பெருந்திரளான மக்கள் பங்குபற்றலுடன் கோலாகலமான ஏற்பாட்டுடன்   இடம்பெற்றது. விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார். சந்தாங்கேணி விளையாட்டு மைதானம் சகல வசதிகளுடன் கூடிய உள்ளக அரங்கு, நீச்சல் தடாகம், நவீனமான முறையிலான மெய்வல்லுனருக்கான ஓடுபாதை என்பன நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் பார...