தேசிய தலைமைக்கு ஹரீஸ் தகுதியானவர் கல்முனையில் தயாசிறி ஜயசேகர புகழாரம்


நானும் பிரதி அமைச்சர் ஹரீஸும்  ஒன்று பட்டு செயற்படுவது போன்று கல்முனை மக்களும்  பிரதி அமைச்சர்  ஹரீஸுக்கு உங்களின் சக்தி ,பலத்தைக் கொடுத்து  தேசிய தலைவராக மாற்ற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர  கல்முனை மக்களைக் கேட்டுக் கொண்டார் . 

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஒதுக்கீட்டில் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானம் சகல வசதிகளுடன் கூடிய மைதானமாக அபிவிருத்தி செய்யும் அபிவிருத்தி அங்குரார்ப்பண விழா நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை பெருந்திரளான மக்கள் பங்குபற்றலுடன் கோலாகலமான ஏற்பாட்டுடன்  இடம்பெற்றது.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
சந்தாங்கேணி விளையாட்டு மைதானம் சகல வசதிகளுடன் கூடிய உள்ளக அரங்கு, நீச்சல் தடாகம், நவீனமான முறையிலான மெய்வல்லுனருக்கான ஓடுபாதை என்பன நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் டீ.எம்.ஆர்.பி.திசாநாயக்க, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.ஈ.ஆர்.ரீ.எம்.எஸ்.பி.பண்டார,கல்முனை வலயக்  கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ,  பிரதேச செயலாளர்களான எம்.எச்.கனி, ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, கல்முனை முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், முன்னாள் தவிசாளர்களான எம்.ஏ.அன்சில், எம்.எச்.எம்.தாஹிர் உள்ளிட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள், பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்








Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்